(இ-ள்.) செங் காவி - செங்கழுநீர்மலரும், செங் கமலம் - செந்தா மரைமலரும்,சேது ஆம்பல் - செவ்வாம்பல்மலரும், (ஆகிய இவை மூன்றும்),- தடம் தொறுஉம் -நீர்நிலைகளாகிய குண்டந்தோறும் முத் தீக்கள் ஆக - காருகபத்தியம் ஆகவனீயம்தட்சிணாக்கினி என்ற மூன்று அக்கினிகளாகவும், பைங் காவின் - பசுமையானசோலையின், நெடுஞ் சினை - நீண்டகிளைகளாகிய, கை - கையின், மலர் - மலர்களினின்று,நறுந்தேன் - நறுமணமுள்ளதேனாகிய, ஆகுதிகள் பல உம் - ஓமங்கள்பலவற்றையும்,வீழ்த்த - வீழுமாறுசெய்யவும், உங்காரம் மதுகரங்கள் - உங்காரத்தைச் செய்கின்றவண்டுகள், ஓங்காரம் சுருதி எடுத்துஓத - ஓங்காரமாகிய சுருதியை எடுத்துச்சொல்லவும், வேள்வி - யாகத்தை, வெங் காமன் - விருப்பத்தை யுண்டாக்கவல்லமன்மதன், இரதியுடன் - இரதீதேவியுடனிருந்து, புரிந்து - செய்துவிட்டு, தன தென்றல்அம் தேர் மேற்கொண்டான் - தனது தென்றலாகிய அழகியதேர்மேலேறிக்கொண்டான்; (எ-று.) முத்தீவளர்த்து ஆகுதிசெய்து வேள்வியை முடித்தபின்பு யாகஞ்செய்தவன் தன்பத்தினியோடு தேர்மீது ஏறி யாகசாலையினின்று இருப்பிடத்துக்குச் செல்லுவதுபோல, மன்மதன் ரதீ தேவி யுடனே பட்டணப்பிரவேசஞ் செய்யப்புறப்பட்டா னென்பதாம். காவி முதலியவற்றை முத்தீமுதலியனவாக உருவகஞ்செய்ததனால் மன்மதனையும் இரதீதேவியையும் யஜமாநனும் யாக பத்தினியுமாகஉருவகஞ் செய்யவேண்டிற்று: இது அவயவஉருவகம். தடம் - நீர்நிலையாகியகுண்டமெனச் சிலேடையுருவகம். சினையைக் கையென்றதற்கு ஏற்ப, மலரைக்கைத்தலமாகவும் தேனை நெய்யாகவும் கொள்க. (724) 4.-கிருஷ்ணார்ச்சுனர் வேனில்விழாவயரத் தேவியரோடுஞ் சோலைசேர்தல். தேவியருந்திருமாலுஞ்செழுமலர்த்தார்த் தனஞ்சயனுந்தேவிமாரும் மேவியனந்தரம்வேனில்விழவயர்வான் முரசறைந்துவீதிதோறும் ஓவியமுமுயிர்ப்பெய்தவுபேந்திரனு மிந்திரனுமுவமைசாலப் பூவினமுஞ்சுரும்புமெனப்புரமுழுதும்புறப்படவண்பொங்கர்சேர்ந்தார். |
(இ-ள்.) திருமால் உம் - ஸ்ரீக்ருஷ்ணனும், தேவியர்உம் - (அவனுடைய) தேவிமாரும், செழு மலர் தனஞ்சயன்உம் - செழிப்புள்ள மலர்கொண்டு தொடுக்கப்பட்ட மாலையையணிந்த அருச்சுனனும், தேவிமார்உம் - (அவனுடைய) தேவிமாரும், மேவி - மனமொன்றி, அனந்தரம் - பிறகு, வேனில் விழவு அயர்வான் -வசந்தோற்சவம் கொண்டாடும்படி (கருதி), முரசு அறைந்து - பேரிகையறைந்து(நகரிற்செய்திதெரிவித்து), வீதிதோறும்உம்-, ஓவியம்உம்உயிர்ப்பு எய்த -சித்திரப்பதுமைகளும் பெருமூச்சுவிடும்படி,- உபேந்திரன் உம் இந்திரன்உம் உவமைசால - உபேந்திரனும் இந்திரனுமே உவமையாகப்பொருந்த, பூஇனம்உம் சுரும்புஉம்என புரம்முழுதுஉம் புறப்பட - பூவின் தொகுதியும் வண்டுமேயென்னுமாறுநகரத்தவரனைவரும் புறப்பட, வண் பொங்கர் சேர்ந்தார் - வளப்பமுள்ள சோலையையடைந்தார்கள்;(எ-று.) |