"தாழிவாய மறைக்குந் தண்ணென் தடம்பெருங் குவளைக் கண்ணார்" என்றார் சிந்தாமணியாரும்.பைம்புனல் என்பதில், பசுமை - புதுமையின் மேலும், குளிர்ச்சியின்மேலும் நின்றது. 'தாழினறுங்குவளை', 'நானிலத்தும்' என்றும் பாடம். (739) 19.- கண்ணனும் அருச்சுனனும் ஒருசேர இருத்தல். நீகார மழைபொழிய நித்திலவெண் குடைநிழற்ற நீல வாட்கட் பாகாரு மொழிமடவார் மணிக்கவரி யிருமருங்கும் பயில வீசக் கார்காலம் புகுந்துசெழுங் காளமுகி லிரண்டொருபாற் கலந்த தென்ன ஆகார மழகெறிப்ப விருவருமாங் குடனிருந்தா ராவி போல்வார். |
(இ-ள்.) நீகாரம் மழை பொழிய - பனிநீர்மழை சொரியவும்,- வெள் நித்திலம் குடை நிழற்ற - வெண்ணிறமான முத்துக்குடை நிழச்செய்யவும்,- நீலம்வாள்கண் - கருங்குவளைமலர் போன்ற பிரகாசமான கண்களையும், பாகு ஆரும் மொழி - கருப்பஞ்சாற்றுப்பாகை யொத்த இன்சொல்லையுமுடைய, மடவார்- இளமகளிர், மணி கவரி - அழகிய சாமரங்களை, இருமருங்குஉம் - இரண்டு பக்கத்திலும், பயில வீச- பொருந்த வீசவும்,- ஆவி போல்வார் இருவர்உம் - (ஒருவர்க்கொருவர்) உயிர்போன்றநண்பர்களான கிருஷ்ணார்ச்சுன ரிரண்டு பேரும், கார் காலம் புகுந்து செழு காளம்முகில் இரண்டு ஒருபால் கலந்தது என்ன - கார்காலம் வரச் செழுமையான காளமேகங்களிரண்டு ஓரிடத்துக் கலந்தாற் போல, ஆகாரம் அழகு எறிப்ப - உடம்புஅழகை வீச,- ஆங்கு - அவ்விடத்தில் [அவ்யமுனைக்கரையின் சோலையில்], உடன்இருந்தார் - ஒருங்கு இருந்தார்கள்; (எ-று.) நீகாரமழைபொழிதல் முதலிய மூன்றும், அக்கோடைக்காலத்து வெப்பத்தைத் தணிக்கும் சைத்தியோபசாரமாக நிகழ்ந்தன வென்க. நீஹாரம் - வடசொல்: பனி யென்று பொருள். 'நீகார மழை பொழிய' என்றது - பனிநீரென்னும் ஒருவகை வாசனைநீரைச்சொரிய வென்றவாறு. பயில வீசுதல் - வெப்பந்தணித்தற்கு வேண்டிய காற்று உண்டாகும்படி இடைவிடாது விசையோடுவீசுதல். கார் காலத்து நீர்கொண்ட கருநிறமான மேகம் - கிருஷ்ணார்ச்சுனரது வடிவத்துக்கு நிறத்தால் உவமம். கார்காலம்' என்பது - ரகரம் இடையிட்டு வந்த ஆசெதுகை. 'கார்காலம்' என வலிமிகாதது, வருமொழி வடமொழியாதலி னென்க. இச்சருக்கத்தில் இதுவரை கிருஷ்ணார்ச்சுனர்களுடையசெய்தி கூறும் முகத்தால்ருதுவர்ணனை, பொழில்விளையாட்டு, நீர்விளையாட்டு, பூக்கொய்தல் என்னும்பெருங்காப்பிய இலக்கணங்களைக் கூறினர்; இச்சருக்கத்தில் எடுத்துக் கொண்டபொருளான காண்டவதகனவரலாறு இனிக் கூறப்படுகிறது. அதற்குத் தோற்றுவாய்செய்தவாறாகும் இச்செய்யுள். (740) வேறு. 20.- அக்கினிதேவன் அந்தணவடிவுகொண்டு அங்குவருதல். இனிய பான்முகந் தொழுக்குமா குதியென விலங்குமுப் புரிநூலும், தனது வெஞ்சிகைக் கொழுந்தெனப் புறத்தினிற் றாழ்ந்தசெஞ் |
|