பக்கம் எண் :

400பாரதம்ஆதி பருவம்

வந்து-, இரட்டை வரி சிலையால் பஞ்சவண்ணம் மகரதோரணம் நாட்டி -
இரட்டையாகவிளங்குகிறநீண்ட இந்திரவில்லின்தோற்றத்தால் ஐவகை
நிறங்களையுடையமகரதோரணங்களைக்கட்டி நிறுத்தி, வயங்கும் மின்னால் முந்துற
தீபம்உம் எடுத்து -விளங்குகிற மின்னல்களினால் முற்பட விளக்குகளையும் ஏந்தி,
தாரை முத்தால்முழுபொரி சிந்தின - தாரையாகச்சொரியும் மழைத்துளிகளினால்
முழுப்பொரிகளையுஞ்சிந்தின; அம்மா - ஆச்சரியம்! (எ-று.)

     நீலநிறமான மேகங்கள் வானத்தில் இடைவிடாதுபரவி அவ்விடத்தை
மறைத்ததையே 'நீலத்தால் விதானமாக்கி' என்றார். பஞ்சவர்ணம் - வெண்மை,
கருமை,செம்மை, பொன்மை, பசுமை என்பன. மகரதோரணம் -
சுறாமீன்வடிவமையத்தூக்குந்தோரணம். இந்திரவில்லில் பலவகைநிறங்களும்
இருத்தல்பற்றி, 'சிலையாற் பஞ்சவண்ணமகர தோரணம் நாட்டி' என்றார்.
தீபமேந்துதல்- அஷ்டமங்கலத்துள் ஒன்று. நெற்பொரி சிந்துதலும், மணத்துக்கு
உரியது. முழுப்பொரி- முரிவில்லாதபொரி. உருவகத்தை யங்கமாகக்
கொண்டுவந்த தற்குறிப்பேற்றவணி.                             (682)

52.- அருச்சுனன்  கண்ணனை நினைக்க, அப்பெருமான் அங்குத்
தோன்றுதல்.

யாங்கருதிவருங்கருமமுடிப்பானெண்ணிலிராமன்முதல்யதுகுலத்
                                தோரிசையாரென்று,
பாங்குடனேதனக்குயிராந்துளபமௌலிப்பரந்தாமன்றனை
                          நினைத்தான் பார்த்தனாகப்,
பூங்கமலமலரோடையனையான்றானும்பொன்னெடுந்தேர்ப்பாகனு
                                  மேயாகப்போந்து,
நீங்கரியநண்பினனாய்நெடுநாணீங்குநேயத்தோனினைவின்
                                 வழிநேர்பட்டானே.

     (இ -ள்.) 'எண்ணில் - ஆலோசிக்குமிடத்து, யாம் கருதி வரும் கருமம்
முடிப்பான் - நாம் நினைத்துவந்த காரியத்தை நிறைவேற்றுதற்கு, இராமன் முதல்
யதுகுலத்தோர் இசையார் - பலராமன் முதலிய யதுவமிசத்தரசர்கள்
உடன்படார்', என்று- என்று ஆலோசித்து, பார்த்தன் - அருச்சுனன்,
பாங்குடனே -உரிமையுடனே, தனக்கு உயிர் ஆம் துளபம் மௌலி பரந்தாமன்
தனை நினைந்தான்ஆக - தனக்கு உயிர்போன்றவனான
திருத்துழாய்மாலையைத்தரித்த முடியையுடையஸ்ரீகிருஷ்ணனை நினைத்தானாக, பூ
கமலம் மலர் ஓடை  அனையான்-பொலிவுள்ளதாமரைமலரோடையைப்
போன்றவனான அப்பெருமான், தான்உம் பொன் நெடுந் தேர்பாகன் உம் ஏ ஆக
போந்து - தானும்பொன்மயமானபெரிய (தனது) தேரைச்செலுத்துகிற சாரதியுமேயாக
(ஏகாந்தமாய்ப்) புறப்பட்டு, நீங்கு அரிய நண்பினன் ஆய்நெடு நாள் நீங்கும்
நேயத்தோன் நினைவின்வழிநேர்பட்டான் - பிரிதற்கு அரியநண்பனாய்
பலநாளாக (த் தன்னை)ப்பிரிந்திருந்த அன்புடையோனான அருச்சுனன்
நினைத்தபடியே அவனெதிரில் வந்து தோன்றினான்; (எ-று.)

     பரந்தாமன் - எல்லா ஒளிகளிலும் மேம்பட்டஒளியையுடையவ னென்றும்,
எல்லாஇடங்களிலும் மேலான இடத்தை யுடையவனென்றும் பொருள்படும்.
திருக்கண்கள் திருக்கைகள் திருவடிகள்