பக்கம் எண் :

454பாரதம்ஆதி பருவம்

பொறிமுதலியவற்றின் மிகுதியும் செயலுந் தோன்றும், கண்ணி
ரண்டேயன்றிக்காட்சிப்புலனுக்கு வேண்டாதனவான மற்றைக்கண்களெல்லாம்
புகைபடுதலாலும் பொறிபடுதலாலும் வருந்துதற்கே காரணமாதலால் அநாவசியமென்று
அச்சமயத்திற் கருதும்படியிருந்தனவென்பது தோன்ற, 'மிகைபடைத்த ஆயிரம்விழிகள்
'என்றார்.

வேறு.

45.-கிருஷ்ணார்ச்சுனர் காண்டவவனத்தையெரிப்பித்தலை
இந்திரன் கண்ணுறல்.

விரதமேற் கொண்டு செம்பொன்மால் வரையை விரிசடர் சூழ்
                                   வரு வதுபோல்,
இரதமேற் கொண்ட வநுசனுஞ் சுதனு மிமைப்பினிற்
                                பன்முறை தேர்ந்து,
சரதமேற் கொண்டு சரிப்பதுந் தனது தாவகம்
                                 பாவகன் புகுந்து,
பரதமேற் கொண்டு நடிப்பதுங் கருதிப் பார்த்தனன்
                                  பாகசா தனனே.

     (இ - ள்.) விரி சுடர் - பரந்த கிரணங்களையுடைய சூரியன், விரதம் மேல்
கொண்டு -(தவறாத) நியமத்தை மேற்கொண்டு, செம் பொன்மால் வரையை
சூழ்வருவதுபோல் -மாற்றுயர்ந்த பொன்மயமான பெரியமகாமேருமலையைப்
பிரதட்சிணஞ்செய்துவருவதுபோல, இரதம் மேல்கொண்ட அநுசன்உம் சுதன்உம் -
தேரின்மேலேறிய(தனது) தம்பியான கிருஷ்ணனும் (தனது) மகனான அருச்சுனனும்,
இமைப்பினில்-ஓர்இமைப்பொழுதினுள்ளே, பல்முறை - பலமுறை, தேர்ந்து -
ஆராய்ந்து, சரதம்மேற்கொண்டு - (அக்கினிதேவனுக்குத் தாம் துணைசெய்வதாக
உறுதிமொழிகூறிய)சத்தியத்தை மேற்கொண்டு, சரிப்பதுஉம்- (அவ்வனத்தைச்)
சூழ்ந்துசெல்லுதலையும், தனதுதாவகம் - தன்னுடைய காட்டில், பாவகன் - அக்கினி,
புகுந்து - பிரவேசித்து, பரதம்மேற்கொண்டு நடிப்பதுஉம் - பரதசாஸ்திர விதியைத்
தவறாமற்கொண்டுகூத்தாடுவதையும், பாகசாதனன் - இந்திரன், கருதி பார்த்தனன் -
கருத்தோடுநோக்கினான்;  (எ-று.)

     வானத்தையளாவி யுயர்ந்தெழுந்து விளங்குகின்ற மேருமலை -
வானத்தையளாவிப் பற்றியெரிகிற காண்டவவனத்துக்கும், அம் மேருகிரியை
ஆயிரங்கிரணனான சூரியன்தேர்மேற்கொண்டு இடைவிடாது சூழ்வருதல்-
அவ்வனத்தைக் கிருஷ்ணார்ச்சுனர் தேரிலேறி இடைவிடாது சூழ்வருதற்கும்
உவமையெனக் காண்க. எப்புறத்திலும் எவரும் அவ்வக்கினிக்கு இடையூறு
செய்யாதிருத்தற்பொருட்டும், அவ்வனத்திலுள்ள பிராணிகள் தப்பியோடி
வெளிச்செல்லாதபடி தவிர்த்தற்குமாக இருவரும் இங்ஙனம் குறிக்கொண்டு
சூழ்வருவாராயினர். விரதமாவது - இன்னவாறுசெய்வேனென்றுதனது ஆற்றலுக்கு
ஏற்பவரைந்துகொள்வது. அருச்சுனன்போர்க்கோலங் கொண்டுதேரேறினதையே
கீழ்க்கூறினராயினும், கண்ணன் அங்ஙனந்தேரேறினதையும் உபலக்ஷணத்தாற்
கொள்க. (கீழ் 27 - ஆம் கவியின் இரண்டாமடிக்கு - கண்ணபிரான்
அருச்சுனனுக்குத்தேர்ப்பாகனாயமர்ந்து தேர்செலுத்த என்று உரைப்பாரு முளர்;
அது, முதனூலோடுபொருந்தாது. இருவரும் இரண்டு தேரிலேறி
யுத்தசந்நத்தராயிருந்தனரென்றுவியாசபகவான் கூறியுள்ளார்.