எம்மையவித்தற்கு இன்றியமையாத துணையாகக்கொள்ளப்பட்ட முகில்கள் எம்மாலழிந்தால் இந்திரன் நம்மை வெல்லுமாறு வேறில்லையென்று கருதி அக்கினி செருக்கினனென்பதாம். பூதங்கள் தோன்றும் முறையால் அக்கினியினின்று நீர்தோன்றிற்று என்று வேதங் கூறுகின்றது; அதுபற்றியே 'அத்தோயமும் எமதே' என்றான். இச்செய்யுளின் தன்மைப்பன்மைகள், செருக்குப் பற்றியன. முதலிலுள்ள உம்மைகள் நான்கும், எச்சப்பொருளன. ஐந்தாவது உம்மை - முற்று. ஆறாவது உம்மை- உயர்வுசிறப்பு. (772) 52.- மேகங்கள் செருக்கி மழைபொழிதல். மூண்டவெங்கனலையுருமின்வெங்கனலான் முருக்கியெங்கால்கை யானெருக்கி, ஆண்டவன்களிற்றின்கரநிகர்தாரை யருவியின்கணங் களாலவித்துப், பாண்டவன்பகழிதொடுக்கினுங்கண்ணன் பருப்பத மெடுக்கினமெங்கள், காண்டவம்புரத்துமென்றுகொண்டிழிந்து பொழிந்தன கணம்படுகனங்கள். |
(இ-ள்.) கணம் படு கனங்கள் - கூட்டமாகக் கூடிய மேகங்களானவை,- 'மூண்ட வெம் கனலை - மூண்டெரிகிற வெவ்விய அக்கினயை, உருமின் வெம் கனலால் முருக்கி- (எங்களது) இடியிலுண்டாகும் வெவ்விய அக்கினியால் அழித்து, எம்கால் கையால் நெருக்கி - எங்கள் கால்களாலும் கைகளாலும் அடர்த்து, ஆண்டவன் களிற்றின் கரம் நிகர் தாரை அருவியின் கணங்களால் அவித்து - (எங்கள்) தலைவனான இந்திரனுடைய (ஐராவத) யானையின் துதிக்கையை யொத்த பெருந்தாரையாகிய மழைநீரருவியின் தொகுதிகளால் தணித்து, பாண்டவன் பகழி தொடுக்கின்உம் கண்ணன் பருப்பதம் எடுக்கின்உம் எங்கள் காண்டவம் புரத்தும் - பாண்டு குமாரனான அருச்சுனன் அம்புகளைத் தொடுத்துத் தடுத்தாலும் கிருஷ்ணன் (முன்புகோவர்த்தனமலையைஎடுத்ததுபோல) மலையை யெடுத்து (க் குடையாகப் பிடித்து)த் தடுத்தாலும் (தடுக்கமாட்டாதபடி முனைந்து) எங்களுடைய காண்டவவனத்தைப் பாதுகாப்போம்,' என்று கொண்டு - என்று உட்கொண்டு, இழிந்து -(செருக்கோடு) இறங்கி, பொழிந்தன - மழைபொழிந்தன; "உஷ்ணம் உஷ்ணேந ஸாம்யதி= வெப்பம் வெப்பத்தால் தணிகிறது" 'என்ற நியாயத்தால், மூண்ட வெங்கனலை யுருமின் வெங்கனலான் முருக்கி' எனப்பட்டது. 'கால்கையால்' என்பது - மேல்நோக்கில் தொடர்மொழியாகக் கால்கைகளால் என்று பொருள் பட்டாலும், உள்நோக்கில் தனிமொழியாக 'காலுதலால்' என்று பொருள்படும்; கால்கை - கைவிகுதிபெற்ற தொழிற்பெயர்: பொழிதலென்றுபொருள். தமதுதலைவனாகிய இந்திரனாற் காக்கப்படும் உரிமையைப்பாராட்டி, 'எங்கள்காண்டவம்' என்றது. 53.- மேகங்கள் சொரிந்த மழைஅவ்வளவும் கனலை அவிக்கமாட்டாமை. காலைவாயருக்கன்பனிநுகர்ந்தென்னக்கட்டறக்காண்டவமென்னும், பாலைவாயுள்ளசராசரமனைத்து நுகர்தலிற்பைம்புனல்வேட் |
|