கொள்ள - பூமாலைபொருந்திய வலிய தோள்களையுடைய தருமபுத்திரன் தம்பியர்மூவருடனே (அன்பினால்) மனமுருகி நடந்து வந்து எதிர்கொள்ள, நகரி புக்கான் - இந்திரப்பிரத்தநகரை யடைந்தான்; யாற்றுநீர் மலையினின்று அகிலை அடித்து வருதலால், அந்நீர் பாயும் மடையிலுள்ள வாளை அதன்மணம் நாறு மென்க. நியமங் கொண்டு பன்னிரண்டு வருஷகாலம் தீர்த்தயாத்திரை செய்தனனென முதனூல் கூறும். (714) 84.-கண்ணன், பலராமனுடன்சென்ற அருச்சுனனைச் சமாதானப்படுத்தி அந்தமணமகனுக்கும் மணமகளுக்கும் மணச்சிறப்புக்கள் கொடுத்தல். முன்போர்விளைத்தமுசலப்படை மொய்ம்பினானும் தன்போலுயர்ந்தோரிலனான தடங்கண்மாலும் பின்போயினியமொழியாயிரம் பேசிமன்றற்கு அன்போடுதவுமுபகார மனைத்துமீந்தார். |
(இ-ள்.) முன் போர் விளைத்த முசலம் படை மொய்ம்பினான் உம் - தலைமையாய் நின்று (அருச்சுனனுடன்) போர்செய்தஉலக்கைப் படையையுடைய பலராமனும், தன் போல் உயர்ந்தோர் இலன் ஆன தட கண் மால்உம் தன்னைப்போலச் சிறந்தவரை வேறு பெறாதவனான விசாலமான கண்களையுடைய கண்ணபிரானும், பின் போய் - (அருச்சுனனுக்குப்) பின்னே சென்று, இனிய மொழி ஆயிரம் பேசி - மிகப்பலவான இன்சொற்களைச் சொல்லி, மன்றற்கு அன்போடு உதவும் உபகாரம் அனைத்துஉம் ஈந்தார் - விவாகத்துக்கு அன்போடு கொடுக்குந்தன்மையனவான காணிக்கைப் பொருள்களை யெல்லாம் (அவர்கட்குக்) கொடுத்தார்கள்; (எ-று.) (715) மொய்ம்பு - பலம்: அதனை யுடையவன், மொய்ம்பினான்; எனவே, 'பலன்' என்ற வடமொழிப்பெயரின் பரியாயநாமமாயிற்று; மூசலத்தை ஆயுதமாகவுடைமையால், பலராமனுக்கு 'முசலீ' என்ற ஒருபெயர் வழங்கும். உபகாரம் - உபஹாரம்: காணிக்கைப்பொருள்: வடசொல். உபசாரமென்றும் பாடம். 85.- பலராமன் துவாரகைக்கு மீள, கண்ணன் அருச்சுனனுடன் இந்திரப்பிரத்தத்தில் வாழ்தல். ஞாலத்தெரிவைகளிகூர நடாத்துசெங்கோல் தாலத்துவசன்றுவராபதி தன்னில்வைக நீலக்கடல்களிரண்டாமென நெஞ்சொடொத்த சீலத்தவனோடவண்வைகினன் செங்கண்மாலே. |
(இ-ள்.) ஞாலம் தெரிவை - பூமிதேவி, களி கூர - களிப்புமிகும்படி, நடாத்து -நடத்துகிற, செம் கோல் - நீதி தவறாத அரசாட்சியையுடைய, தாலம் துவசன் -பனைமரத்தின் வடிவ மெழுதிய கொடியை யுடையவனான பலராமன், துவாரபதிதன்னில் வைக - (மீண்டு சென்று) துவாரகாபுரியில் இருக்க,- செம் கண் மால்- சிவந்ததிருக்கண்களையுடைய கண்ணபிரான், நெஞ்சொடு ஒத்த சீலத்தவனோடு -(தன்) மனத்தோடொத்த ஒழுக்கமுடையவனான அருச்சுனனோடு, நீலம் கடல்கள்இரண்டு ஆம் என - நீலநிறமுள்ள இரண்டுகடல்கள் போலு மென்று (தங்கட்குஉவமை) சொல்லு |