பக்கம் எண் :

458பாரதம்ஆதி பருவம்

யையு முடைய, முகிலின் வாய் - மேகங்களினிடத்தில் (உண்டாகிய), ஒலி -
முழங்கங்களானவை, - ஏறிய களிறு பிளிறு நீடு ஒலிஉம்- (இந்திரன்) ஏறிவந்த
(ஐராவத) யானை கர்ச்சிக்கின்ற பேரொலியும், எடுத்த வில் நாண் தெறித்த
ஒலிஉம் -(அவன்) கையிலேந்திய வில்லின் நாணியை (விரலால்)
தெறித்தலினாலாகிய ஓசையும்,சூறிய இமையோர் பெரு நகை ஒலிஉம் - சூழ்ந்த
தேவர்களுடைய பெருஞ் சிரிப்பினொலியும், துந்துபி குழாம் அதிர் ஒலிஉம் -
(தேவர்கள் முழக்குகிற) துந்துபியென்னும் வாத்தியங்களின் கூட்டம் முழுங்குகிற
முழக்கமும், கூறிய அனலன் சடுலம்வல் ஒலிஉம் - கீழ்க் கூறப்பட்ட
அக்கினியினுடைய வலிய கடுமையான ஓசையும்,குறைபட - குறையும்படி, திசை
தொறுஉம் மிகுந்த - திக்குக்கள் தோறும் மிகுந்தன;(எ-று.) -ஏ - ஈற்றசை.

     எல்லாவோசைகளையும் அடக்கி மேககோஷங்கள் மிக்குத் தோன்றின
என்பதாம். சூறுதல் - சுழலுதலாதலை, சுழல்காற்று 'சூறை' எனப்படுமிடத்துங்
காண்க.பெருநகை - அட்டகாசம். சடுல வோசை, 39- ஆம் கவியினும், 44- ஆம்
கவியினும்சொல்லப்பட்டதனால், 'கூறிய' என்ற அடைமொழி கொடுத்தார்.
வாயொலி - வாயினின்றெழுகிற ஒலி யென்ற பொருளுந்தோன்றும். இச்செய்யுளில்,
'ஒலி' என்ற ஒருசொல்ஒருபொருளிற் பலமுறைவந்தது -
சொற்பொருட்பின்வருநிலை. புவநம் - நீர்:வடசொல்.               (771)

51.- அப்பொழுது அக்கினிதேவன் கொண்ட செருக்கு.

துாமமுமெமதுபவனமுமெமது தோழனத்தோயமுமெமதே
யாமுமிங்கிவற்றோடொன்றுதலொழிதுமீரிருபொருள்களும்பிரிந்தால்
மாமுகிலெனும்பேரெங்குளதடர்த்து வாசவனென்செயுமெம்மை
ஆமுறையறிதுமென்றுகொண்டறவுமகங்கரித்தனன்வெகுண்டழலோ[ன்.

     (இ-ள்.) அழலோன் - (மேகங்கள் தன்னை யவிக்கவந்ததைக் கண்ட)
அக்கினிதேவனானவன்,- 'தூமம்உம் எமது - புகையும் எம்முடையது: பவனம்உம்
எமது தோழன் - வாயுவும் எம்முடைய நண்பன்: அ தோயம்உம் எமதுஏ - அந்த
நீரும் எம்மிடத்தினின்று தோன்றியதே: யாம்உம் இங்கு இவற்றோடு ஒன்றுதல்
ஒழிதும்- நாமும் இப்பொழுது இந்தமூன்று பொருள்களுடனேசேர்தலை
நீங்குவோம்: ஈர் இருபொருள்கள்உம் பிரிந்தால் - இந்த நான்கு பொருள்களும்
(தம்மிற் காலவாமற்)பிரிந்துவிட்டால், மாமுகில் எனும் பேர் எங்கு உளது - பெரிய
மேகமென்னும்பெயர்எவ்விடத்திலுள்ளது? [எங்குமில்லையென்றபடி]: (அது
இல்லையாகவே), வாசவன்அடர்த்து எம்மை என் செயும் - இந்திரன் பொருது
எம்மை என்செய்யமாட்டுவான்?ஆம் முறை அறிதும் - (இனி) ஆகும் வகையை
அறிவோம்,' என்று கொண்டு -என்று எண்ணி, வெகுண்டு அறஉம்
அகங்கரித்தனன் - கோபித்து மிகவும் செருக்குப்பாராட்டினான்; (எ-று.)- 'பவனனும்'
என்ற பாடம் சிறக்கும்.

     புகை, நெருப்பு, நீர், காற்று என்னும் நான்கின் கலப்பினாலாகியது
மேகமாதலால், அக்கினி இங்ஙனஞ்செருக்கினான்; ("தூம ஜ்யோ திஸ்ஸலில மருதாம்
ஸந்நிபாத: க்வமேக;" என்றார், காளிதாஸரும்.)