அங்கிவேசன்- துரோணனுக்கும் துருபதனுக்கும் படைக்கலப் பயிற்சிசெய்வித்தவன், வார -38. அச்சுவசேனன்- தட்சகனுடைய குமாரன்: இந்திரனாற்காக்கப் பட்டுக்கர்ணனிடம் அஸ்திர மாகச்சார்ந்தான், காண் -59 - 61. அசுவத்தாமன்- சிவனருளால் தோன்றியவன், வார -42: பேர றிவுமுதலியவற்றால் மிக்கவன், திரௌ -38. அசுவினீதேவதைகள்- நகுலசக தேவர்களை மாத்திரியினிடம் உண்டாக்கினவர், சம் -85 - 87: காண்டவவனத்தைக் கனலெரிக் கையில் அருச்சுனனை யெதிர்க்க வந்து ஆற்றாது போனவர், காண் - 67. அத்தி-ஹஸ்தீ: பரதகுலத்தரசன், குரு -28: அத்தினாபுரியை யமைத்தவன், குரு -29 அத்திரி- கண்களினின்று சந்திரன் பிறக்காரணமானவன், குரு -5. அதிரதன்,இராதைகணவன், சம் - 41: கர்ணனை நதியினின்று எடுத்துவளர்த்தவன், சம் -42. அபிமன்- அருச்சுனன்மணந்தசுபத் திரைக்குத் தோன்றினான், அருச் -86: பாண்டவ குமாரர் அறுவருள் ஆண்மைதன்னால் விளங்கினான், அருச் -89 அம்பாலிகை- விசித்திரவீரியனை மணந்தாள், குரு - 128: வியாசனருளால் பாண்டுவைப் பெற்றாள், சம்-15,16,17. அம்பிகை- விசித்திரவீரியனை மணந்தவள், குரு - 128: திருதராட்டிரன்தாய், சம் -22. அம்பை- காசிமன்னவன் புதல்வி, குரு -117, 130: சாலுவனாலும் வீடுமனாலும் மணமறுக்கப் பட்டவள். குரு - 129,130,132. பரசுராமனைச் சரண மடைந்தவள், | குரு - 134; வீடுமனைவெல்லப் பன்னிரண்டுவருடங்கள் பெருந் தவமியற்றியவள், குரு:144,145; சிகண்டியாய் யாகசேனனிடம் பிறந்தவள், குரு -146 அரக்கனென்பதன் பரியாயப் பெயர் கங்குல்வாணன், வேத் -11. யாதுதானன், வேத் -12, குணபவல்சி, வேத் 14. நிசாசரன், வேத் -15. அருச்சுனன்- பங்குனியுத்தரத்திற் குந்தியிடம் இந்திரனருளால் தோன்றியவன், சம் -83; சிலைத் தொழிலில், இராகவனையொத் தவன் துரோணரின்சிறந்த அன்பிற்குரியவன், வார -49: துரோணனை முதலையினின்று உய்வித்தான், வார -52. வேடர்களை வென்று நிரைமீட்டுக்கொடுத்தான், அருச்-5: ஐந்துதேவமாதரின் சாபத்தைநீக்கியவன், அருச் -48: தீர்த்தயாத்திரையில் உலூபியென்ற நாககன்னிகையை மணந்துஇராவானைப்பெற்றான், அருச் -8, 9; சித்திரவாகன பாண்டியன் புதல்வி சித்திராங் கதையை மணந்து பப்புருவா கனனைப்பெற்றான், அருச் -41, 43. சுபத்திரையை மணந்து அபிமனைப் பெற்றான், அருச் -71, 86. இவனுக்குக் காண்டவ தகனத்தின்போது அக்கினி காண்டீவம் முதலிய ஈந்தான், காண் -26: பத்து நாமங்களையுடையவன், அருச் -44. ஆயு- புரூரவாவுக்குமகன், ஊருவசியினிடம்பிறந்தவன், குரு -13: இவன் மகன் நகுடன், குரு -14. இடிம்பன்- அரக்குமாளி கையினின்று பாண்டவர் சென்ற வழியிடையேயிருந்த வனத்தில் வசித்த அரக்கன், வேத் -4: வீமனாற் கொல்லப்பட்டான், வேத் -15. |