பக்கம் எண் :

460பாரதம்ஆதி பருவம்

                                           டோன்,
வேலையேழையுமொண்டேழுமாமுகிலும்விதம்படப்பொழிந்த
                                        தாரைகளால்,
தாலுவேழினையுநனைத்தனனனைத்துந் தணிந்ததோதன்பெருந்தாகம்.

     (இ-ள்.) (அக்கினிதேவன்),- காலைவாய் அருக்கன் பனி நுகர்ந்து என்ன -
உதயகாலத்திற் சூரியன் பனியை முற்றும் விழுங்கினாற் போல, காண்டவம்
என்னும்பாலைவாய் உள்ள சர அசரம் அனைத்துஉம் கட்டுஅற நுகர்தலின் -
காண்டவமென்னும் கொடியகாட்டிலுள்ள ஜங்கமமும் தாவரமுமான
எல்லாப்பொருள்களையும் தடையில்லாமல் ஒருங்குஉண்டதனால், பைம்புனல்
வேட்டோன்-(தாகசாந்திசெய்தற்பொருட்டுக்) குளிர்ந்த நீரை விரும்பியவனாய்,
ஏழு மாமுகில்உம் வேலை ஏழைஉம் மொண்டு விதம் பட பொழிந்த
தாரைகளால் - ஏழுபெரிய மேகங்களும் கடல்களேழையும் முகந்து
பலவகையாகச்சொரிந்தமழைத்தாரைகளினால், தாலு ஏழினைஉம் நனைத்தனன் -
(தனது) ஏழுநாக்குக்களையும்நனைத்துக்கொண்டான்; நனைத்துஉம் - (அவ்வாறு)
நனைத்தும், தன் பெரு தாகம்தணிந்ததுஓ - அவனுடைய அதிகமான தாகம்
அடங்கிற்றோ? (எ -று.)

     மேகங்களெல்லாஞ் சொரிந்த மிக்கமழைநீர்த்தாரைகளால் அக்கினிச்
சுவாலைகள்சிறிதுநனைந்தமாத்திரமே யன்றி அதனால் அக்கினியின் உக்கிரம்
சிறிதுந் தணிந்திலதுஎன்பதாம். அதிக தாகங்கொண்டவனுடைய நாவிற்பட்ட நீர்
உடனே வறண்டுவிடுதல்போல அந்நெருப்பின் மேல்விழுந்த நீர்த்தாரைகள்உடனே
வறண்டு போயினவென்க. மனிதசஞ்சாரமில்லாமை பற்றி, 'காண்டவமென்னும் பாலை'
எனப்பட்டது. முகில்கள் ஏழுவிதத்தனவாதலால், அவற்றின் தாரைகட்கு 'விதம்படப்
பொழிந்த' என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. அருக்கன் பனி நுகர்தல் -
முற்றும் எளிதில்வறண்டதற்கு உவமை. கட்டழல் காண்டவமென்னும் என்ற
பிரதிபேதம்.                                                  (774)

54.- மேகங்கள் செருக்கி மழைபொழியவும் அனல்
பின்னும் மிகுதல்.

எக்கடல்களினுமினிப்பசையிலதென் றேழிருபுவனமுநடுங்கத்,
தொக்கடலுருமோடெழுமெழுகொண்டற்சோனையஞ்
                             சுருவையான்முகந்து,
மைக்கடல்வெளுக்கக்கறுத்தமெய்ம்மகவான் வழங்கியவா
                                 குதியனைத்தும்,
நெய்க்கடல் சொரிந்ததென்னுமாறருந்தி நீடுவான்
                              முகடுறநிமிர்ந்தான்.

     (இ-ள்.) மை கடல் வெளுக்க கறுத்த மெய் மகவான் - கரிய கடலும்
வெண்ணிறமான தென்னும்படி மிகக்கறுத்த உடம்பையுடைய இந்திரனாகிய
யாகஞ்செய்பவன், எழும் எழு கொண்டல் அம் சுருவையால் - மேலெழுகிற
ஏழுவகைமேகங்களாகிய அழகிய சுருவையென்னும் ஓமக்கருவியைக் கொண்டு, எ
கடல்களின்உம் இனி பசை இலது என்று ஏழ் இரு புவனம்உம் நடுங்க முகந்து -
எல்லாக்கடல்களிலும் இனி நீர்ப்பசையு மில்லையென்றுபதினான்கு
உலகங்களிலுமுள்ளஉயிர்கள் திடுக்கிடும்படி (அக்கடல்களை முற்றும்) மொண்டு,
தொக்க அடல்உருமோடு வழங்கிய - நிறைந்த வலிய இடியோசையுடனே
மிகுதியாகச் சொரிந்த,