பக்கம் எண் :

காண்டவதகனச் சருக்கம்469

யின் அமிசமான காளியோடும்பலவகைப்பூதகணங்களோடும் புறப்பட்டுப் போய்
யாகசாலையில் தீப்பற்றவைத்து, யூபஸ்தம்பத்தை ஒடித்துவிட்டு, அங்கு எதிர்ப்பட்ட
தேவேந்திரனை வெள்ளையானையுடனே அள்ளியெடுத்துநிலத்திலரைத்தும்,
அக்கினியின்கைகளையும் நாக்கையும் அறுத்தும், யமனை எலும்புந் தசையும் அழியச்
சிதைத்தும், நிருருதியின் கைகளைத்தறித்தும், வருணனைக் கடலில் வீசியும், வாயுவை
அண்டகோளகைமுகட்டி லடித்தும், குபேரனைச் செண்டாடியும், பகனென்னுஞ்
சூரியனது கண்களைப் பறித்தும், அரியமாவென்னும் ஆதித்யனது
தோள்களையறுத்தும், பூஷாவினது பற்களை யுதிர்த்தும், சந்திரனைத்
தரையில்தேய்த்தும், வசுக்களையும் மருத்துவரையும் இரத்தஞ் சிந்தப்புடைத்தும்,
மானுருக்கொண்டு ஓடின யாகபுருஷனது கொம்புகளைப் பிடுங்கியெறிந்தும், பிருகு
முனிவனது நெற்றிமயிரைப் பறித்தும் பங்கஞ்செய்து, தக்ஷமுனிவனையுந்
தலைதுணித்துவேள்வியை யழித்து மீண்டனனென்பது, இங்கு அறியவேண்டிய கதை.
'அருக்கன்' என்றது-அந்த மாதத்துக்குஉரிய சூரியனையும், ஒழிந்த அருக்கர்
பன்னொருவரென்றது-  மற்றைப் பதினொரு மாதங்கட்கும் உரிய 
சூரியர்களையுமெனினுமாம்.பச்சைநிறக்குதிரையும் இடைக்குக்கீழ்ப்பட்ட
உறுப்பில்லாத அருணனாகிய பாகனும்,ஒற்றைத் தனியாழித்தேரும் ஆதித்தனுக்கு
உரியனவாதலாற் கூறப்பட்டன. தச்ச-தைத்த:போலி. பன்னொருவர்=பதினொருவர்
மரூஉ.                                                     (786)

66.- ஏகாதசருத்திரர்கள் தோற்றோடுதல்.

மாறுபட்டுழியப்பற்குனன் கணையான் மழுக்களுஞ்சூலமுமுடைய
நீறுபட்டுடலினீற்றுடன்படிய நெடுங்கொடியூர்தியேறுகளும்
ஏறுபட்டழியச்சடையில்வார்நதியா லேறியதூளிவானெறியும்
சேறுபட்டிடுமாறோடினார்மீளப் பதினொருதிறலுருத்திரரும்.

     (இ-ள்.) திறல் பதினொரு உருத்திரர்உம் - வலிமையையுடைய
ஏகாதசருத்திரர்களும்,-மாறுபட்ட உழி - எதிர்த்துப்போர்செய்தபோது, அ பற்குனன்
கணையால் - அந்தஅருச்சுனனது அம்புகளால், மழுக்கள்உம் சூலம்உம் உடைய -
(தம்தமது ஆயதங்களாகிய) மழுவும்சூலமும் உடைபடவும்,  நீறுபட்டு உடலின்
நீற்றுடன் படிய- (அந்தஉடைந்த ஆயுதங்கள்) நீறாகப்போய் (அந்தப்பொடி)
தங்களுடம்பிலே (இயல்பாகப்பூசியுள்ள) விபூதியுடனேபடியவும்,- நெடுங்கொடி
ஊர்திஏறுகள்உம் ஏறுபட்டு அழிய - (தங்கட்கு) உயர்ந்த துவசமும் வாகனமுமான
எருதுகளும் பின்னப்பட்டு அழியவும், - (தாங்கள் ஓடிச்செல்லுங்காலத்து),
சடையில்வார்நதியால் - (தங்கள்) சடையினின்றுவழிகின்ற  கங்கைநதிப்
பொருக்கினால்,ஏறிய தூளி - (போரில்) மேற்கிளம்புகிற புழுதி, வான் நெறிஉம்
சேறுபட்டிடும் ஆறு -தேவலோகத்து வழியளவும் சேறுபட்டிடும்படியும், மீள
ஓடினார்-(தம்மிடத்துக்குத்)திரும்பும்படி புறங்கொடுத்தோடினார்கள்;

      'நீறுபட்டுடலினீற்றுடன்படிய' என்றும், 'ஏறுகள் ஏறுபட்டழிய என்றும்
கூறியது-கவிசமத்காரம். ஏறு-ரிஷபம். ஏறுபட்டு