மலையிடைப்பற்றியெரியும் அக்கினிச்சுவாலையின் வருணனை, இது: செந்நிறமும்,மலையின்மேல் விளங்குதலும் பற்றியஉவமை. கவான் - இலக்கணையாய் மலையின்இடைப்பகுதியையுணர்த்திற்று. கதுமென-விரைவுக்குறிப்பிடைச் சொல். செங்கந்தாள்முதலிய மூன்றும் விருக்ஷவர்க்கங்கள். குலிகம் - இங்குலிகமென்பதன் முதற்குறைவிகாரம்; அது, சாதிலிங்கமெனப்படுஞ் செந்நிறச்சரக்கு. 'பார்த்தகண்கள் விட்டேகலாவகை நிறம்பரந்த' என்றது, மலைத்தாதுவின் அழகை யுணர்த்தும்; இதனை,சிந்தாமணியில் 'கண் வாளறுக்குங்கமழ்தார்' என்றார் போலக் கொள்க. மலை -காண்டவ வனத்தினிடைப்பட்ட தென்க. (755) 35. | தளைத்தபாதவத்தலைதொறும்பற்றின சருகுதிர்த்திளவேனில் கிளைத்துமீளவும்பொறியளியெழவளர் கிசலயங்களும்போன்ற திளைத்தவேர்முதற்சினையுறவெரிவனதீபசாலமும்போன்ற வளைத்தகானிடைமெலமெலவுள்புகு வன்னியின்சிகாவர்க்கம். |
(இ-ள்.) வளைத்த கானிடை - (தன்னால்) வளைக்கப்பட்ட அக்காட்டிலே, மெலமெல உள் புகு - மெல்லமெல்ல உள்ளேபுகுகிற, வன்னியின் சிகா வர்க்கம் - அக்கினியினது சுவாலையின் தொகுதிகள்,- தளைத்த பாதவம் தலைதொறும் பற்றின- (தம்மைப் பார்ப்பவர்களுடையகண்களையும் மனத்தையும்வேறொன்றிற்செல்ல வொட்டாமல் தம்மிடத்திற்) கட்டுகின்ற [மிக அழகிய] மரங்களின் நுனிகளிற் பற்றினவையாய், (அந்நிலையில்), சருகு உதிர்த்து - (பின் பனிக்காலத்தில்] சருகுகளையுதிரச்செய்து, இளவேனில் - இளவேனிற்காலத்திலே, பொறி அளி எழ மீளஉம் கிளைத்து வளர் - புள்ளியையுடைய வண்டுகள் மொய்த்தெழும்படி மீண்டுந்தோன்றி வளர்கிற, கிசலயங்கள்உம் போன்ற - செந்தளிர்களையும் போன்றன; (மற்றும்அவ்வக்கினிச்சுவாலைகள்), திளைத்த வேர்முதல் சினை உற எரிவன - நெருங்கியவேர்முதற் கிளைவரையிலும் (மரங்களில்) முற்றும்பற்றியெரிபவையாய், (அந்நிலையில்),தீபசாலம்உம் போன்ற - விளக்குகளின் கூட்டங்களையும் போன்றன; (எ -று.) அக்கினிச்சுவாலையின் வருணனை, இது. முன்னிரண்டடிகளில் மரங்கள் பற்றியெரியும்போது சருகுகளெல்லாம் உதிர்ந்து புதியசெந்தளிர் வெடிக்கப்பெற்ற மரங்கள் போன்றன என்றார்: தன்மைத்தற்குறிப்பேற்றவணி: நிறமும்வடிவும் பற்றியது.சுவாலைகளின் மேலிருந்து அனற்பொறிகளோடு எழுகிற புகைகள், பொறிகளையுடையவண்டுகள்போலு மென்பார், 'பொறியளியெழவளர் கிசலயம்' என்றார். தீபசாலம் -எரிமரங்களின் தொகுதியென்பாருமுளர். 'சாபவெங்கணை தைத்துகுசோரியால்தீபமென்னவும்' என்பர்மேல் முதற்போர்ச்சருக்கத்தும். செந்தழலொளியிற் பொங்கும்தீபமா மரங்கள்' என்றது பெரிய புராணம். (756) 36.- அனற்பொறிகளின் வருணனை. தழைத்தபேரொளித்திவாகரன்கரங்கள்போய்த் தடவியவ்வடவிக்கட் பிழைத்தகாரிருட்பிழம்பினைவளைந்துடன் பிடித்தெரிப்பனபோலும் |
|