சிற்றிடைப்பெருங்கொங்கையுந் தம்முனைத்தியான முற்றமுன்னினளிருவரு முன்முன்வந்துற்றார். |
(இ-ள்.) உற்ற - பொருந்திய, கங்குலில் - அவ்விரவில், யாவர் உம்-, தணந்த ஆறு - வேறுகாரணத்தாற் சென்றிட்டவகையை, உணர்ந்து-, பெரியோன் - பெருமையுள்ள அருச்சுனன், பெற்ற தன்பெரும் பிதாவினை முன்னினன் - (தன்னைப்)பெற்ற பெருமையுள்ள பிதாவாகிய இந்திரனை நினைந்தான்; சிறு இடை பெருங்கொங்கைஉம் - சிறிய இடையையும் பெரியதனங்களையுமுடையளான சுபத்திரையும்,தம்முனை - தன் அண்ணனாகிய க்ருஷ்ணனை, தியானம் முற்ற முன்னினள் -தியானநிலை நிரம்ப (மனத்தினால்) தியானித்தாள்: இருவர்உம் - (க்ருஷ்ணன் இந்திரன்என்ற) அவ்விருவரும், முன் முன்வந்து உற்றார் - (அவ்விருவருக்கும்) முன்னாகவந்து சேர்ந்தனர். (704) 74.- தேவேந்திரனைக் கண்ணபிரான் எதிர்கொள்ளுதல். இந்திராணியோடெய்திய விந்திரன்றன்னை இந்திராபதியெதிர்கொளத் துவரைமாமூதூர்ச் சந்திராதவமண்டபத் திடுபொலந்தவிசில் வந்திராவணங்கியதிரு மகனுடன்மகிழ்ந்தான். |
(இ-ள்.) இந்திராணியோடு எய்திய இந்திரன் தன்னை - இந்திராணியுடனே வந்தஇந்திரனை, இந்திராபதி எதிர்கொள - இலக்குமிக்குக்கணவனான கண்ணன் எதிர்கொள்ள, (அவன்), துவரை மா முது ஊர் - பெரிய பழமையான அத்துவாரகாபுரியில், சந்திர ஆதவர் மண்டபத்து இடு பொலம் தவிசில் வந்து இரா -சந்திரசூரியர் போல விளங்குகின்ற மண்டபத்திலே யிட்ட பொன்மயமான ஆசனத்தில்வந்து வீற்றிருந்து, வணங்கிய திருமகனுடன் மகிழ்ந்தான் - (தன்னை) வணங்கின(தனது) சிறந்தகுமாரனான அருச்சுனனுடன் கூடி மகிழ்ந்தான்; (எ-று.) இந்திராணி - இந்த்ராணீ: இந்திரன்மனைவி. இந்த்ரன், இந்திரா என்ற பெயர்கள்,ஐசுவரியமுடையவ ரென்று பொருள்படும். (705) 75.- இந்திரனும் இந்திராணியும் தமது ஆபரணங்களினால் முறையே அருச்சுனனையும்சுபத்திரையையும் அலங்கரித்தல். பொருவரும்புருகூதனும் புலோமகன்னிகையும் இருவருந்தமகலன்களா லிவரிருவரையும் மருவரும்படியணிதலி னணிகெழுவனப்பால் ஒருவரும்பிறரொப்பல ரென்னுமாறுயர்ந்தார். |
(இ-ள்.) பொருவு அரும் புருகூதன்உம் புலோமகன்னிகைஉம் இருவர்உம் - ஒப்பற்றவர்களான இந்திரனும் புலோமா என்பவனது மகளான இந்திராணியும் ஆகியஇரண்டு பேரும், தம கலன்களால்- தங்கள் ஆபரணங்களினால், இவர் இருவரைஉம் -(அருச்சுனனும் சுபத்திரையுமாகிய) இவர்கள் இரண்டுபேரையும், மருவரும்படிஅணிதலின் - பொருத்தமாக அலங்கரித்ததனால், (அவ்விருவரும்), அணி கெழுவனப்பால் - (தங்கள்) இயற்கையழகின்மீது நிறைந்த |