பக்கம் எண் :

404பாரதம்ஆதி பருவம்

57.-அடிகடிரு வுளத்தெண்ண மெம்ம னோர்க ளறியினிசை
                          யலர்பலரிங்கறிவுறாமற்,
கடியயர்வுற் றும்பதிகொண் டடைகவென்றுங்காவலர்க்குக்
                       கடனென்றுங் கசியக் கூறிக்,
கொடியிடைவெங் களபமுலைக் கன்னி மானைக் கூயணங்கே
                  மெய்ம்மையுறக் கொண்டகோலப்,
படிவமுனிக் கிருபருவம் பணித்த வேவல் பரிவுடனீ புரி
                        யென்று பணித்திட்டானே.

     (இ-ள்.) 'அடிகள் திருஉளத்து எண்ணம் - சுவாமிகளுடைய திருவுள்ளக்
கருத்தை, எம்மனோர்கள் அறியின் - எம்மவர்கள் அறிந்தால், பலர் இசையலர் -
(அதற்குப்) பலர் இணங்கமாட்டார்: (ஆதலால்), இங்கு - இவ்விடத்தில், அறிவு
உறாமல்(அவர்கள்) அறியாதபடி [ரகசியமாக], கடி அயர்வுஉற்று - (சுபத்திரையை)
விவாகஞ்செய்துகொண்டு, உம் பதி கொண்டு அடைக - உமது நகரத்துக்கு
(அவளை)உடன் அழைத்துக்கொண்டு சென்று சேர்வீராக', என்றும்-, காவலர்க்கு
கடன்என்றும்- '(இங்ஙனம் பலருமறியாதபடி ஒரு கன்னிகையை மணந்து
உடன்கொண்டு செல்லுதல்)அரசர்கட்கு முறைமையே' என்றும், கசியகூறி -
(அவ்வருச்சுனது மனம்) மகிழும்படி(ஏகாந்தத்திற்) சொல்லி,- கொடி இடைவெம்
களபம்முலைகன்னிமானைகூய் -பூங்கொடிபோன்ற [நுண்ணிய] இடையையும்
விரும்பப்படுங் கலவைச்சந்தனமணிந்ததனங்களையுமுடைய இளமையான
மான்போன்ற சுபத்திரையையழைத்து, 'அணங்கே - பெண்ணே! மெய்ம்மை உற
கொண்ட கோலம் படிவம்முனிக்கு - உண்மையாகக்கொண்ட அழகிய
சன்னியாசிவேஷத்தையுடையஇம்முனிவனுக்கு, நீ-, இரு பருவம் - நான்கு
மாசகாலம், பரிவுடன் -அன்போடு,பணித்த ஏவல் புரி - நியமித்த குற்றேவல்களைச்
செய்வாய்,' என்றுபணித்திட்டான்-என்று கட்டளையிட்டான்; (எ-று.)

     சுபத்திரையை துரியோதனனுக்கு மணஞ்செய்விக்கவேண்டு மென்பது
மூத்தவனான பலராமனது உத்தேச மாதலால், 'அடிகள் திருவுளத்து எண்ணம்
எம்மனோர்கள் அறியின் இசையலர்பலர்' என்றான். கண்ணனுக்கு
அருச்சுனன்பக்கலுள்ள சினேகவாற் சலியம் விளங்க 'கசியக்கூறி ' என்றார்.
ஒருநாளுக்கு மேல் ஓர் ஊரில் தங்காமல்கிராமைகராத்திரமாய்த்திரியும்
முறைமையையுடையரான சன்னியாசிகள் மழைக்காலமாகிய நான்கு மாசங்களில்
மாத்திரம் ஒரேயிடத்தில் வசித்திருக்கலா மென்பது, நூற்கொள்கை; அந்தச்
சாதுர்மாஸ்யஸங்கல்பவிதிப்படி இத்துறவி இப்பொழுது இங்கு நான்குமாசகாலம்
இருப்பா னென்றுகொண்டு, 'இருபருவம்' என்றான். பருவம், இருது என்ன -
ஒருபொருளன.                                               (688)

வேறு.

58.- சுபத்திரை அருச்சுனனுடைய கள்ளவேடத்தை
யறியாமை.   

உள்ள டங்கிய காமவெங் கனல்புறத் தோடிக்
கொள்ளை கொண்டுடன் மறைத்தெனக் கூறையுந் தானும்
மெள்ள வந்துதன் கடிமனை மேவிய வேடக்
கள்ள வஞ்சனை யறிந்திலள் கற்புடைக் கன்னி.