அம்முனிவனுடைய தாமரைமலர்போன்ற பாதங்களை நமஸ்கரித்து, வண் புனல் ஆடுதற்கு எங்குஉம் ஏகினீர் எனின்உம் - சிறந்த புண்ணியதீர்த்தங்களில் நீராடுதற்கு எல்லாவிடங்களிலும் சென்றீராயினும், தங்கும் மா நகர் யாது - தேவரீர் எழுந்தருளி யிருக்கும் சிறந்தநகரம் எது? என - என்றுவினாவ,-தபோதனன் தான்உம் - அம்முனிவனும், எங்கள் மா நகர் இந்திரப்பிரத்தம் என்ற இசைத்தான் - எமது சிறந்தநகரம் இந்திரப்பிரத்த மென்று விடைகூறினான்; (எ-று.) மங்கைப்பருவத்திற்கு வயதெல்லை- பன்னிரண்டு பதின் மூன்று பிராயங்கள். தபோதநன் - வடசொல்; தவத்தை தனமாக வுடையவன்; அனைவரும் செல்வத்தை விரும்பி ஈட்டிப் பாதுகாத்தல் போலத் தவத்தை விரும்பியீட்டிப் பாதுகாப்பவன். (695) 65. | என்றகாலையிலிந்திரன் மதலையையொழிய நின்றபேரையந்நெடுங்கணாள் வினவலுநிருபன் வென்றிமன்னவர்யாரையும் வினவினைமின்னே மன்றலந்தொடைவிசயனை மறந்ததென்னென்றான். |
(இ-ள்.) என்றகாலையில் - என்று (முனிவன்) விடைகூறிய பொழுது,- அ நெடுங்கணாள் - நீண்டகண்களையுடையளான அச்சுபத்திரை, இந்திரன் மதலையை ஒழியநின்ற பேரை வினவலும் - அருச்சுனனைத்தவிர மற்றைத்தருமன் முதலியோரைக்குறித்து (யோகக்ஷேமம்) விசாரித்தவளவிலே,- நிருபன் - அருச்சுனன்.- (அவளை நோக்கி), 'மின்னே -மின்னல்போன்றவளே! வென்றி மன்னவர்யாரைஉம் வினவினை - வெற்றியையுடைய அரசரெல்லோரையுங் குறித்து வினாவினாய்; மன்றல் அம் தொடைவிசயனை மறந்ததுஎன் - வாசனையுள்ள அழகியமலர்மாலையையுடைய அருச்சுனனை (நீ) மறந்ததுயாதுகாரணத்தால்?' என்றான்- என்றுவினாவினான். (696) 66.- இதுவும் அடுத்த கவியும் - தோழிவார்த்தை. யாழின்மென்மொழியெங்கணா யகியிவளவனுக்கு ஊழினன்புடைமன்றலுக் குரியளாதலினால் வாழிவெஞ்சிலைவிசயனை மறைத்தனளென்னாத் தோழிநின்றவளொருத்திகை தொழுதனள்சொன்னாள். |
(இ-ள்.) நின்றவள் தோழி ஒருத்தி - (அப்பொழுது அங்கு) நின்ற சுபத்திரையின் தோழியொருத்தி, கை தொழுதனள் - (துறவியைக்) கைகூப்பி வணங்கி,- 'யாழின் மொல்மொழி எங்கள் நாயகி இவள் - வீணையினிசைபோல மெல்லிய [இனிய]சொற்களையுடைய எங்கள் தலைவியாகிய இவள், அவனுக்கு - அவ்வருச்சுனனக்கு,ஊழின் அன்பு உடை மன்றலுக்கு உரியள் ஆதலினால் - முறைப்படி யமைந்தஅன்புடைய விவாகத்துக்கு உரியவளாதலால், வெம் சிலை விசயனை மறைத்தனள் -கொடியவில்லையுடைய அருச்சுனனைக்குறித்து (வினவாமல்) மறைத்தாள்,' என்னா -என்று, சோன்னாள்-; (எ-று.) இவள் அருச்சுனனை மணஞ்செய்துகொள்ளும் விருப்புடைய ளாதலால், நாணம்பற்றி, அவனை வினாவில ளென்றனளென்பதாம். வாழி - அசை. (697) |