வென்னும் முனிவர் கூறின யதிலக்ஷணம் இத்தன்மைத்தே: வட மொழி மகாபாரதத்திலும்இங்ஙனமே யதிலக்ஷணம் கூறப்பட்டுள்ளது. 'தோற்றமீரைந்து' என்றது - மத்ஸயம்,கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், தசரதராமன், பலராமன்,கிருஷ்ணன், கல்கி என்ற தசாவதாரங்களை யுணர்த்தும். கர்மவசத்தால்ஜீவாத்மாக்களுக்கு நேர்கிற ஜந்மங்கள் போலன்றி இவ்வவதாரங்கள் பரமாத்மாவினால்துஷ்டநிக்கிரகசிஷ்டபரிபாலனத்தின் பொருட்டு இச்சாமாத்திரத்தாற் கொள்ளப்படுகின்றன வென்பதனை யறிக. திருமாலுக்கு மற்றும் பற்பல அவதாரங்கள் நூல்களிற் கூறப்படினும் இப்பத்துமே முக்கியவவதாரங்களாமென உணர்க. திருப்பாற்கடலி லெழுந்தருளியிருக்கிற வியூகமூர்த்திகள் - வாசுதேவன், சங்கர்ஷணன்,ப்ரத்யும்நன், அநிருத்தன் என நான்காம். 56- இதுவும், அடுத்த கவியும் - குளகம்; கண்ணன் அருச்சுனனுக்குச் சூழ்ச்சிசொல்லிச் சுபத்திரையை அம்முனிவனுக்குப் பணிவிடை புரியுமாறு பணித்தல். துன்னியிருவருமொருப்பட்டிருந்தகாலைச் சுபத்திரையைத்தடங் குன்றின் சூழலோர்சார், மின்னியபைம்புயலினெழிலிரேகைபோலவெளிப்படலுமெய்ப்புளக மேன்மேலேறிக், கன்னியிளந்தனிக்கடம்புமலர்ந்ததென்னக் கண்டவிழியிமையாத காட்சிகாணா, மின்னியமாதவத்தோனைமந்தமூரன் மாதவன்மைத் துனமையினான் மகிழ்ச்சிகூர்ந்தே. |
(இ-ள்.) இருவர்உம் - (அருச்சுனன் கிருஷ்ணன் என்ற) இரண்டுபேரும், துன்னி- சந்தித்து, ஒருப்பட்டு - (மனம்) ஒருமைப்பட்டு, இருந்தகாலை - (ஏகாந்தத்தில்)இருந்தபொழுது,- சுபத்திரை-, அ தட குன்றின் சூழல் ஓர்சார் - பெரிய அந்த ரைவதகமலையின் சாரலில் ஓரிடத்தில், பைம் புயலின் மின்னிய எழில் இரேகைபோலவெளிப்படலும் - காளமேகத்தில் மின்னிய (மின்னலின்) அழகியதோற்றம்போலத்தோன்றியவளவில், (அருச்சுனன்), மெய் மேல்மேல் புளகம்ஏறி- உடம்பு மேல்மேல் மிகுதியாக மயிர்ச் சிலிர்ப்புகொள்ளப்பெற்று, கன்னி இளந் தனிகடம்பு மலர்ந்தது என்ன - மிகவும் இளமையான ஒருகடப்பமரம் மலர்ந்தாற்போல,கண்ட விழி இமையாத - (அவளைப்) பார்த்த கண்கள் இமையாதபடி யிருக்கிற, காட்சி- தோற்றத்தை, காணா- கண்டு,- மந்தம் மூரல் மாதவன் - புன்சிரிப்பையுடையனானகண்ணபிரான், மைத்துனமையினால் - (தனக்கு அவன்) மைத்துனனாகும்முறைமையினால், மகிழ்ச்சிகூர்ந்து - (அவன்விஷயத்தில்) மகிழ்ச்சி மிகுந்து, மன்னியமா தவத்தோனை - பொருந்திய சிறந்த தவவேடத்தையுடையனானஅவ்வருச்சுனனைநோக்கி,- (எ-று.)- 'கூறி' (57) எனத்தொடரும். ஸு பத்ரா - மங்களகரமான நல் லிலக்கணமமைந்தவ ளென்க. மைத்துனமை - கண்ணனுக்கு அருச்சுனன் அத்தைமகனாகும் உரிமை; அருச்சுனன் கண்ணனது தந்தையான வசுதேவனுக்கு உடன்பிறந்தவளான குந்தியின் குமாரனாதல் காண்க. அருச்சுனன் கொண்டுள்ள கபடசன்னியாசிவேஷத்தின்நிலைமையைத் திருவுள்ளம்பற்றிக் கண்ணபிரான் புன்முறுவல் கொண்டனன். (687) |