(இ-ள்.) முப் புரங்களை - திரிபுரங்களை, முக் கணன் - சிவபிரான், முனிந்த நாள் - கோபித்து எரித்த காலத்தில், அ முழு தீயில் தப்பினார் - அந்தப் பெருந்தீயினின்று தப்பிப்பிழைத்தவர், மூவர் உளர் - மூன்று அசுரராயினும் உண்டு; காண்டவம் அடவி வாழ் தானவர் யார் உய்ந்தார் - இக்காண்டவவனத் (தை யெரித்தகாலத்தில் இ) தில் வாழ்ந்த அசுரரில் தப்பிப்பிழைத்தவர் எவர்? [எவருமில்லை; எல்லாவசுரரும் இறந்துபட்டன ரென்றபடி]; உரகர்உம் - நாகர்களும்,- பை புறத்துஅணி மணி ஒளி பரந்து என - (தமது) படங்களின் மேலுள்ள அழகியமாணிக்கத்தின்செந்நிறமான ஒளி பரவினாற்போல, பல் தலைகளில் பற்றி வெப்பு உறுத்தலின் -(தங்கள்) தலைகள் பலவற்றிலும் நெருப்புப்பற்றிச் சுடுவதனால், தங்கள் வாய் விடங்கள்கொன்றுஎன வீழ்ந்தார் - தங்கள்வாயிலுள்ள விஷங்களே (தங்களைக்) கொன்றார்போலஇறந்து கீழ்விழுந்தார்கள்; (எ-று.) மிச்சமின்றி அசுரநாசம் நிகழ்ந்த தன்மையில் திரிபுரதகனத் தினுங்காண்டவ தகனத்துக்கு உள்ளமேன்மையை முன்னிரண்டடிகளி லெடுத்துக்காட்டினர்; வேற்றுமையணி. திரிபுரவாசிகளான அசுரர்களில் மூவர் தப்பியது கீழ் வாரணாவதச் சருக்கத்து 131 ஆஞ்செய்யுளினுரையிற் கூறப்பட்டது. பல் + தலை = பஃறலை. (764) 44.- காண்டவவனத்தில் தீப்பற்றிய செய்தியை இந்திரன் உணர்தல். புகைப டப்படக் கரிந்தன பொறியினாற் பொறியெழுந் தனவானின் மிகைப டைத்தவச் சுரபதி யாயிரம் விழிகளுங் கணப்போதில் தகைவ றக்கழை முதலிய தருக்களின் சடுலவா ரவமிஞ்சித் திகைய னைத்தினும் பரத்தலிற் செவிகளுஞ் செவிடு பட்டனசேர. |
(இ-ள்.) (இங்ஙனந் தீப்பற்றியவளவிலே), கணம் போதில் - ஒருக்ஷணப்பொழுதிலே, வானில் - மேலுலகத்திலுள்ள, அ சுரபதி - அந்த (க்காண்டவவனத்தைக் காவல் செய்பவனான) இந்திரனுடைய, மிகை படைத்த ஆயிரம்விழிகள்உம் - அதிகமாகவுள்ள ஆயிரங்கண்களும், புகை பட பட - (அவ்வக்கினியின்) புகை (மேற் சென்று) மிகுதியாகப் படுதலால், கரிந்தன - கருகின [பெருங்கோபங் கொண்டன];் பொறியினால்-(அவ்வக்கினியின்) பொறிகள் மேற் சென்றுபடுதலால், பொறி எழுந்தன - (கோபாக்கினியின்) பொறிகள் கிளம்பப் பெற்றன;கழைமுதலிய தருக்களின் - மூங்கில் முதலிய மரங்களில் (நெருப்புப்பற்றி யெரிதலாலுண்டாகிய), சடுலம் ஆரவம் கடுமையான ஒலி, மிஞ்சி-மிகுந்து, தகைவு அற -தடையில்லாமல். திகை அனைத்தின்உம் பரத்திலின் - திக்குக்களிலெல்லாம் பரவியதனால், செவிகள்உம் சேர செவிடு பட்டன - (அவ்விந்திரனுடைய) காதிரண்டும்ஒருசேரச்செவிடாயின; (எ - று.) அத்தீயின் புகையும் பொறிகளும் ஆரவாரமும் மேலேழுந்து இந்திரலோகமளவுஞ் செல்ல, அவற்றை இந்திரன் கண்ணினாலுங் காதினாலும் உணர்ந்தமாத்திரத்திலே வருந்திக்கண்கள் தீப்பொறி யெழப் பெருங்கோபங் கொண்டனனென்பதாம் இவ்வருணனையிற் |