வந்த காரணம் - குலசேகர பாண்டியன் காடுகெடுத்து நகராக்கி அந்நகரத்திற்குச் சாந்திசெய்யக் கருதியபொழுது. சோமசுந்தரக்கடவுள் தமது சடையிலுள்ள சந்திரனிடத்தினின்று அமிருதத்தை உகுக்க, அவ்வமுதம் சென்று அந்நகர்முழுவதும் பரவிச் சாந்தி செய்து மதுரமயமாக்கியதனாலாகும்; இது, தென்னாட்டில் வையையாற்றங்கரையி லுள்ளது. நிலவுலகத்தவனான அருச்சுனனோடு பொருது தோற்றதனால், இந்திரன் 'புடவியி லொருவரொடு மினிப் பூசல் பொரேன்' என்பவனானான். (794) 74.- கிருஷ்ணார்ச்சுனரது அருளால் மயன் அத்தீயினின்று தப்பியுய்தல். மாசுணத்தரசன்மந்திரமமைத்த வனத்திடையிருந்தமாமயனை ஆசுசுக்கணிசென்றடர்த்தலும்வெருவியருச்சுனாவபயமென்றரற்றத் தேசுடைத்திகிரிச்செங்கண்மால்கருணைசெய்தனன்றீவினையுறினும் பேசுதற்கரியபெரியவர்நினைக்கின்யார்கொலோபிழைத்திடாதவரே. |
(இ-ள்.) மாசுணத்து அரசன் மந்திரம் அமைத்த வனத்திடை இருந்த மா மயனை- சர்ப்பராசனான தக்ஷகனது அரண்மனை அமைக்கப்பட்டுள்ள அக்காட்டிலே யிருந்தசிறந்த மயனென்பவனை, ஆசுசுக்கணி சென்று அடர்த்தலும் - அக்கினி போய்நெருக்கி வருத்தியவளவிலே, (அந்த மயன்), வெருவி - அஞ்சி, அருச்சுனா அபயம்என்று அரற்ற - 'அருச்சுனனே! (நான் உனக்கு) அடைக்கலம்' என்று சொல்லிக் கதற, தேசு உடை திகிரி செம் கண் மால் - ஒளியையுடைய சக்கராயுதத்தையேந்தியசிவந்தகண்களையுடையனான கண்ணபிரான், கருணை செய்தனன் - (அவன்பிழைக்கும்படி) அருள் செய்தான்; தீ வினை உறின்உம் - கொடிய துன்பம்நேர்ந்தாலும், பேசுதற்கு அரிய பெரியவர் நினைக்கின் - சொல்லுதற்கு முடியாதபெருந்தன்மையையுடைய மகான்கள் நினைத்தால், பிழைத்திடாதவர் -(அத்துன்பத்தினின்று) நீங்கிஉய்யாதவர், யார் கொல் ஓ - யார்தான்? (எ-று.) கொடிய தீயி லகப்பட்ட மயன், கண்ணன் திருவுளத்திற் கருணைசெய்ததனால் அழிவடையாது தப்பிப்பிழைத்தனன் என்ற சிறப்புப்பொருளை 'தீவுனையுறினும்பேசுதற்கரியபெரியவர் நினைக்கின் யார்கொலோ பிழைத்திடாதவர்' என்ற பொதுப்பொருள் கொண்டு விளக்கியது - வேற்றுப்பொருள்வைப்பணி. தக்ஷகனுடைய மாளிகையினின்று நெருப்புக்குப் பயந்து ஓடின மயன் 'அருச்சுனா! அபயம்' என்று அரற்ற, அருச்சுனன் அபயங் கொடுக்க, அம்மயனைக் கொல்லும்படி கோபத்தாற் கண்சிவந்து சக்கராயுதத்தையெடுத்த கிருஷ்ணனும் அருச்சுனன்பயங்கொடுத்ததைக்கண்டுதானும் அவன்பக்கற் கருணைசெய்தா னென்பது விளங்க 'திகிரிச் செங்கண்மால் கருணைசெய்தனன்' என்றார். நெருப்பின் தொழில் நெருங்கினாலும் என்னும் ஒருபொருள் சமத்காரமாய்த் தோன்றுமாறு 'தீவினை உறினும்' என்றார்; பாவப்பயன் நேர்வதாயிருந்தாலும் என்ற பொருளும் தொனிக்கும்.கிருஷ்ணார்ச்சுனர் நோக்கத் |