பக்கம் எண் :

402பாரதம்ஆதி பருவம்

வதகமலையிலே, மாதவனது ஏவலினால் - க்ருஷ்ணனுடையகட்டளையினாலே,
மழைக்காலத்து வாசவற்கு விழா அயர்வான் - மழைக்காலத்திலே செய்யப்படுகிற
இந்திரபூசையைச் செய்யும்பொருட்டு, வந்தகாலை - வந்தபோது,- யாதவரில் -
யதுகுலத்தாரிலும், போசரில் - போசகுலத்தாரிலும், மற்றுஉள்ள வேந்தர் -
மற்றுமுள்ளவேந்தரிலுமுள்ள, யாவர்உம் - எல்லோரும், சூழ்வர - சூழ்ந்திருக்க,
நறுந்தார் இராமன் - நறுமணமுள்ள மாலையையணிந்த பலராமன், வந்தான்-: சூது
அடர் பசு இளங் கொங்கை பச்சை மேனி சுபத்திரைஉம் - சூதாடுகருவியை
வெல்லுகின்ற பசிய இளைய தனங்களையும் பசிய உடலையுமுடைய சுபத்திரையும்,
தோழியர்கள் சூழ - தோழிமார்கள் சூழ, வந்தாள் - (அங்கே) வந்தாள்; (எ -று.)

     அருச்சுனன் சுபத்திரையை மணத்தல் எளிதில் நிகழ்வதற்கு ஸ்ரீகிருஷ்ணன்
இந்திரவிழா என்ற ஒருவியாஜம்வைத்து இங்ஙன் யாவரையும் கூடுமாறு
ஏவினனென்க.                                              (685)

55.- அனைவரும் அருச்சுனசன்னியாசியை வணங்கின பின்பு கண்ணன்
வந்து வணங்குதல்.

முக்கோலுங்கமண்டலமுஞ்செங்கற்றூசு முந்நூலுஞ்சிகையும்
                        மாய்முதிர்ந்து தோன்றும்,
அக்கோலமனைவருங்கைதொழுதுநோக்கியருணலம்
                பெற்றகன்றதற்பி னனைத்துலோகத்து,
எக்கோலயோனிகட்குமுயிராய்த்தோற்ற மீரைந்தாய்ப்பாற்
                           கடலினிடையேவைகும்,
மைக்கோலமுகில்வண்ணன்றானுமெய்தி மனவணக்கம்
                      புரிவோனைவணங்கினானே.

     (இ-ள்.) முக்கோல்உம் - திரிதண்டமும், கமண்டலம்உம் - ஜலபாத்திரமும்,
செங்கல் தூசுஉம் - காவிவஸ்திரமும், முந்நூல்உம் - பூணூலும், சிகைஉம் -
குடுமியும்,(ஆகிய வைஷ்ணவசன்னியாசிகளுக்கு உரிய ஐந்து அடையாளங்களும்),
ஆய் -பொருந்தி, முதிர்ந்து தோன்றும் - பூர்ணமாய் விளங்குகிற, அ கோலம் -
அந்தத்துறவிவடிவத்தை, அனைவர்உம் -(கீழ்ச்சொன்ன பலராமன் முதலியோர்)
எல்லோரும்,நோக்கி - பார்த்து [தரிசித்து], கைதொழுது - கைகூப்பிநமஸ்கரித்து,
அருள் நலம்பெற்று - (அச்சன்னியாசியினுடைய) கருணையாகிய நல்ல
அநுக்கிரகத்தைப் பெற்று,அகன்ற தன் பின் - நீங்கின பின்பு, அனைத்து
லோகத்து - சகலலோகங்களிலுமுள்ள,எக் கோலம் யோனிகட்கும்உம் -
பலவகைவடிவமுள்ள எல்லாப்பிறப்புக்களிலும்வாழ்கிற உயிர்களனைத்துக்கும்,
உயிர் ஆய் - உயிராகி, தோற்றம் ஈர்ஐந்து ஆய் -பத்துவகைப்பிறப்புக்கள்
கொண்டு, பாற்கடலின் இடையே வைகும் - திருப்பாற்கடலின் நடுவிலே
(வியூகமூர்த்தியாய்) எழுந்தருளியிருக்கிற, மை கோலம் முகில்வண்ணன்
தான்உம் -கருநிறமான அழகிய மேகம்போன்ற திருமேனி நிறத்தையுடையவனான
ஸ்ரீகிருஷ்ணனும், எய்தி - அருகில் வந்து, மனவணக்கம் புரிவோனை
வணங்கினான் -(தன்னை) மனத்தால்வணங்குதல்செய்பவபனான அருச்சுனனை
(த்தான்காயத்தால் )வணங்கினான்; (எ-று.)

     முக்கோலும் கமண்டலமும் செங்கல்தூசும் முந்நூலும்சிகையும் என்ற இவை
'துறவிகள் பஞ்சமுத்திரை' எனப்படும்; அங்கிரா