பக்கம் எண் :

452பாரதம்ஆதி பருவம்

     பறவைகளிற் கிளிக்கும் பூவைக்குமேபேசுந்திறமிருத்தலும்மற்றவைகட்கு
அத்திறமில்லாமையுந் தோன்ற, இங்ஙனங் கூறினார். மற்றைப்பறவைகள்
அவற்றின்பேச்சொலியைச் செவியுள்ளவளவே யன்றி அப்பேச்சின் பொருளை
யுணருந்திறமில வாயினும், அவை உடல் பதைத்துப்பேசுங் குறிப்பினால்
அக்கருத்தையுணர்ந்தன வென்க. ஆசுகன்தனோடு அடவியை வளைத்தனன்
ஆசுசுக்கணியென்றது, நெருப்பு மேன்மேற்பற்றிவளர்தற்கு அனுகூலமாகக் காற்று
வீசுகிறதன்மையை எடுத்துக்கூறியது: இது, இங்ஙனம் நம்மையெரித்தழிக்கத்
தொடங்கியஅக்கினிக்கு நண்பனான வாயு, நாம் இவ்விடத்தை விட்டு
விரைந்துபறந்தோடுதற்குஉதவான்' என்பது குறித்தற்குப் போலும். ஆஸு கன்என்ற
வடமொழிப்பெயர் -விரைவாகச் செல்பவ னென்றும், ஆஸு ஸு க்ஷணி என்ற
வடமொழிப்பெயர் நன்றாகஎரிக்க விரும்புபவனென்றும் உறுப்புப் பொருள்படும்.
                                                              (762)

42.நெஞ்சிலீரமுநீதியுங்குடிபுகா நிருதர்சென்னியில்வன்னி
குஞ்சிநீடுறவளர்வபோலசைந்துசெங் கொழுந்துவிட்டனமேன்[மேல்
வஞ்சிநேரிடையரக்கியர்நகமுழு மதிசிவப்புறத்தீட்டும்
பஞ்சிபோன்றன வவரவர்பதயுகம் பற்றியசிகைவன்னி.

     (இ-ள்.) நெஞ்சில் ஈரம்உம் நீதிஉம் குடிபுகா - மனத்தில் அன்பும் நீதியும்
வந்துதங்குதலில்லாத, நிருதர் - (அவ்வனத்திலுள்ள கொடிய)அரக்கர்களுடைய,
சென்னியில்- தலையிற்பற்றிய, வன்னி - அக்கினிச்சுவாலைகள்,- நீடுற வளர்வ
குஞ்சி போல் -நீண்டுவளர்வனவான (அவர்களுடைய) செம்பட்டமயிர்கள்போல,
அசைந்து மேல்மேல் செம் கொழுந்து விட்டன - அசைந்து மேலும் மேலும்
செந்நிறமான ஒளியைவெளிவீசி யெழுந்தன; அவர் அவர் பத யுகம் பற்றிய -
அந்தந்த அரக்கியர்களுடையகால்களிரண்டிலும் பற்றிய, சிகை வன்னி [வன்னிச்
சிகை] - அக்கினிச் சுவாலைகள்,-வஞ்சிநேர் இடை அரக்கியர் நகம் முழு மதி
சிவப்பு உற தீட்டும் பஞ்சி போன்றன - வஞ்சிக்கொடிபோன்ற மெல்லிய
இடையையுடைய அவ்விராக்கதஸ்தீரிகள் (தங்கள்) நகங்களாகிற பூர்ணசந்திரர்கள்
செந்நிறம்பொருந்தும்படி (அவற்றிற்கு) ஊட்டுகிற செம்பஞ்சுக் குழம்புகளை
யொத்தன; (எ-று.)

     அரக்கர்களுடைய தலையிற் பற்றிய அக்கினிச்சுவாலை - அவர்கள்
முடியிலுள்ள செம்பட்டமயிர்களையும், அவ்விராக்கத மாதர்களுடைய கால்
நுனிகளிற்பற்றிய அக்கினிச்சுவாலை - அவர்கள் தங்கள் வெண்ணிறமான நகம்
செந்நிறமடைந்துவிளங்கும்படி யூட்டுஞ் செம்பஞ்சுக் குழம்புகளையும் ஒக்குமென்றார்.
நக முழுமதி -சந்திரமண்டலம் போன்ற நகங்களென்று முன்பின்னாகத்தொக்க
உவமைத்தொகையாகவுங் கொள்ளலாம்.                           (763)

43.முப்புரங்களைமுக்கணன்முனிந்தநாண் மூவரம்முழுத்தீயில்
தப்பினாருளர்காண்டவவடவிவாழ் தானவரியாருய்ந்தார்
பைப்புறத்தணிமணியொளிபரந்தெனப் பஃறலைகளிற்பற்றி
வெப்புறுத்தலினுரகருந்தங்கள்வாய் விடங்கள் கொன்றெனவீழ்ந்[தார்.