பக்கம் எண் :

காண்டவதகனச் சருக்கம்441

பெருந்தவமும் பழுதுபடலாகாது; நான் சொல்லுகிறபடி செய்வையாயின், பின்பு
உன்னை வேட்பிப்பேன்: பன்னிரண்டுவருஷகாலம் இடைவிடாமல் அக்கினியை
நெய்த்தாரைகளால் திருப்தி செய்வையாயின், நின்கருத்தை நிறைவேற்றுவேன்'
என்றுசொல்ல, சுவேதகிராசன் அவ்வாறே செய்து முடித்துப் பன்னிரண்டு
வருஷங்கடந்தவுடனே மீண்டுஞ் சிவபெருமானையடைந்து வேள்வி செய்வித்தற்கு
அழைக்க, அக்கடவுள் 'அது அந்தணர் தொழில்; ஆதலால், அதனை நான்
செய்யமாட்டேன்: எனது அம்சமான துருவாசமகாமுனிவன் உன்னைவேட்பிப்பன்'
என்று சொல்லி, அரசனை வேள்விக்கு வேண்டிய உபகரணங்களைச்சேர்க்கச்
சொல்லி,அவற்றை அவன் சேர்த்தவுடனே துருவாசமுனிவனை யழைத்து 'இவனை
நீவேட்பிப்பாய்' என்றுகட்டளையிட, அவ்வாறே அம்முனிவன் வந்து உதவியதனால்
அப்பெருவேள்வி ஒருகுறைவுமின்றி நிறைவேறிற்று; இங்ஙனம் நெடுநாள் மிக்க
நெய்ம்முதலியவற்றை யுண்டதனால் அக்கினிதேவன் நோயடைந்து ஒளி மழுங்கி
வாட்டமுற்று வலியொடுங்கிப் பிரமனையடைந்து 'என்னை நோய் தவிர்த்தருளுக'
என்று வேண்ட படைத்தற்கடவுள் பன்னீராண்டு இடைவிடாது நெய்பருகியதனால்
நினக்கு நேர்ந்த வாட்டம் ஒழிந்திடும்; அசுரர்கட்கு இருப்பிடமான
காண்டவமென்னும்வனத்தை முன்பு ஒருகால் தேவர்கள் கட்டளையால் நீ
எரித்தனையன்றோ? பின்பு அதில் பலவகைப்பிராணிகள் வசித்துவருகின்றன; நீ
சென்றுஅக்காட்டை மீண்டும் எரிப்பையாயின், அப்பிராணிகளின்
உடற்கொழுப்பினால்திருப்தனாகி நோய்நீங்கி முந்தின நிலையையடைவாய்' என்று
அருளிச்செய்ய, உடனேதீக்கடவுள்வெகு வேகத்தோடு ஓடி அவ்வனத்தைப்பற்றி
யெரிக்கத்தொடங்க,அங்கிருந்த யானை முதலிய பிராணிகளெல்லாம் மிகமுயன்று
துதிக்கை முதலியவற்றால்விரைவாக நீர்கொணர்ந்து சொரிந்து நெருப்பை நனைத்து
அவித்திட்டன. இவ்வாறேஒருமுறைபோல ஏழுமுறை முயன்றும் அவ்வனத்தை
யெரிக்கமாட்டாமற்போன பின்புஅக்கினிபகவான் மீண்டும் பிரமனை யடைந்து
செய்திகூற, அப்பிரமன் சிறிதுபொழுதுஆலோசித்து 'நரநாராயணர்களின்
அவதாரமான கிருஷ்ணார்ச்சுனர்கள்காண்டவவனத்தினருகில் ஒருங்கு கூடியுள்ளார்:
நீ சென்று வேண்டிஅவர்களுதவியைப் பெற்றால் - அவ்வனத்தைத்
தவறாமலெரித்திடலாம்' என்றுசொல்ல, அங்ஙனமே அக்கினி அவர்களை யடுத்துத்
தந்திரமாகத் தன் கருத்தைத்சொல்லிக் காரியத்தை முடித்துக் கொள்ளலானான்
என்று முதனூலிற்கூறப்பட்டவரலாறு உணரத்தக்கது.

26.- 'நீ வேண்டியபடிகொள்க' என்று அநுமதிதந்த
அருச்சுனனுக்கு அக்கினிதேவன் கண்ணனருளால்
வில்முதலியன அளித்தல்.

என்றபோதிலுன்னிச்சையின்படியுணா வீந்தனமிமைப்போழ்தில்
சென்றுகொள்கெனத்தனஞ்சயன்கூறலுஞ்சிந்தைகூர்மகிழ்வெய்தி
மன்றலந்துழாய்மாயவனருளினால்வடிக்கணைமாளாமல்
துன்றுதூணியுஞ்சாபமுமிரதமுஞ்சுவேதவாசியுமீந்தான்.