மாருதங்கள் இறந்தனபோல வழக்கமின்றி ஒளித்தன என இயையும்: ஆடைமுதலிய இவற்றின்றுமாத்திரமே காற்று இயங்கின என்பதாம். ஆடையையும் சாமரத்தையும் ஆலவட்டத்தையும் வீசும்போதும், சுவாசம் விடும்போதும், யானைகள் தமது பெரிய காதுகளை இயல்பாக அசைக்கும்போதும் பறைவைகள் பறத்தற்கு இறகுகளைப் பரப்பி அடித்துக்கொள்ளும்போதுமே காற்று வெளியெழுதலால் அவற்றில்ஒளித்தன வென்றார். 'கோடை வெயில் சுடச்சுடமெய்கொளுந்தியிறந்தனபோல' என்றது, தற்குறிப்பேற்றவணி. மந்தகதியாக வீசுதல் தென்றலின் இயல்பாதலால், 'சிறுதென்றல்' எனப்பட்டது. (738) 18.- அக்கோடைக்காலத்து நீர்வறட்சி. தாழிநறுங்குவளையந்தார்த்தருமன்மக னருட்புனலுந்தரங்கவேலை ஊழிநெடும்பெரும்புனலுமுடலிலுறு வெயர்ப்புனலுமூறியூறிப் பாழிதொறுமிறைக்கின்றபைம்புனலு மல்லதுவெம்பருவந்தன்னால் பூழிபடுகமர்வாயநானிலத்துப் புகலுதற்கோர்புனலுமுண்டோ. |
(இ-ள்.) தாழி - நீர்நிலைகளிலுண்டாகிற, நறு - வாசனைவீசுகிற, குவளை - குவளைமலர்களினாலாகிய, அம் தார் - அழகிய மாலையை யணிந்த, தருமன் மகன் -யமதருமராசனது புத்திரனான யுதிட்டிரனது, அருள் புனல்உம் - அருளாகியநீர்ப்பெருக்கும், தரங்கம் வேலை - அலைகளையுடைய கடலி லுள்ள, ஊழி நெடும்பெரும் புனல் உம் - யுகாந்தகாலத்திலும் வற்றாத மிக்க நீரும், உடலில் உறு - உடம்பில்மிகுதியாக உண்டாகிற, வெயர் புனல் உம் - வியர்வைநீரும், பாழி தொறுஉம் ஊறிஊறி இறைக்கின்ற - நீரூற்றுக் குழிகளிலெல்லாம் மேன்மேலூறி இறைக்கப்படுகின்ற,பைம் புனல்உம் - புதிய தண்ணீரும், (என்னும் இவையே), அல்லது - அல்லாமல்,வெம் பருவம் தன்னால் பூழி படு கமர் வாய நால் நிலத்து - வெவ்வியகோடைக்காலத்தாற் புழுதிபட்டதும் வெடிப்பைத் தன்னிடத்திலுடையதுமான(பூமியிலுள்ள) நால்வகை நிலங்களிலும், புகலுதற்கு ஓர் புனல்உம் உண்டுஓ -எடுத்துச்சொல்லுதற்கு வேறொருநீரும் உள்ளதோ? [இல்லை யென்றபடி]; (எ - று.) அருள், நீர்போலக் குளிர்ந்து பிறருடைய தாபத்தைத் தணிக்குந்தன்மைய தாதலால், அதனை, உருவகவகையால் 'அருட்புனல்' என்றார். காப்பியத்தலைவனான தருமபுத்திரனது அருள் மிகச் சிறத்தலாலும், என்றும் மாறாததாலும், அது இங்கு எடுத்துக் கூறப்பட்டது. அவ்வருட்புனல் முதலிய நால்வகைப்புனலுமேயன்றி உலகத்தில்நால்வகைநிலத்திலும் எங்கும் வேறுபுனல் இல்லையென்பதாம். நால்வகைநிலங்கள் -முல்லை, குறிஞ்சி மருதம், நெய்தல் என்பன. பாலைநிலம், பிராணிசஞ்சாரத்துக்குஉரியதன் றாதலால் விலக்கப்பட்டது. அன்றியும், பாலைக்குத் தனியே நிலமில்லையென்றும், மற்றை நான்குநிலங்களும்தம் இயல்புதிரிந்தவிடத்தே பாலையாமென்றுங்கொள்கை யுண்டு. தாழ்ந்துள்ளது தாழி எனக் காரணக்குறி; (தாழ்தல் - ஆழ்தல்.) இனி,தாழிக் குவளை யென்பதற்கு - சாடியிலுண்டாக்கப்பட்ட குவளை யென்றலும் ஒன்று; |