பக்கம் எண் :

440பாரதம்ஆதி பருவம்

ஏழுமேகங்களையும் அனுப்பி, (அவற்றைக்கொண்டு), தொகும் தராதலம் இறுதிபோல்
நெடு புனல் சொரிந்து - நெருங்கிய உலக முடிவுகாலத்திற்போல மிக்கமழைநீரை
(என்மேற்) சொரிந்து, என்னை அவித்திடும் - என்னைத் தணித்துவிடுவான்;
முகுந்தன்ஆன் நிரை புரந்த ஆறு என - கண்ணபிரான் (கோவர்த்தனமென்னும்)
மலையையெடுத்துக் குடையாகப்பிடித்து மழையைத்தடுத்துப்) பசுக்கூட்டங்களைப்
பாதுகாத்தருளியவிதம்போல, ஒருமுனை பட விலக்கிற்பின் - ஒருமுகமாக
(அம்மழையைத்) தடுத்துவிடுவதானால், மிகுந்த தாகம்உம் எண்ணம்உம் முடிந்திடும்-
அதிகமான (எனது) ஆசையும் கருத்தும் நிறைவேறும்: வேண்டுவது இது - (யான்)
வேண்டுவது இதுவே," என்றான் - என்று சொன்னான், (அக்கினி தேவன்); (எ-று.)

     முகம் - வாய். புருஹூதனென்பது - புருஹூதன் என்று பிரிந்து,
(யாகங்களில்)மிகுதியாக அழைக்கப்படுபவனென்றும், புருவென்னும் அசுரனைக்
கொன்றவனென்றும்பொருள்படும். சொரிந்த - சொரிவித்து எனப்
பிறவினைப்பொருளில் வந்த தன்வினை.தாகம் என்பது - இங்கு இலக்கணையாய்ப்
பசியென்னும் பொருளில் வந்ததெனினுமாம்.

     சுவேதகி யென்ற பிரசித்தனாய்ச் சிறந்த அரசன் எப்போதும் யாகங்கள்
செய்தலிலேயே விருப்பமுடையவனாய் அநேகயாகங்கள் செய்துமுடித்து
மேலும்மேலும் இடைவிடாது யாகஞ்செய்யத் தொடங்குகையில், உடனிருந்து
யாகத்தைநடத்துபவரான இருத்துவிக்குகள் புகையினால் மிகக்கலங்கிய
கண்களையுடையராய்மிகவருந்தி 'இனி எம்மாலாகாது' என்று அவ்வரசனைக் கை
விட்டனர். அரசன்எவ்வளவுவேண்டியும் கண்கலங்கிய அவர்கள் வாராராகவே
அவர்களநுமதிபெற்றுவேறு இருத்துவிக்குகளை உதவிகொண்டு தொடங்கிய
வேள்வியை முடித்தனன். பின்புஒரு கால் அவன் நூறு வருஷகாலஞ்
செய்யத்தக்கதொரு பெருயாகத்தைப் புரியவிரும்ப, அவனுக்கு இருத்து
விக்குகளெவருந் துணை வந்திலர். அம்மன்னவன்சாமமுந்தானமுமாகிய
உபாயங்களால் மிகமுயன்று பார்த்தும் துணை வராத அந்தஇருத்துவிக்குகளை
நோக்கி 'என்மேல் யாதொரு குற்றமும் இல்லாமலிருக்கையில்என்னை நீங்கள்
கைவிடுதல் முறைமையன்றே. நீங்கள் என்னைக் கைவிட்டால்யான்வேள்வி
செய்வித்தற் பொருட்டு வேறு இருத்துவிக்குகளைத் துணைக்கொள்வேன்'
என்று கோபத்தோடு கூறியதற்கு அவர்கள் 'வேள்வி செய்வித்துச்செய்வித்து
வலியொடுங்கி மிக இளைத்த எங்களை நீ விட்டிடு; நீ விரைவில் வேள்விசெய்ய
வேண்டுவையாயின் சிவபிரான்பக்கற் செல்: அப்பெருமான் உன்னை வேட்பிப்பன்'
என்று சொல்லினர். இங்ஙனம் மறுத்துச் சொன்ன சொற்கேட்ட வேந்தன் உடனே
கைலாசபருவதத்தை யடைந்து கடுந்தவம் புரிய, அதற்கு இரங்கித் தரிசனந்தந்த
சங்கரபகவான் 'யாது வரம் வேண்டுதி? என்ன, அவ்விராசரிஷி என்னைநீ
வேட்பித்தருளவேண்டும்' என்றான். அதுகேட்டருத்திரமூர்த்தி, புன்சிரிப்போடு
'யான்அதற்கு உரியனல்லேன்; நீ செய்த நற்