பக்கம் எண் :

48பாரதம்ஆதி பருவம்

யெடுத்துச் சொல்லியும், தலைநாள் விழைவொடுஉம் மன்றலில் மணந்த
மடந்தையர்வதனம்உம் நோக்கான் - முற்காலத்திலே விரும்பிக்
கலியாணஞ்செய்துகொண்டுமணந்த பெண்களின் முகத்தையும் கண்ணெடுத்துப்
பாராதவனாய்,- என்று கிடைப்பதுஇனி என்று- '(அந்தக்கங்கையாளின் தரிசனம்)
இனிக்கிடைப்பது எப்போதோ?' என்றுநினைந்து, உளம் வருந்தி - மனம்
வருத்தமடைந்து, எண்ணும்நாள் எல்லை -எண்ணுதற்கு உரிய கால
வெல்லையிலே, ஆண்டு - அரசுபுரிந்து, (தன்நகரில்),இருந்தான்-; (எ -று.)

     முன்மணந்த மடந்தையரைக் கண்ணெடுத்துப்பார்த்தலும் செய்யாது,
கங்கையாளின் எண்ணமே மனத்துநிற்கத் தன்நாளை வருத்தத்துடன்
கழித்துவருவானாயினன் சந்தனுவென்க. உவமைப் பொருள்களால் காணுதல் -
மின்னல்மயில் வஞ்சிக்கொடி என்று இன்னோரன்ன பொருளைக் கண்டு
அந்தக்கங்கையாளைக் கண்டாற்போன்று சிறிதுமனந்தேறுதல். கங்கையாள்
'காளையாம் பதத்து மீள நின் கைப்படுத்துவல்' என்று கூறிச்
சென்றிட்டாளாதலால்,அதையே மன்னவன் மனத்தில் எண்ணிக்
கொண்டிருத்தலால், அந்தக்காலவெல்லையை 'எண்ணுநாளெல்லை' என்றது.
இருபத்தாறியாண்டுகள் சென்றபின், வீடுமனைக் கூடினானென்று பாலபாரதத்திற்
கூறப்பட்டுள்ளது.

     இது முதலிருபத்தெட்டுக்கவிகள் - இரண்டு நான்கு ஏழாஞ் சீர்கள்
மாச்சீர்களும், மற்றை நான்கும் விளச்சீர்களுமாகிவந்த எழுசீராசிரியவிருத்தங்கள். 
                                                           (87)

80.- மீண்டும் சந்தனு கானகத்தில் வேட்டையாடி முடித்துக்
கங்கைக்கரையை யடைதல்.

பின்னொருதினத்திலமைச்சரும்பிறரும் பெரும்படைத்
                                தலைவருஞ்சூழ,
முன்னொருதினத்தின்வனத்துமாவேட்டைமுன்னினன்முயன்று
                                போய்முற்றி,
மின்னொருவடிவுகொண்டெனச்சிறந்த மெல்லியன்மீண்
                                டுறைமறையுந்,
தன்னொருமதலையாக்கமுங்கருதிச் சானவித்தடங்
                                கரையடைந்தான்.

     (இ-ள்.) பின்பு ஒரு தினத்தில் - பின்பு ஒரு நாள், அமைச்சர்உம்
பெரும்படைத்தலைவர்உம், பிறர்உம் சூழ - மந்திரிமார்களும் சேனாபதிகளும்
மற்றையோரும் சூழ்ந்துவர, முன் ஒரு தினத்தின் - முன்பு ஒரு தினத்தில்
(வந்ததுபோல), வனத்து - காட்டில், மா வேட்டை - மிருக வேட்டையை,
முன்னினன்- செய்யக் கருதியவனாய், (அதன் பொருட்டு), முயன்று போய்-,
முற்றி- (வேட்டையை)முடித்திட்டு, (பிறகு), மின் ஒரு வடிவுகொண்டு என சிறந்த
மெல்லியல் - மின்னல்ஒருவடிவத்தைக் கொண்டாற்போலச்  சிறந்தமடவாளையும்,
மீண்டு -(தன்னிடத்தினின்ற)நீங்கி, உறை மறையும் - நீரினுள்ளே மறைந்து
சென்ற, தன் ஒரு மதலை -தன்னுடைய ஒப்பற்ற புதல்வனுடைய, ஆக்கம்உம் -
வளர்ச்சியையும், கருதி - நினைந்து, சானவி தட கரை - கங்கையின் பெரிய
கரையிலே, அடைந்தான் - போய்ச்சேர்ந்தான்;

     முன்பு ஒருமுறை வேட்டையாடச் சென்றதுபோலவே இப்போதும் அமைச்சர்
முதலியோர் சூழ வேட்டையாடி அத்தொழிலை