பக்கம் எண் :

418பாரதம்ஆதி பருவம்

மாறு, அவண் வைகினன் - அவ்விந்திரப்பிரத்தநகரத்திலே இருந்தான்; (எ-று.)-
தாலத்துவசன் - வடமொழிப்பெயர்.                                 (716)

86.- சுபத்திரையினிடமாக அபிமந்யு பிறத்தல்.

பன்னாளிவரிப்பதிசேர்ந்தபின் பங்கசாத
மின்னாளுமார்பற்குயிர்போலும்விசயனென்பான்
நன்னாளினன்மைதருமோரையி னல்கவஞ்சி
அன்னாளிடத்திலபிமன்னு வவதரித்தான்.

     (இ-ள்.) இவர் பல் நாள் இ பதி சேர்ந்த பின் - இந்தக்கிருஷ்ணார்ச்சுனர்கள்
பலநாள் இவ்விந்திரப்பிரத்தத்திலேசேர்ந்து இருந்த பின்பு,- பங்கசாதம் மின்
ஆளும்மார்பற்கு உயிர் போலும்விசயன் என்பான் - தாமரைமலரில் வாழ்கிற
மின்னல்போன்றஇலக்குமி இடமாகக்கொண்டுவீற்றிருக்கப்பெற்ற திருமார்பை
யுடையனான கண்ணனுக்கு உயிர்போன்றவனான அருச்சுனன், நல்க -
கர்ப்பாதானஞ் செய்ய, நல்நாளில் - சுபதினத்திலே, நன்மை தரும் ஓரையில் -
நன்மைவிளைக்குஞ்சுபமுகூர்த்தத்திலே, வஞ்சி அன்னாள் இடத்தில் அபிமன்னு
அவதரித்தான் - வஞ்சிக்கொடி போன்றவளான சுபத்திரையினிடத்தில் அபிமந்யு
என்னுங்குமாரன் தோன்றினான்;

     பங்கஜாதம் - வடசொல்; சேற்றி லுண்டாவது. ஓரை - ஹோரா என்ற
வடசொல்லின் விகாரம். அபிமந்யு என்றவட மொழிப்பெயர்க்கு, பயமில்லாதவனும்
கோபமுடையவனு மாயிருப்பவ னென்று முதனூலிற்  காரணப்பொருள்
கூறப்பட்டிருக்கிறது.                                              (717)

87.- உபபாண்டவ ருற்பத்தி.

வேதஞ்சிறக்கமனுநீதி விளங்கவிப்பார்
ஆதங்கமாறவருமைவரி னைவர்மைந்தர்
பூதங்களைந்துங்குணமைந்திற் பொலிந்தவாபோல்
ஓதங்கியிலுற்பவித்தாள்வயி னுற்பவித்தார்.

     (இ-ள்.) வேதம் சிறக்க - வேதங்கள் சிறப்படையவும், மனுநீதி விளங்க -
மநுதர்மசாஸ்திரத்திற்கூறிய நீதிகள்விளக்கமடையவும், இ பார் ஆதங்கம் ஆற -
இந்தப்பூமியினது துன்பம் நீங்கவும், வரும் - பிறந்த, ஐவரின் -
பஞ்சபாண்டவர்களினின்று, ஐவர் மைந்தர் - ஐந்துபுத்திரர்கள், பூதங்கள்
ஐந்துஉம்குணம் ஐந்தின் பொலிந்த ஆ போல் - பஞ்சபூதங்களும்
ஐந்துகுணங்களாற்சிறத்தல்போல, ஓது அங்கியில் உற்பவித்தாள்வயின்
உற்பவித்தார் -சிறப்பித்துச் சொல்லப்படுகிற யாகாக்கினியினின்று பிறந்த
திரௌபதியினிடமாகப்பிறந்தார்கள்; (எ-று.)

     வைதிககிரியைகள் தவறாதுநடைபெறுதலால் வேதம் சிறப்புறும். தருமன்
முதலியபாண்டவரைவர்க்கும் முறையேபிரதிவிந்தியன், சுதசோமன், சுருதகர்மா,
சதாநீகன்,சுருதஸேநன்என்றஐவர் வருஷத்திற்கு ஒருவராய்ப் பிறந்தனரென்று
முதனூலினா லறிக.இவர்கள், உபபாண்டவரென்றும், பஞ்ச திரௌபதேயரென்றுங்
கூறப்படுவர்.பிருதிவிக்கு மணமும், அப்புக்குச் சுவையும், தேயுவுக்கு ஒளியும்,
வாயுவுக்கு ஊறுவும்,ஆகாயத்துக்கு ஒலியும் குண