பக்கம் எண் :

430பாரதம்ஆதி பருவம்

வாகனன் - அருச்சுனனது, கடகம் தோளின்மீது - கடகமென்னும் வளையை
யணிந்ததோள்களின்மேல், நறு கத்தூரி சேறு படு தெளிந்த நீர் - நறுமணமுள்ள
கஸ்தூரிக்குழம்பு கலந்த தெளிவான நீரை, சிவிறியின் சிந்தும் - துருத்தியைக்
கொண்டுதூவிய, தோற்றம் - காட்சியானது,- களிந்த கிரிமிசை - களிந்தமென்னும்
மலையின்.மேல், கடவுள் காளிந்தி பரந்தது என - தெய்வத்தன்மையையுடைய
யமுனாநதிபரவியதுபோல, கவினும் - அழகியதாய்விளங்கும்; (எ-று.)

     தற்குறிப்பேற்றவணி. கருநிறமுடைய அருச்சுனனது வலியபெரிய
தோளுக்கு - கருநிறமுடையவலிய பெரிய களிந்தகிரியும், கஸ்தூரிக் குழம்பு
கலந்ததனாற் கருநிறம்மிக்க தெளிவான நீர்க்கு- கருநிறமுள்ள தெளிந்தயமுனா
நதியின்நீர்ப்பெருக்கும் ஒப்பா மெனக் காண்க. மயில் விளிந்து புறங்கொடுக்கும்
மெல்லியலாள்- மயிலினதுசாயலினும் மிக அழகியதாய்ச் சிறந்த சாயலையுடையாள்
என்றபடி.கத்தூரி-கஸ்தூரியென்னும் ஒருவகைமானினதுபெயர். அதன் வயிற்றினின்று
எடுக்கப்படுங் கொழுப்புக்கு முதலாகுபெயராம். தோன்றுவது தோற்றம்.
யமுனாநதிக்குத்தெய்வத்தன்மை - தன்னிடத்தில் நீராடியவரது அருவினை
தொலைத்து அவர்களைநற்கதியிற் செலுத்துதலும் கண்ணபிரான் திருவிளையாடல்
செய்யப்பெற்றபாக்கியமுடைத்தாதலும், மாது, ஓ - ஈற்றசைகள். அருச்சுனன்
தேவியர்மீதுநீர்சிந்தியதை வருணித்தவர், தேவியர் அருச்சுனன்மீது நீர்சிந்துவதை
இருகவிகளில்வருணிக்கின்றார்.                                   (732)

12. பிறையனையதிலகநுதற்பேதையிளம் பிடியொருத்தி
                                  பிடித்த
செங்கை, நறைகமழும்பொலஞ்சிவிறிநண்ணியசெஞ்
                          சிந்தூரநாரம்வீச,
அறைகழல்வெஞ்சிலைத்தடக்கையருச்சுனன்றன்றிரு
                         முகத்திலானபோது,
நிறைமதிமேல்வாளிரவிகரங்கணிரைத் தோடுவபோ
                           னிறத்தமாதோ.

     (இ-ள்.) பிறை அனைய - இளஞ்சந்திரன் போன்ற, திலகம் நுதல் -
திலகத்தையணிந்த நெற்றியையுடைய, இளம் பிடி - இளமையான பெண்யானை
போன்றவளாகிய, பேதை ஒருத்தி - ஒரு பெண், செம் கை பிடித்த - (தனது)
சிவந்தகையிற் பிடித்த பொலம் சிவிறி - அழகிய துருத்தியில், நண்ணிய -
பொருந்திய, செம்சிந்தூரம் நறை கமழும் நாரம் - சிவந்த சிந்தூரப்பொடியைக்
கரைத்த வாசனைவீசும்நீரை, வீச - சிந்த,- (அந்நீர்ப்பெருக்குக்கள்),- அறை கழல்
வெம் சிலை தட கைஅருச்சுனன்தன் திரு முகத்தில் ஆன போது -
ஆரவாரிக்கின்ற வீரக்கழலையும்பயங்கரமான வில்லை யேந்திய பெரிய
கையையுமுடைய அருச்சுனனது அழகியமுகமண்டத்தின்மேற் சென்று
பொருந்தியபொழுது, வாள் இரவி கரங்கள் நிறை மதிமேல் நிரைத்து ஓடுவ போல்
நிறத்த - ஒளியையுடைய சூரியனது கிரணங்கள் பூர்ணசந்திரன்மேல் வரிசையாக
ஓடுவன போல விளங்கின; (எ-று.)

     தற்குறிப்பபேற்றவணி. அருச்சுனனது முகமண்டலத்துக்கு -
சந்திரமண்டலமும்,அதன்மேற்  சிந்தூரங்கலந்தநீர் மேன்மேற் செல்லுதற்கு-சந்திர
மண்டலத்தின்மேற்செந்நிறமான சூரியகிரணங்கள் வரிசையாகச்சென்று பாய்தலும்
ஒப்பா மெனக் காண்க.சூரிய கிரணங்கள் மேன்மேற்பாய்ந்து சந்திரனது
ஒளியைநிறைக்