பக்கம் எண் :

காண்டவதகனச் சருக்கம்427

போன்ற - செங்கழுநீர்தோன்றப்பெற்ற நீர்நிலையை யொத்தன: தடங்கள் எல்லாம் -
நீர்நிலைகளெல்லாம்,- சிந்தை தாபம் ஆற்றாத காதலருக்கு- மனத்திற்கொண்ட
தாபத்தைத் தாங்கமாட்டாத காதலைக்கொண்ட ஆடவருக்கு, அமுது ஆன -
அழுதம்போலினிமையான, இளநீரால் - இளநீரினாலும், அடர்ந்த பூகம் தாற்றல் -
நெருங்கிய கமுகங்குலையினாலும், அம் மரகதம் செந்துகிரால் - அழகிய
மரகதத்திற்கலந்திருக்கிற செம்பவழத்தாலும், அ பொழில் போன்ற - அந்தச்
சோலையையொத்தன; (எ-று.)

     சோலை தடத்தையும், தடம் சோலையையும் போலுமென்று, ஒன்றன்
தன்மையைமற்றொன்று மாற்றிக்கொண்டாற்போலக் கூறிய நயம் பாராட்டுதற்கு
உரியது. தடத்திற்குநீரும் சேறும் உரியன. சோலையில் ஆடவரும் மடவாரும்
ஒருவர்மீது ஒருவர் தூவியபனிநீரும், மான்மதச்சேறுமுதலியனவும் கீழேசிந்துதலால்,
சோலை நீரையும்சேற்றையுமுடையதாயிற்றென்க. பொழிலுக்கு உரியவை,
இளநீர்முதலியன.மடவார்தடங்களிற் குடைந்து புனலாடுகையில், அவர்களுடைய
கொங்கைள்முதலியவற்றைத்தட மெல்லாம் பெறுதலால். அவை பொழில்போன்ற
என்றார்.தனங்கள் இளநீரையும், கூந்தல் பூகத்தாற்றையும், மரகதமேனியிலுள்ள
செவ்வாயிதழ்மரகதச்செந்துகிரையும் போலுமென்க: சோலைக்கு மரகதச் செந்துகிர்,
பசுமையிற்செந்நிறமும்படவெடிக்கும் இளந்தளிரென்க; பொழிலைச்சேருமிடத்தும்
மரகதச்செந்துகிரென்றது- ஆகுபெரேயாம்.                         (728)

8.- இதுமுதல் ஐந்துகவிகள் - அருச்சுனனும் அவனது தேவியரும்
நீர்விளையாடுதலைக் கூறும்.

மெய்கொண்டமொழிவிசயன்மெய்யினெழி லிமையாமன்மேன்
                                   மேனோக்கும்,
மைகொண்டகுழலொருத்திமற்றவன்செங் கையிற்சி
                             விறிமழைகண்டஞ்சிப்,
பொய்கொண்டுவகுத்தனையமருங்கசையத்தனபாரம்புளகமேறக்,
கைகொண்டுமுகம்புதைத்துத்தன்விரற்சாளரங்களிலேகண்கள்
                                       வைத்தாள்.

     (இ-ள்.) மெய் கொண்ட மொழி - உண்மையைக் கொண்ட பேச்சையுடைய,
விசயன் - அருச்சுனனது, மெய்யின் - உடம்பின், எழில் - அழகை, இமையாமல் -
கண் கொட்டாமல், மேல்மெல் நோக்கும் - பின்னும்பின்னும் பார்க்கின்ற, மை
கொண்டகுழல் ஒருத்தி - கருநிறத்தைக்கொண்ட கூந்தலையுடைய ஒருத்தி, அவன்
செங்கையில் சிவிறி மழை கண்டு அஞ்சி - அந்த அருச்சுனனுடைய
செங்கையிலுள்ள(நீரை விசிறவீசுங்கருவியான) துருத்தியினின்று வெளிப்படும்
நீர்த்தாரையைக்கண்டுபயந்து, பொய் கொண்டு வகுத்து அனைய மருங்கு
அசைய -பொய்யைக்கொண்டு வகுத்தாற்போன்ற [இல்லையென்றுசொல்லும்
நிலையையடைந்துள்ள] இடை நுடங்காநிற்கவும், தனபாரம் புளகம் ஏற -
கொங்கையாகிய சுமையிலே மயிர்ச்சிலிர்ப்புமிகவும், கைகொண்டு முகம் புதைத்து -
(தன்) கையினால் (தன்) முகத்தைமூடிக்கொண்டு, தன் விரல் சாளரங்களில் -
(அங்ஙன்மூடிய) கையின் விரல்களினிடைவழியாக, கண்கள் வைத்தாள் - (தன்)
கண்பார்வையை வெளியேசெலுத்தினாள்; (எ-று.)