பக்கம் எண் :

422பாரதம்ஆதி பருவம்

மேஷராசியிற் சூரியன் வருகையிலும், ஐப்பசிமாதத்துக்கு உரிய துலாராசியிற்
சூரியன்வருகையிலும், விஷு வமென்கிற காலம் உண்டாகின்றது; அதுதான்,
ஏற்றத்தாழ்வில்லாத இராப்பகல்களையுடையது. இளவேனிற்பருவம் வரலாயிற் றென்று
கீழ்ச்சருக்கத்தின் முடிவிற் கூறினவர், அந்தப்பருவத்தின் ஆரம்பமான
சித்திரைமாதத்தொடக்கத்தை இங்குக்கூறுகிறாரென அறிக.

     தைமாசமுதல் தெற்கினின்று ஒதுங்கிவந்த சூரியன் உத்தராயணத்தின்
மத்தியபாகமாகிய சித்திரைமாசத் தொடக்கத்தில் நடுவில் வந்து அதுமுதல்
வடபுறமாகஒதுங்குகின்றனன்: இங்ஙனம் இயல்பாற் சூரியன் தென்திசையினின்று
வடதிசையிலொதுங்குதற்குக் கவி தானாக ஒரு காரணத்தைக் கற்பித்துக்
கூறியதனால், இச்செய்யுள்- ஏதுத்தற்குறிப்பேற்றவணி; அக்கினி தென்கிழக்குத்
திக்குப் பாலகனாகவும்,பிராணிகளையெல்லாம் கண்ணோட்டமின்றிக் கொல்லுகிற
யமன்தெற்குத்திக்குப்பாலகனாகவும், இராக்கதர்குலத்துக்கு ஆதிபுருஷனாதலாற்
கொடியவனாகிற நிருருதி தென்மேற்குத்திக்குப் பாலகனாகவும் அமைந்துள்ளதனாற்
கொடியதாகிற தென்திசையிற் பலநாள் நடந்ததனால் தனதுதேர்க்குதிரை மிக்க
தாபமடைந்து இயல்பாகவுள்ளவலிமை குன்றிச் சோர்ந்துவிட்டது என்று எண்ணிச்
சூரியன் இனி அக்குதிரையை இமயமலையிலுள்ள பனியைக்கொண்டு அத்தாபத்தைத்
தணிக்கக்கருதி அம் மலையிருக்கிற வடபுறத்தைச்சேரலாயின னென்றார். பகற்
சஞ்சாரம் தக்ஷிணாயனத்தில் விரைவாகவும் உத்தராயணத்தில் மந்தமாகவும்
இருத்தல்,இயல்பு; அது, தக்ஷிணாயனத்தில் பகற்பொழுது குறைவாகவும்
உத்தராயணத்தில்பகற்பொழுது மிகுதியாகவும் இருத்தலால் விளங்கும். இங்ஙனம்
தக்ஷிணாயனத்திலுள்ளவேகம் பின்பு குறைதல், கொடியவர்கள் பொருந்திய கொடிய
தென்திசையிற் பலநாள்வெறுப்பின்றி நடந்ததனால் தனதுகுதிரை தாபமுதிர்ந்து
முன்னையினும்இளைத்ததென்று சூரியன் கருதியதற்குக் காரணமென்னலாம்.

     ஆடல் - அடலென்பதன் நீட்டல்விகாரம். அனற்கடவுள் - அக்கினிதேவன்.
சூரியனது தேர் சம்வற்சரரூபமான ஒற்றைச்சக்கரத்தையுடைய தென்று புராணம்கூறும்.
சூரியனது தேர்க்குதிரைகள் ஏழு என்பர், ஒருசாரார்; மற்றொருசாரார், ஏழு [ஸ்ப்த]
என்று பெயர்பெற்ற குதிரை ஒன்றே யென்பர்; இக்கொள்கையே இங்குக்
கொள்ளப்பட்டது. பரிதாபம் - பெருவெப்பம்: வடசொல், "பரிதாபம்
ராதவாஜிநாம்நிஜாநாம் ஹிமவத்பவநைரிவாபநேதும் - திநநாதோ திஸமுத்தராம்
ப்ரதஸ்தே" என்றது பாலபாரதம்.

     இதுமுதற்பத்தொன்பதுகவிகள், பெரும்பாலும் முதல்நான்கு சீரும்
காய்ச்சீர்களும்,மற்றை இரண்டும் மாச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள்
                                                            (722)

2.- வசந்தகால வருணனை.

கலக்கமுறவிளவேனிற்கலகமெழுந்திடும்பசுந்தண் காவுதோறும்,
சிலைக்கணிநாண்முறுக்குவபோற்றென்றலின்பின் சுழலளிகள்சேர