மாக, வழிபட- (க்ருஷ்ணன்மொழிப்படியே) வழிபாடு செய்யாநிற்கையில்,- 'இற்றை மா மதன் பூசலுக்கு - இப்போது கொடிய மன்மதன் விளைக்கின்ற போருக்கு, என் செய்வோம் - என்னசெய்யக்கடவோம்?' என்று என்று - என்றுசிந்தைகொண்டு, (அருச்சுனன்),- ஒற்றை அன்றில் போல் - பேடையைப்பிரிந்திருக்கும் ஆணன்றில்போல, மெய் மெலிந்து - உடல்தளர்ச்சியுற்று, உள்ளம் உம் உடைந்தான் -மனமும் வருந்தினான;்(எ -று.) அன்றிற்பறவையின் ஆண் தன் பேடையைக் கணப்போது பிரிந்தாலும் அத்துயரத்தைப்பொறாமல் இரண்டு மூன்றுதரம் கத்திக்கூவி, பின்பும் அத்துணையைக்கூடாவிடில்உடனேயிறந்துபடும். (693) 63.- சில அடையாளங்களாற் சுபத்திரை அச்சன்னியாசியைக் குறித்துச் சங்கித்தல். நல்லிலக்கணம்பலவுடை யவயவநலத்தால் வில்லிலக்கணத்தழும்புடைக் கரங்களான்மிகவும் தொல்லிலக்கணம்பலவுடைச் சுபத்திரையொருதன் இல்லிலக்கணவனையிவன் யார்கொலென்றயிர்த்தாள். |
(இ-ள்.) தொல் இலக்கணம் பல உடை சுபத்திரை - (நூல்களிற் கூறப்பட்டுத்) தொன்றுதொட்டுவருகிற உத்தமஸ்திரீலக்ஷணங்கள் பலவற்றையுமுடைய சுபத்திரையானவள்,- நல் இலக்கணம் பல உடை அவயவம் நலத்தால் - (ஆடவர்க்குஉரிய) உத்தமலக்ஷணங்கள் பலவற்றையுமுடைய (அத்துறவியினது) உறுப்புக்களின் அழகினாலும்,இலக்கணம் வில் தழும்பு உடை கரங்களால் - நல்லிலக்கணமமைந்த வில்லின் தழும்புகளைக்கொண்ட கைகளினாலும், ஒரு தன் இல்லில் அ கணவனை - ஒப்பற்ற தன் வீட்டில் தனியனாயிருக்கிற (தனக்குக்)கணவனாகும் அவனை, இவன் யார் கொல் என்று மிகவும் அயிர்த்தாள்- "இவன்யாரோ" என்று மிகவும் சந்தேகித்தாள்; (எ-று.) வில்தழும்பு - சீவகசிந்தாமணியில் தடமித்தனென்னும் அரசன் சீவகனது கைகளின் வில்தழும்புகண்டே அவனை விற்றொழிலில்வல்லவ னென்று நன்குமதித்தமை கூறுமிடத்து 'முன்கைச்சந்துக்கும் முழங்கைக்கும் இடையில் முன்கைச்சந்தைச் சேர்ந்து உத்தமவிலக்கணத்தையுடைய கைவிரல்களைந்துக்கு அருகேயானைத் தோலிற் சுண்ணாம்பையுரைத்ததுபோலக் காழ்ப்பேறி வெண்ணிறங்கொண்டுசிறுமீன்வடிவமாய்த் தோன்றுகிற மூன்று விரல் நீளமுள்ள சிலைத்தழும்பு' என்றதுமுதலிய காண்க. (694) 64.- இரண்டுகவிகள் - சுபத்திரைக்கும் அருச்சுனனுக்கும் நடந்த சம்பாஷணையைக் கூறும். மங்கையங்கொருநாளவன் மலரடிவணங்கி எங்கும்வண்புனலாடுதற் கேகினீரெனினும் தங்கும்மாநகர்யாதெனத் தபோதனன்றானும் எங்கண்மாநகரிந்திரப்பிரத்தமென்றிசைத்தான். |
(இ-ள்.) மங்கை - மங்கைப்பருவமுடையளான சுபத்திரை, அங்கு - அவ்விடத்தில், ஒருநாள்,- அவன் மலர் அடி வணங்கி- |