(இ-ள்.) என்று கொண்டு உரைத்த மொழி-என்று (அசரீரி) சொன்ன வார்த்தை, செவி பட்ட எல்லையின்-காதிற் பட்டவளவில்,-சுரபதி-தேவராசனான இந்திரன், துன்றுதன் சேனை சுர கணம் சூழ - நெருங்கிய தனது சேனையான தேவர்கள் கூட்டம்(தன்னைச்) சூழ்ந்து வர, இரவி முன் இருள் போல்-சூரியன் முன்னிலையில் இருள்(ஒழிதல்) போல, துறக்கம் அது அடைந்தான்-(அருச்சுன னெதிரில்நில்லாமல் தனது)சுவர்க்கலோகத்தையடைந்தான்; (பின்பு), அருச்சுனன்-, வென்று- (இவ்வாறு தேவர்களைச்) சயித்து, வெம் களம் கொண்டு-கொடிய போர்க்களத்தைக் கொண்டு, தனது வெற்றி கொள் சங்கம்உம் குறித்தான்-ஜயத்தைக்கொண்ட தன்னுடையசங்கத்தையும் ஊதிமுழக்கினான்; செம் திருமால்-செந்நிறமுள்ள இலக்குமிக்குக்கணவனான கண்ணபிரான், அன்று அருச்சுனன் பொருத ஆண்மை கண்டு அதிசயித்தனன் - அன்றையதினத்தில் அருச்சுனன் போர்த்திறமையைப் பார்த்துஆச்சரியப்பட்டான்; (எ-று.) பகைவரை வென்றொழித்தபின்பு தமது பெருமிதந்தோன்றப் போர்க்களங்கொண்டு தமதுவெற்றிக்கு அறிகுறியாகத் தம்சங்கத்தை முழுக்குதல், வீரரியல்பு. (793) 73.- தேவர்களும் இந்திரனும் முனிவர்களும் அருச்சுனனைப் புகழ்தல். வடமதுரையினுந்தென்மதுரையினும்மதிகுல நிருபர்கன்னியரைக் கடிமணம்புரிந்தோன்வின்மையின்வன்மை கண்ணுறக்கண்டவானவ[ரும் புடவியிலொருவரொடுமினிப்பூசல்பொரேனெனப் போனவாசவனும் முடிசடைமவுலிநாரதன்முதலா முனிவருமுடிவறப்புகழ்ந்தார். |
(இ-ள்.) வடமதுரையின்உம் தென்மதுரையின்உம் - வடக்கிலுள்ள மதுராபுரியிலும்தெற்கிலுள்ள மதுராபுரியிலும், மதிகுலம் நிருபர் கன்னியரை - சந்திரகுலத்துஇராசகன்னிய ரிருவரை, கடிமணம் புரிந்தோன் - சிறப்பாக விவாகஞ்செய்துகொண்டவனான அருச்சுனனுடைய, வின்மையின் வன்மை - விற்றொழிலின் வலிமையை, கண் உற கண்ட - கண்ணெதிரிலே பொருந்தக்கண்ட, வானவர்உம்-தேவர்களும், புடவியில் ஒருவரொடுஉம் இனி பூசல் பொரேன் என போன வாசவன்உம் - பூமியில் ஒருவரோடும் இனிப் போர்செய்யயமாட்டே னென்று சென்ற இந்திரனும், முடி சடை மவுலி நாரதன் முதல்ஆம் முனிவர்உம் - முடித்த சடைமுடியையுடைய நாரதன் முதலான இருடிகளும், முடிவு அற புகழ்ந்தார் - (அருச்சுனனை) அளவின்றிப் புகழ்ந்தார்கள்; ( எ-று.) மதிகுலநிருபர் கன்னியர் - வசுதேவர்மகளான சுபத்திரையும், சித்திரவாகனபாண்டியன் மகளான சித்திராங்கதையும், முதலில் மதுவென்னும் அசுரன்கைக்கொண்டிருந்தமை பற்றியும், கண்ணுக்கு இனிமையானதுபற்றியும், பின்புமதுவென்னுஞ் சந்திரகுலத்து அரசனாற் சீர்திருத்தி யாளப்பட்டமை பற்றியும், *வடமதுரைக்கு 'மதுரா' என்று பெயர்; வடசொல்; இது, வடநாட்டில் யமுநாநதிதீரத்தி லுள்ளது. + தென்மதுரைக்கு அப்பெயர்
Muttra +Mathurai. |