கின்றவென்பது, நூற்கொள்கை. குளிர்ந்த ஒளியும், அழகும், வளைந்த வடிவமும் பற்றி, மகளிர்நெற்றிக்குப் பிறை உவமம். நுதற்குத் திலகங் கூறினதற்கு ஏற்ப, பிறைக்குக்களங்கம் கொள்க. (733) 13.-கிருஷ்ணார்ச்சுனர் மகளிர்விளக்கேந்தமடவாரோடு தம்மனைக்குச் செல்லுதல். பாண்டுமதலையுங்காதற்பாவையருந் துழாயோனும்பாவைமாரும் ஈண்டுபெருஞ்சனத்துடனேயிவ்வண்ண மிடந்தோறுமினிதினாடி ஆண்டுவரிசிலைமதனுமவன்படையுஞ் சேவிப்பவழகுகூர மீண்டுதமமனைதோறுநிரைநிரைவாள் விளக்கேந்தமேவினாரே. |
(இ-ள்.) பாண்டு மதலைஉம் - பாண்டுவின் புதல்வனாகிய அருச்சுனனும், காதல்பாவையர் உம் - (அவனுடைய) அன்பிற்கு உரியரான மகளிரும், துழாயோன்உம் -திருத்துழாய்மாலைக்கு உரிய திருமாலின் அவதாரமான ஸ்ரீகிருஷ்ணனும்,பாவைமார்உம் (அவனுடைய அன்பிற்குஉரிய) மகளிரும், ஈண்டு பெருஞ் சனத்துடனே- நெருங்கிய நகரத்துச்சனங்களுடனே, இ வண்ணம் - இவ்வாறு, இடந்தோறு உம் -(அச்சோலையிலுள்ள) நீர்த்தடங்களிலெல்லாம், இனிதின் ஆடி - இனிதாக நீராடி,ஆண்டு - அங்கே, வரி சிலை மதன்உம் - கட்டமைந்த வில்லையுடைய மன்மதனும்,அவன் படைஉம்- அவனுடைய பரிவாரமாகிய மகளிரும், சேவிப்ப - அந்தவசந்தோத்ஸவத்தைக் கண்டு களிக்க, அழகு கூர - அழகுமிக, மீண்டு -(அச்சோலையினின்று) திரும்பி, நிரை நிரை வாள்விளக்கு ஏந்த -(போகும்வழியிடையே) வரிசை வரிசையாக (ப் பணிப் பெண்கள்) ஒளிபொருந்தியவிளக்கை யேந்திநிற்க, தம மனை தோறுஉம் - தம்தமக்குரிய வீடுதோறும், மேவினார்- சென்று சேர்ந்தார் (எ-று.) வாள்விளக்கேந்த என்பதற்கு ஏற்ற எழுவாய் வருவிக்க. தம - ஆறனுருபு ஏற்றபெயர். தம்மனையென்றது - யமுனைக்கரையில் அவரவர்கட்கு என்று அமைத்தமனையை. (734) 14.- இதுமுதல் மூன்றுகவிகள் - முதுவேனிற்பருவ வருணனை. நெடுவேனில்புகுதரமேலிளவேனி லகன்றதற்பினிகரில்கஞ்சப், படுவேய்வெள்வளையமுந்தண்பட்டாலவட்டமுஞ்செம்படீரச்சேறும், உடுவேய்நித்திலதொடையுமூடுறுமண் டபத்தடமுமொழுகிநீண்ட, வடு வேய்கண்மடந்தையர்க்குமகிழ்நருக்குமமைந்தனவான் மனைகளெல்லாம். |
(இ-ள்.) இளவேனில் அகன்றதன் பின் - இளவேனிற்பருவங் கழிந்ததன்பின்பு, மேல் நெடுவேனில் புகுதர - அதற்கு அடுத்ததான முததுவேனிற் பருவம் வர,- படு ஏய் - நீர்நிலைகளில் உண்டாகிற, கஞ்சம் - தாமரையினது, நிகர் இல் - ஒப்பில்லாத [மிகச் சிறந்த], வெள் வளையம்உம் - வெண்ணிறமான இளந்தளிர்ச்சுருள்களும், தண் பட்டு ஆலவட்டம்உம் - குளிர்ச்சியான பட்டினாற்செய்த பெருவிசிறிகளும், செம் படீரம் சேறுஉம் - செஞ்சந்தனக்குழம்பும், உடு ஏய் நித்திலம் தொடைஉம் - நக்ஷத்திரகணத்தை யொத்த முத்து மாலைகளும், ஊடு உறு மண்டபம் தடம்உம் - நடுவிற் பொருந்திய மண்டபத்தை |