பக்கம் எண் :

அருச்சுனன்றீர்த்தயாத்திரைச் சருக்கம்409

67.பங்குனன்பெருந்தீர்த்தநீர் படிவதற்காகப்
பொங்குதெண்டிரைப்புவிவலம் போந்தனனென்றே
அங்குநின்றுவந்தவருரைத்தன ரவனிப்போது
எங்குளானெனத்தெரியுமோ வடிகளுக்கென்றாள்.

     (இ-ள்.) 'பங்குனன் - அருச்சுனன், பெருந் தீர்த்தம்நீர் படிவதற்கு ஆக -
சிறந்தபுண்ணியதீர்த்தங்களில் நீராடும்பொருட்டு, பொங்கு தெள் திரை புவி வலம்
போந்தனன்- பொங்குகிற தெளிவான அலைகளையுடைய கடலினாற் சூழப்பட்ட
பூமியிற்பிரதக்ஷிணமாகச் சென்றனன்', என்று-, அங்கு நின்று வந்தவர்
உரைத்தனர் -அவ்விந்திரப்பிரத்தநகரத்தினின்று வந்தவர்கள் சொன்னார்கள்;
அவன் இப்போது எங்குஉளான் என அடிகளுக்கு தெரியும்ஓ - அவன் இப்பொழுது
எவ்விடத்திலிருக்கிறானென்று சுவாமிகளுக்குத் தெரியுமோ? என்றாள்-என்றும்
வினாவினாள்;

   சங்கித்த சுபத்திரையே வினவியதாகப் பாலபாரத்தி லுள்ளது. 'என' என்ற
செயவெனெச்சத்துக்கு 'என்பது' எனத் தொழிற்பெயராகப் பொருள் கொண்டு,
அதனை 'தெரியுமோ' என்ற வினைமுற்றுக்கு எழுவாயாக்குக.           (698)

68.- வினவிய பாங்கிக்கு அருச்சுனன் கூறிய விடை.

பாங்கிநல்லுரைதன்செவிப் படுதலும்விசயன்
தீங்கிலன்பலதிசைகளுஞ் சென்றுநீராடிக்
கோங்கிளம்கொழுமுகைநிகர் கொங்கையாள்பொருட்டால்
ஈங்குவந்துநும்மில்லிடை யிருந்தனனென்றான்.

     (இ-ள்.) பாங்கி நல் உரை - தோழிகூறிய நல்லவார்த்தை, தன் செவி
படுதலும் -தன்காதிற் பட்டவுடனே, விசயன்- அருச்சுனன்,- பல திசைகள்உம்
சென்று நீர் ஆடி- பலதிக்குக்களிலும் சென்று புண்ணிய தீர்த்தங்களில்
ஸ்நாநஞ்செய்து, தீங்குஇலன் -யாதோரூறுபாடும் இன்றி இனிதுவாழ்பவனாகி,
கோங்கு இளங் கொழு முகை நிகர்கொங்கையாள் பொருட்டால் - கோங்கினது
இளைய வளப்பமுள்ள அரும்பையொத்ததனங்களையுடையாளின் [சுபத்திரையின்]
பொருட்டாக, ஈங்குவந்து -இந்தப்பதியிலேவந்து, நும் இல்லிடை -
உம்முடையவீட்டில்தானே, இருந்தனன்-, என்றான் - என்று உத்தரமளித்தான்;
(எ-று.)

     தன்னை இன்னானென்று தெரிவித்தற்கு ஏற்றதாயிருந்ததனால் 'நல்லுரை'
என்றார். தன்னைப்படர்க்கையாற் கூறி அருச்சுனன் தெரிவித்தா னென்க.     (699)

69.- அந்தச்சொல்லால் யதியை அருச்சுனனேயென்று
அறிந்து சுபத்திரை காமக்குறிப்புக் கொள்ளுதல்.

யதியுரைத்தசொற்கேட்டலும் யாதவிநுதல்வாண்
மதிவியர்த்ததுதுடித்தது குமுதவாய்மலரும்
புதியகச்சணிகுரும்பைக ளரும்பினபுளகம்
பதியிடத்தரிவையர்க்குள மாகுலம்படாதோ.