படுதலால், 'காழுடைப் புறக் கழைகள்' என்றார். (உள்வயிரமுள்ள மரங்கள் - அகக்காழன வன்மரம் ஆண்மரம் என்று கூறப்படும்.) தீப்பற்றி யெரிதலாலுண்டாகிற ஓசை, சடுலவோசையெனப்படும். (760) 40. | அனையபோதிலவ்விபினசாலங்களி னார்தருக்களினீண்ட சினைகடோறும்வாழ்சிகாவலகலாபமேற் செறிதருதீச்சோதி பனையினீளுடற்பணிகளையலகினாற் பற்றலிற்படப்பந்திப் புனையுமாமணிநிழல்பரந்தெழுந்தெனப் பொலிந்திலங்கினமா[தோ. |
(இ-ள்.) அனையபோதில் - (அம்மகாவனத்தைத் தீப்பற்றி யெரிக்கிற) அப்பொழுதில், அ விபின சாலங்களின் - அந்தக் காடுகளின் கூட்டங்களில், ஆர் -பொருந்திய, தருக்களின் - மரங்களினுடைய, நீண்ட சினைகள் தோறுஉம் - நீண்டகிளைகளிலெல்லாம், வாழ் - தங்குகிற, சிகாவலம் - மயில்களின், கலாபம் மேல் -தோகையில், செறி தரு - நன்றாகப் பற்றுகிற, தீ சோதி - அக்கினிச்சுவாலைகளானவை,- பனையின் நீள் உடல் பணிகளை - பனைமரம் போன்றநீண்ட உடம்பையுடைய பாம்புகளை, அலகினால் பற்றலின் - (அம் மயில்கள் தம்)வாயலகினாற் கௌவுதலினால், படம் பந்தி புனையும் மா மணி நிழல்பரந்துஎழுந்துஎன - (அந்நாகங்களின்) படவரிசையிலுள்ள அழகிய சிறந்தமாணிக்கத்தினதுஒழுங்காகப் பரவுந்தன்மையுள்ள ஒளி (அம்மயில்களின் தோகைமேற்) பரவி விளங்கினாற்போல, பொலிந்து இலங்கின - மிகுதியாய் விளங்கின;(எ-று.) மயிலின் தோகையிற் பற்றிய சிவந்த அக்கினிச்சுவாலையின் விளக்கத்தை, மயில்களால் அலகிற் கௌவப்பட்ட நாகங்களினுடைய மாணிக்கத்தின் சிவந்தஒளி அம்மயில்களின் தோகைமேற் பாய்ந்து விளங்குதல் போலு மென்றார்; தற்குறிப்பேற்றம். ஸிகாவல மென்பதற்கு சிகையையுடைய தென்று பொருள்; ஸிகா -உச்சிக் கொண்டை: வலம் என்பது, வடமொழிவிகுதி. படர்பந்தி என்றும் பாடம். (761) 41. | ஆசுகன்றனோடடவியைவளைத்தன னாசுசுக்கணிமேன்மேல் வீசுகின்றபுலிங்கசாலமும்புகல் வேறெமக்கிலதென்று பாசிளங்கிளிபூவைகள்வெருவிமெய் பதைத்துளந்தடுமாறிப் பேசுகின்றசொற்கேட்டலுநடுங்கின பிறபறவைகளெல்லாம். |
(இ-ள்.) 'ஆசுசுக்கணி - அக்கினிதேவன், ஆசுகன்தனோடு - (தனது நண்பனாகிய) வாயுதேவனுடனே, அடவியை வளைத்தனன் - இக்காட்டை (எப்புறத்தும்) வளைத்துக்கொண்டான்; புலிங்க சாலம் உம் - அனற்பொறிகளின் கூட்டமும், மேல் மேல் வீசுகின்ற - மேலும் மேலும் வீசுகின்றன; எமக்கு வேறு புகல்இலது - நமக்கு வேறு புகலிடமில்லை,'என்று-,பசு இளங் கிளிபூவைகள் - பசுநிறமுள்ள இளமையான கிளிகளும் நாகணவாய்ப்பறவைகளும், வெருவி மெய் பதைத்து உளம் தடுமாறி பேசுகின்ற - அஞ்சி உடல்நடுங்கி மனம் நிலைகலங்கிப் பேசுகிற, சொல் - சொல்லை, கேட்டலும் - கேட்டவளவிலே, பிற பறவைகள் எல்லாம்நடுங்கின - மற்றைப்பக்ஷிகள்யாவும் நடுக்கமுற்றன; (எ-று.) |