யென்பது, மானின் ஆண்பாற்பெயர், 'இரலை' என வந்ததனால் 'உழை' என்பது - அதன் பெண்பாலின்மேல் நின்றது. இனி, இரலை உழை யென்பவற்றை மானின்சாதி பேதமெனலுமாம். (759) 39. | காழுடைப்புறக்கழைகளின்துளைதொறுங் கால்பரந் திசைக்கின்ற, ஏழிசைக்குளமுருகிமெய்புளகெழ விரைகொளுமசுணங்கள், தாழழற்சுடர்சுடச்சுடவெடித்தெழுசடுலவோசையின்மாய்ந்த, ஊழியிற்புயலுருமினான்மடிந்திடு முரகர்தங்குலம்போன்ற. |
(இ-ள்.) காழ் உடை புறம் - வயிரமுள்ள புறத்தையுடைய கழைகளின் - மூங்கில்களின், துளை தொறும் - துவாரங்களிலெல்லாம், கால் பரந்து - காற்றுப் பரவுதலால், இசைக்கின்ற - ஒலித்தெழுகிற, ஏழ் இசைக்கு - ஏழுவகைச்சுரங்களையுங்கேட்டு அவற்றிற்கு, உளம் உருகி - மனம் கரைந்து, (அவ்வானந்தத்தால்), மெய் புளகு எழ - உடம்பில் மயிர்ச்சிலிர்ப்பு உண்டாக, (அந்தஇசையைக்கேட்டதனாலான ஆனந்தத்தாற்பரவசப்பட்டு அங்கு நின்று புடைபெயராமல்), இரை கொளும் - (அந்தஇசையையே) உணவாகக்கொள்ளுகிற, அசுணங்கள் - அசுணமென்னும்பறவைகளானவை -, தாழ் அழல் சுடர் - மிகுகிற அக்கினிச்சுவாலைகள், சுட சுட - மேன்மேற் சுடுதலால், வெடித்து எழு - (அம்மூங்கில்கள்) வெடித்ததனால் ஒலித்தெழுகிற, சடுலம் ஓசையின் - பயங்கரமான ஓசையினாலேயே, மாய்ந்த - இறந்தன; (அங்ஙனம் ஒலியின்கடுமைபற்றியே யிறந்த அவை), ஊழியில் - கற்பாந்த காலத்தில் தோன்றுகிற, புயல் மேகங்களின், உருமினால்- இடியோசையினால், மடிந்திடும் - இறந்திடுகிற, உரகர்தம் குலம் - நாகசாதியாரின்கூட்டங்களை, போன்ற - ஒத்தன; (எ-று.) இனியஇசையொலிகளைக்கேட்டவளவில் மகிழ்ந்துகளித்தலும், கடுமையான பறையொலிபோன்ற ஒலிகளைக் கேட்டவளவிலே பொறாமல் வருந்தியிறத்தலும், அசுணமென்னும் பறவைச்சாதியின் இயல்பு; காண்டவவனத்திலுள்மூங்கிற்காட்டில் துளையுள்ள மூங்கில்களின்மீது காற்று அடிக்கும்போது இயல்பாகவுண்டாகிற ஒலி இன்னிசையா யமைய, அதனை யறிந்து அசுணப் பறவைகள் அம்மூங்கில்களினருகில்வந்துகூடி அவ்வொலியைக்கேட்டு ஆனந்தங் கொண்டிருந்தன; அச்சமயத்தில்அம்மூங்கில்களைத்தீப்பற்றி யெரித்தலால் அவை வெடிக்கையிலுண்டான கடியஓசையைக் கேட்டு அம்மாத்திரத்திலே அதனாலேயே அப்பறைவைகள் இறந்தன:தம்மேல் தீப்பற்றியெரிக்குமளவும் உயிர்வாழ்ந்து பின்பு தீயெரித்தலா லிறந்தனவல்ல;இங்ஙனம் அவை, வேறோர்ஊறும் படாதிருக்கையிலே இறந்துபடுதற்கு,கற்பாந்தகாலத்திற் பெருமழை பொழிந்து உலகங்களை யழித்தற்கு வானத்திலெழுகிறமேகங்களின் இடியோசையைக் கேட்டமாத்திரத்திலே கீழுலகில் இருந்தபடியேயிறந்தொழிகிற நாகசாதியாரை உவமைகூறினார். (காற்றடித்தலாலொலிக்கிற மூங்கில்கள்,வடமொழியில் 'கீசகம்' எனப்படும்.) மேல்வைரமாத்திரமேயுடையவை - பனை, தெங்கு, மூங்கில் முதலிய: அவை - புறக்காழன புன்மரம் பெண்மரம்என்று கூறப் |