யுடைய தடாகங்களும்,- ஒழுகி நீண்ட வடு ஏய் கண் மடந்தையர்க்குஉம் மகிழ்நருக்குஉம் - நெடுந்தூரமளவும் நீண்ட மாம்பிஞ்சினுட்பிளவை யொத்த கண்களையுடைய மாதர்களுக்கும் அவர்கள் கணவரான ஆடவர்களுக்கும், வான் மனைகள் எல்லாம் அமைந்தன - உயர்ந்த வீடுகள்தோறும் (சீதோபசாரத்தின்பொருட்டு) அமைக்கப்பட்டன; (எ -று.) இளவேனில் - இளமையான வெயில்வெப்பத்தையுடைய காலம்; நெடுவேனில் -முதிர்ச்சியானவெயில்வெப்பத்தையுடைய காலம். கிரீஷ்ம காலமென்றும்கோடைகாலமென்றுங் கூறப்படுகிற முதுவேனிற்கு உரிய மாதங்கள் - ஆனியும்ஆடியும். வெப்பம்மிக்க அப்பருவம் வந்தவுடனே அதன்தாபத்தைத் தணித்துக்குளிர்ச்சிசெய்தற்பொருட்டுச் சீதளகரமான தாமரையுட்சுருள் முதலியன வீடுகள்தோறுஞ்சித்தஞ்செய்யப்பட்டன வென்பதாம். காலவியல்பை வருணித்ததனால்,தன்மைநவிற்சியணி. ஆலவட்டம் - ஆலிலைபோன்ற வடிவமுள்ள ஒருவகைவிசிறி:இனி, தாலவ்ருந்தம் என்பதன் சிதைவு என்ப. ஊடுறு மண்டபத்தடம் - நீராழிமண்டபத்தைநடுவிலேயுடைய தடாகங்கள்; அத்தடாகத்தி னிடையிலுள்ள மண்டபத்தில்வசித்தல், வெப்பந்தீர்ந்து தட்பம் பெறுதற்குக் காரணமாம். வடு - மாவடு; இங்கு,அதனுட்பிளவுக்கு ஆகுபெயர்: அது - மகளிர்கண்ணுக்கு வடிவிலுவமம். ஒழுகி நீண்ட - ஒருபொருட்பன்மொழி; மிகநீண்ட என்றபடி: "தண் செவியுறப் போந்தகன்றனவே" என்றபடி காதளவும் நீண்டோடிய என்க. (735) 15.- கணவர் மடவாரைக் கலத்தல். திலகநுதற்குறுவியர்தஞ்செவிப்பூவி லளியினத்தின்சிறகர்க்காற்றால் புலரமதுநுகர்மாதர்புன்முறுவ லிதழூறல்புதிதின்மாந்தி இலகுபரிமளபுளகவீரமுலைத் தடமூழ்கியிரதிகேள்வன் கலகமிடும்பரிதாபமகற்றினா ரினிமையுடன்கலந்தகேள்வர். |
(இ-ள்.) இனிமையுடன் - இன்பம்பெற, கலந்த - மடவாரைக் கூடின, கேள்வர் -கணவர்,- திலகம் நுதல் குறு வியர் தம் செவி பூவில் அளி இனத்தின் சிறகர் காற்றால்புலர மது நுகர் மாதர்- திலகந்தீட்டிய நெற்றியிலே தோன்றிய அற்பமாகிய வேர்வைநீர்தம்முடைய செவியிலணிந்த பூவிலே மொய்க்கின்ற வண்டுக்கூட்டங்களின்சிறகுகளிலிருந்து தோன்றுஞ் சிறுகாற்றால் உலராநிற்க மதுவைப்பருகுகின்றமாதராரின்,புல்முறுவல் இதழ் ஊறல் - புன்சிரிப்பைக் கொண்ட வாயிதழினின்று ஊறும்நீரை,புதிதில் மாந்தி - புதுமைபெறப்பருகி, இலகு பரிமளம் புளகம் ஈரம் முலை தடம் மூழ்கி- விளங்குகின்ற நறுமணத்தையுடைய மயிர்க்கூச்சைக் கொண்டு ஈரமுள்ளமுலையாகிறதடத்திலே படிந்து, இரதிகேள்வன் கலகம் இடும் பரிதாபம் - இரதிக்குக் கணவனாகியமன்மதன் மலரம்புகொண்டு பொருதலினாலாகிய துன்பத்தை, அகற்றினார் -போக்கினார்; (எ-று.) ஆடவரும் பிரிந்தநிலையில் வருந்திய மடவாரும் ஒன்று கூடி அவ்வருத்தம்நீங்கி இனிது இன்பந் துய்த்தனரெனபதாம். (736) |