பக்கம் எண் :

காண்டவதகனச் சருக்கம்461

சோனை ஆகுதி அனைத்துஉம் - விடாப் பெருமழையாகிய ஆகுதிகளையெல்லாம்,
(அக்கினிதேவன்), நெய்கடல் சொரிந்தது என்னும் ஆறு அருந்தி - நெய்க்கடல்
சொரியப் பட்டாற்போல உண்டு, நீடு வான் முகடு உற நிமிர்ந்தான் - பெரிய
ஆகாயமுகட்டை யளாவ ஓங்கியெரிந்தான்; (எ -று.)

     கடல்களை நெய்ப்பாத்திரமாகவும், அவற்றின் நீர்முதலியவற்றை
அப்பாத்திரத்தில்நிறைந்த நெய்யாகவும், கடல்களினின்று நீர்முதலியவற்றைக்கொண்ட
மேகத்தை அப்பாத்திரத்தினின்றுநெய்யை முகக்குஞ் சுருவை யெனுங்கருவியாகவும்,
மேகம் நெருப்பில்மழைத் தாரைசொரிதலைச் சுருவைநெருப்பில்
நெய்த்தாரைசொரிதலாகவும் இந்திரனைஓமஞ்செய்பவனாகவும் உருவகப்படுத்தினார்.
மேகம் எதிர்த்து மழைசொரிந்தவளவில் அக்கினிகோபங்கொண்டுமிக்கெரிதல், நெய்
சொரிந்தவளவில் நெருப்பு மிக்கெரிதலாகக் கொள்ளப்பட்டது: உருவகவணி.
'பெருநெருப்புக்குஈரமில்லை' என்றபடி அம்மழை அந்நெருப்பைச்சிறிது
தணிக்கவும்மாட்டிற்றில்லையென்பது, இப்பாட்டின் தாற்பரியம். மகவாந் -
ஐசுவரியங்களை யுடையவன்; (மகம் - ஐசுவரியம்.) இச்சொல்.
வேள்விசெய்பவனையுங்குறிக்கும். மகவானாகியமகவான் என, இங்கு 'மகவான்'
என்றது - சிலேடையுருவகம். 'தொக்கடலுருமோடு' என்றதற்குஏற்ப,
உபமேயத்தில்வேதமந்திர கோஷத்தோடு எனக்கொள்க; இது ஏகதேசவுருவகம்.
கறுப்போடுநோக்க வெளுப்புக்கு எவ்வளவு வேறுபாடு உண்டோ, அவ்வளவு
வேறுபாடு இந்திரனது கருநிறத்தோடுநோக்கக் கடலினது கருநிறத்துக்குஉள்ள
தென்பது, 'மைக்கடல் வெளுக்கக் கறுத்த மெய்' என்றதன் கருத்து; பிரசித்தமான
கடலின்கருமையினும் மிக்க கருமையையுடைய மெய்யென்க.              (775)

55.- அருச்சுனன் அம்பெய்து மழையைத்தடுத்துச்
சரக்கூடங்கட்டுதல்.

தொழுதகுவிசயன்றாலுவேழுடையோன் சுடர்முடிநனைந்திடுவதன்
                                             முன்,
எழுமுகிலினமும்பொழிதருமாரி யாவையுமேவினால்விலக்கி,
முழுதுலகமுந்தன்னிடத்தடக்கியவான் முகடுறமுறைமுறையடுக்கிக்,
குழுமுவெங்கணையாற்கனற்கடவுளுக்குக் கொற்றவான்கவிகையுங்
                                       கொடுத்தான்.

     (இ-ள்.) தொழு தகு விசயன் - (யாவராலும்) வணங்கத்தக்க
[மிக்கசிறப்பையுடைய] அருச்சுனனானவன், தாலுஏழுஉடையோன் சுடர் முடி
நனைந்திடுவதன் முன் - ஏழுநாக்குக்களை யுடையவனான
அக்கினியினதுஒளியையுடைய முடி நனைதற்குமுன்னே, எழுமுகில் இனம்உம்
பொழிதரு மாரி யாவைஉம் ஏவினால் விலக்கி - ஏழுவகை முகிற்சாதிகளுஞ்
சாரிகிறமழைகளையெல்லாம் (தனது) அம்புகளால் தடுத்து,- முழுது உலகம்உம்
தன் இடத்துஅடக்கிய வான் முகடு உற - பூலோகம்ழுவதையுந் தன்கீழ் அடக்கிய
ஆகாயத்தினதுமேன்முகட்டை யளாவ, குழுமு வெம் கணையால் முறை முறை
அடுக்கி - கூட்டமானகொடிய அம்புகளை ஒழுங்காக அமையும்படிசெலுத்தி,
(அந்தஅம்புகளின் பரப்பினால்),கனல்கடவுளுக்கு