பக்கம் எண் :

436பாரதம்ஆதி பருவம்

                              சடைக்காடும்,
புனித வெண்புகை மருங்குசுற் றியதெனப் புனைந்தவா
                                 டையுமாகி,
மனித வேதியர் வடிவுகொண் டவரெதிர் வன்னிவா
                              னவன்வந்தான்.

     (இ-ள்.) வன்னி வானவன் - அக்கினிதேவன்,- இனிய பால் முகந்து ஒழுக்கும்
ஆகுதி என - இனிமையான பாலை மொண்டெடுத்து ஆகுதியாகச் சொரியுந் தாரை
போல, இலங்கும் - விளங்குகிய, முப்புரி நூல்உம் - பூணூலையும், தனது வெம்
சிகைகொழுந்து  என - தன்னுடைய உஷ்ணமான சுவாலையின்கொழுந்து போல,
புறத்தனில் தாழ்ந்த - பின்புறத்திலே தொங்குகிற, செம் சடைகாடு உம் -
செந்நிறமானசடைத்தொகுதியையும், புனிதம் வெள்புகை மருங்கு சுற்றியது என -
பரிசுத்தமானவெண்ணிறமுள்ள புகை இடையிற் சுற்றினாற் போல, புனைந்த
ஆடைஉம் - தரித்தவஸ்திரத்தையும், ஆகி - உடையவனாய், மனித வேதியர்
வடிவு கொண்டு -மானுடமுனிவர் வடிவங்கொண்டு, அவர் எதிர் வந்தான் -
அந்தக் கிருஷ்ணன்அருச்சுனன் என்ற இருவரது எதிரிலேவந்தான்;

     அக்கினிபகவான் ஓர்இருடியின் வடிவங்கொண்டு ஸ்ரீகிருஷ்ணார்ச்சுனர்களின்
முன்னிலையில் வந்தன னென்பதாம். சந்தர்ப்பத்துக்கு ஏற்ற உவமையை
எடுத்துக்கூறிவருணித்தல் கவிசமத்காரமாதலால் அக்கினிதேவன் தரித்தவெள்ளிய
முப்புரிநூலுக்கு -அவ்வக்கினியில் மந்திரபூர்வமாகச்சொரியும் பால்தாரையையும்,
அவனது முடியிற்சிவந்து விளங்குகிற சடைக்கு - அவ்வாகுதி சொரிதலால்
மேலெழுந்துதோன்றுகிறசெந்நிறச்சுவாலையின் நுனியையும், அவன் இடையில்
உடுத்த ஆடைக்கு -அங்ஙனஞ் சொலித்தெரிகிற அக்கினியின் வெண்புகையையுமே
ஒப்பாகக் குறித்தார்;தற்குறிப்பேற்றவணி. ஓமதூமம் பரிசுத்திகர மானதால்,
'புனிதவெண்புகை' எனப்பட்டது. ஆகுதி - ஓமாக்கினியிற் சொரிவது. 'சடைக்காடு'
என்றது, அடர்த்திபற்றி.வேதியர் - வேதத்தை ஓதுதலோடு ஓதுவித்தற்கும் உரியவர்.

     இதுமுதல் இருபத்தைந்துகவிகள்- முதற்சீர் மாச்சீரும் ஈற்றுச்சீர் காய்ச்சீரும்,
மற்றவை விளச்சீர்களுமாகிவந்த அறுசீராசிரிய விருத்தங்கள்.            (741)

21.- அவ்வந்தணன் தன்னைஉபசரித்த
கிருஷ்ணார்ச்சுனர்களை உணவுவேண்டல்.

வந்தவந்தணன்வரவுகண்டிருவரும் வந்தெதிர்வணங்கித்தஞ்
சிந்தையன்பொடுவேதிகையெனத்திகழ் செம்பொனின்றவிசேற்ற
அந்தணாளனுங்குழிந்தபொற்கண்ணின னவிமணங்கமழ்வாயன்
உந்துவெம்பசிபெரிதுவல்லேயெனக் கோதனமிடுகென்றான்.

          (இ-ள்.) வந்த அந்தணன் வரவுகண்டு - வந்த அம்முனிவனுடைய
வரவைப்பார்த்து, இருவர்உம் - (கிருஷ்ணன் அருச்சுனன் என்னும்) இரண்டுபேரும்,
எதிர் வந்து வணங்கி - எதிர்கொண்டு வந்து நமஸ்கரித்து, தம் சிந்தை அன்பொடு -
தங்கள்மனத்திற் கொண்ட அன்புடனே, வேதிகை என திகழ் செம் பொனின் தவிசு
ஏற்ற - வேதிகைபோல விளங்குகிற மாற்றுயர்ந்த பொன்னினாலா