எ ட் டா வ து காண்டவதகனச் சருக்கம். தேவேந்திரனுக்குஉரியதாய்ப் பூலோகத்திலுள்ள காண்டவ மென்னும் வனத்தைக்கிருஷ்ணார்ச்சுனர்களது அநுமதிப்படி அக்கினிதேவன் எரித்திட்ட செய்தியைக்கூறுகின்ற சருக்க மென்று பொருள்; காண்டவதஹந மென்ற வடமொழித்தொடர் -ஆறாம் வேற்றுமைத்தொகை: தகனச்சருக்கமென்றதொடர் - இரண்டனுருபும் பயனும்தொக்கதொகை: ஒருசாரார் இந்தச்சருக்கத்தின் முதற்பத்தொன்பது பாடலைஇளவேனிற்சருக்கம் என்று தனியே ஒருசருக்கமாகக்கொண்டு, பின்ஐம்பத்தெட்டுப்பாடல்களைக் காண்டவதகனச் சருக்கம்என்று கொள்கின்றனர்:பதினான்காம்பாடல்முதல்முது வேனிற்பருவம் கூறப்படுவதாலும், சருக்கத்தின்பெயர்கதைக்குச் சம்பந்தப்படவே இதுவரையில் வைத்திருத்தலாலும் அங்ஙன்கொள்ளவேண்டியதில்லை. 1.-சூரியன் தட்சிணாயனத்தைவிட்டு உத்தராயணத்தில் வருதல். நனியாட லனற்கடவுண் யமனிருதி நண்ணுதிசை நாள்க டோறும், முனியாம னடந்திளைத்து முன்னையினும் பரிதாபமுதிர்ந்ததென்று, தனியாழித் தனிநெடுந்தேர்த் தனிப்பச்சை நிறப்பரியைச் சயிலராசன், பனியாலவ் விடாய்தணிப்பான் பனிப்பகைவன் பனிசெய்வோன் பக்கஞ்சேர்ந்தான். |
(இ-ள்.) பனி பகைவன் - பனிக்குப் பகைவனாகிய சூரியனானவன்,- நனி ஆடல்- மிக்ககொடுமையையுடைய, அனல் கடவுள் - அக்கினியும், யமன் - யமனும், நிருதி- நிருருதியும், (என்னும் இவர்கள்), நண்ணா - பொருந்திய, திசை - (தெற்குத்) திக்கில்,நாள்கள் தோறுஉம் - தினந்தோறும், முனியாமல்நடந்து - வெறுப்புக்கொள்ளாமல்நடந்ததனால், (தனதுதேர்க்குதிரை),முன்னையின்உம் இளைத்து பரிதாபம் முதிர்ந்தது -வெப்பம் அதிகப்பட்டு முன்பு இருந்த நிலையினின்று மாறிச்சோர்வடைந்து விட்டது,என்று - என்று எண்ணி, - தனி ஆழி தனி நெடு தேர் தனி பச்சை நிறம் பரியை -ஒற்றைச் சக்கரத்தையுடைய ஒப்பற்ற பெரிய (தனது) தேரிற்பூட்டியதனித்தபசுமைநிறத்தையுடைய அக்குதிரையை, சயிலராசன் பனியால் அ விடாய் தணிப்பான் -மலையரசனாகிய இமயமலையிலுள்ளபனியினால் அந்தத் தாபந்தணியச்செய்தற்பொருட்டு, பனி செய்வோன்பக்கம் சேர்ந்தான் - பணியைச்செய்பவனானஅவ்விமய மலையிருக்கிறவடக்குப்பக்கத்தை யடைந்தான்; (எ-று.) ஆடிமாசமுதல் மார்கழிமாசம் வரையில் ஆறுமாசம் தக்ஷிணாயனமும், தைமாசம்முதல் ஆனிமாசம்வரையில் ஆறுமாசம் உத்தராயணமுமாம். சூரியன் தென்புறமாகச்சஞ்சரிக்கும் காலம், தக்ஷிணாயனம். அவன் வடபுறமாகச்சஞ்சரிக்கும் காலம், உத்தராயணம். ஆயினும், வடக்கினின்றுமீண்டு தென்புறமாகவும் தெற்கினின்றுமீண்டு வடபுறமாகவும் வரும்போது தெற்குத்திசைப்பாகமாகவேனும் வடக்குத்திசைப்பாகமாகவேனும் ஒதுங்காமல் இடையில் நிற்குங்காலம் விஷு வ மெனப்படும். சித்திரைமாதத்திற்கு உரிய |