பக்கம் எண் :

குருகுலச் சருக்கம்49

முற்றிய சந்தனு தன்மனைவியையும், குமாரன் இப்போது எவ்வாறு
வளர்ந்துள்ளான்என்பதையும் காணக்கருதி, மீண்டும் கங்கைக் கரையை
அடைந்தன னென்க. 'கங்கைக்கரையைச் சேர்ந்தால் ஒருகால் கங்கையாளையும்
வளர்ந்த தன்புதல்வனையும் காண நேருங்கொல்லோ? என்று அங்கு மன்னவன்
சென்றானென்றவாறு.  சானவி-ஜாஹ்நவீயென்ற வடசொல்லின் திரிபு:
பகீரதசக்கரவர்த்தியின்பின்னேசென்ற கங்கை வழியிடையே ஜஹ்நுமுனிவரின்
வேள்வியை யழிக்க,அவர்பருகி அந்தப்பகீரதனது வேண்டுகோளினால் தமது
காதியின்வழியாகவிட்டதனால், கங்கைக்குச் சானவியென்று பெயர். அமைச்சர் -
அமாத்யரென்றவடசொல்லின் திரிபென்பர்.                         (88)

81.- முன்பு கங்கையாளைக் கண்ட சோலைமுதலியவற்றைக் கண்டு
மன்னவன் மனமுருகுதல்.

பண்டுதானவளையெதிர்ப்படுங்கனகம் பைங்கொடிப்பந்தர்
                                     வானிழ
லும்,
வண்டறாநறைப்பூஞ்சோலையுந்தடமு மருங்கலைமலயமாருதமும்,
புண்டரீகமுஞ்செங்காவியுங்கமழும் புளினமும்புளினமென்றுறையும்,
கண்டுகாரிகையையிம்மையிலின்னுங் காண்குமோவெனமனங்கசிந்தான்.

     (இ - ள்.) பண்டு - முன்பு, தான்-, அவளை - அந்தக் கங்கையாளை,
எதிர்ப்படும் - எதிர்ப்பட்ட, கனகம் பைங்கொடி பந்தர் வான் நிழல் உம் -
பொன்போலருமையான பசிய பூங்கொடிப் பந்தரின் சிறந்த நிழலும், வண்டு
அறா நறைபூஞ் சோலைஉம் - வண்டுகள் நீங்காத வாசனையுள்ள
பூஞ்சோலையும், தடம்உம் -கங்கைக்கரையும், மருங்கு அலை மலயமாருதம்உம்
பக்கத்திலே வீசுகின்ற தென்றற்காற்றும், புண்டரீகம்உம் செங் காவிஉம் கமழும்
புளினம்உம் - தாமரையும்செந்நிறக்காவியும் நறுமணம்வீசுகின்ற மணற்குன்றும்,
புள் இனம் மெல் துறைஉம் -பறவைக்கூட்டங்கள் தங்குகின்ற மெல்லிய
நீர்த்துறையும், கண்டு-, காரிகையை -பெண்ணை, இம்மையில் - இப்பிறப்பில்,
இன்னும் காண்கும் ஓ என - இன்னும்காண்போமா! என்று, மனம் கசிந்தான் -
மனமுருகினான்;  (எ-று.)

     இதனால், மன்னவன் வேறொன்றிலும் மனஞ்செல்லாது
கங்கையாளிடத்துத்தானேமனம்பற்றியிருந்தமை வெளியாம். மலயமாருதம் -
மலய மலையினின்று வீசுங்காற்று:தென்றல். 'எதிர்ப்படும்' என்றது -
இயல்பினால்வந்த காலவழுவமைதி. செங்காவி -செங்கழு நீர் மலர்.     (89)

82.- சந்தனு அங்குமனம்வாடி நின்றபோது, அவன்முன்னே
கங்கையினின்று ஒருவீரன் வருதல்.

பிரிந்தநாளெண்ணிப்பகீரதிப்பெருக்கைப் பேதுறுங்குறிப்பொடு
                                           நோக்கிக்,
கரிந்தபாதவம் போனின்றவப்பொழுதிற் கால்பொரக்குனித்
                                        தகார்முகமும்,
தெரிந்தமேன்மேலுந்தொடுத்தசாயகமுஞ்சிலம்பெனத்திரண்ட
                                     தோளிணையும்,
விரிந்தநூன்மார்புமாகிமுன்னடந்தான்
                               விழிகளித்திடவொருவீரன்.

     (இ - ள்.) பிரிந்த நாள் எண்ணி - (கங்கையாளைப்) பிரிந்த நாளைக்
கணக்கிட்டு,- பகீரதி பெருக்கை - கங்கையின் வெள்ளத்தை, பேது