அசரம் உள்ளவை அனைத்துஉம் - அக்காண்டவவனத்திலே ஜங்கமமும் ஸ்தாவரமுமாக வுள்ள பொருள்களையெல்லாம், தன் பசி தணியவன்புடன் அருந்தி -தனது பசித்தீத்தணியும்படி வலிமையுடன் உண்டு, (தன்) உதரம்உம் குளிர்ந்தான்-தனதுவயிறுங் குளிர்ந்தவனாய், தன் வடிவம்உம் குளிர்ந்தான்- தனதுஉருவமும் ஆறி,அன்புஉடை இருவர்க்கு ஆசிஉம் புகன்றான் - அன்பையுடையவர்களான அந்தக்கிருஷ்ணார்ச்சுனரிருவர்க்கும் ஆசீர்வாதத்தையுஞ் சொல்லி, அசைந்துபோய் -அசைந்தசைந்துசென்று, துறக்கஉம் அடைந்தான் - விண்ணுலகத்தையுஞ்சாரர்ந்தான்; (எ-று.) வயிறுநிரம்ப உண்டாதனாலும், நோய் நீங்கியதனாலாகிய சுகாநுபவத்தாலும், அக்கினி அசைந்தசைந்துசென்றனனென்க. வன்புடன் அருந்தி-முன்பு தன்னால் எளிதில்உண்ண இயலாமையாயற் கிருஷ்ணார்ச்சுனர்களுடைய உதவிபற்றி வலியஉண்டுஎன்க. (797) 77.- கிருஷ்ணார்ச்சுனர் இந்திரப்பிரத்தநகரஞ் சார்தல். அமரரை முதுகு கண்டகா வலரு மவரவ ராண்மைக ளுரை செய்து, அமரிலன் றெடுத்த பல்பெருங் கொடியா லலங்கரித் தமைத் ததந் தேர்மேல், தமருடன் துணைவர் நால்வரு நகரச் சனங்களு மகிழ்ந்தெதிர் கொள்ளத், தமரமும் முரசு முழங்கவெண் சங்கந் தழங்கவத் தணிநகர் சார்ந்தார். |
(இ-ள்.) அமரரை முதுகு கண்ட காவலர்உம் - தேவர்களைப் புறங்கண்ட கிருஷ்ணார்ச்சுனர்களாகிய அரச ரிருவரும், அவர் அவர் ஆண்மைகள் உரை செய்து- (தேவர்களோடு நடத்தியபோரில்) தாம்தாம்செய்த ஆண்மைத் தொழில்களைச்சொல்லிக்கொண்டு, அமரில் அன்று எடுத்த பல் பெருங்கொடியால் அலங்கரித்துஅமைத்த தம் தேர்மேல்-போரில் அன்றைத்தினத்தில் மேலுயர்த்திய பலபெரியகொடிகளினால் அலங்காரஞ்செய்து சித்தஞ் செய்யப்பட்டுள்ள தங்கள்தேர்களின்மேலேறினபடியே, தமருடன் துணைவர் நால்வர்உம் நகரம் சனங்கள்உம் மகிழ்ந்து எதிர்கொள்ள - (தங்கள்) சுற்றத்தார்களுடனே துணைவர்களானதருமன்முதலிய நால்வரும் அந்நகரத்திலுள்ள ஜனங்களும் மகிழ்ந்து வந்துஎதிர்கொள்ளவும், தமரம் மும் முரசுஉம் முழுங்க - ஒலியையுடைய மூன்றுவகைமுரசவாத்தியங்களும் முழுங்கவும், வெள் சங்கம் தழங்க-வெண்ணிறமான சங்கவாத்தியங்கள் ஒலிக்கவும், வந்து அணி நகர் சார்ந்தார் - மீண்டுவந்து அழகிய இந்திரப்பிரத்த நகரத்தை யடைந்தார்கள்; பல் பெருங்கொடி - கிருஷ்ணனது கருடக்கொடியும், அருச்சுனனது அநுமக்கொடியும்; ஒன்றல்லாததெல்லாம் பலவாதல்பற்றி, இவ்விரண்டுமே 'பல்' எனப்பட்டன. மும்முரசு - வெற்றிமுரசுகொடைமுரசு மங்கலமுரசு என்பன (798) காண்டவதகனச்சருக்கம் முற்றிற்று. ஆதிபருவம் முற்றிற்று. --------- |