பக்கம் எண் :

சில அருந்தொடர்கள்509

     அருகணுகாவகையகலவிருந்தால் மருவுறு நண்புவளர்ந்
திடும், வார - 105.
     தொழுதகையுளும்படையுள, வார -119.
     முக்கணற்புதன்முனிந்தவூர்மூவரோடொப்பான், வார - 131.
     உட்பனித்துமேல்வெயிலுறவெதும்புநீர், வார - 135.
     கோள்கரந்த பஃறலையரா வெனக் குகரநீணெறிக்கொண்டு
போயபின்,வேத் -2.
   புரக்கவல்லளென்றொருமடந்தைபின் போவதாடவர்க்காண்மை போதுமோ,
வேத்-8.
     உணவினாசையாற் கொல்லவந்தநீ யுவகையாசையாலுள்ளழிந்திவன்,
கணவானாமெனக் காதலிப்பதே கங்குல்வாணர்தங் கடனிறப்பதே, வேத் -11.
     அடற்புலிப்பிணவை யன்பினிற் கலை நயப்பதே, வேத் -11.
     ஆளியேறுபுன்பூஞைதன்னுடன்பொரநினைக்குமோ, வேத்-12.
     அருநெறிக்கடவுளர்க் கமுதமூட்டுத லிருபிறப்பாளருக் கென்றுந் தன்மையே,
வேத் -36
     அரியேறானின்கவினுடைநெடுந்தோல்போர்த்துக் கொண்டன
செயலார், திரௌ -21.
     வென்றாலுந் தோற்றாலும் வசையே வெம்போர் வேதியரோடுடற்றல்,
திரௌ - 62.
     விடத்தோடமுதங் கலந்தென்ன மிளிரும்வேற்கண், திரௌ -92.
     நாவினும்புகலக் கருத்தினும்நினைக்கவரியதோர்நலம், இந்-11.
     மரகதங் கோமேதகந்துகிர் தரளம் வைரம் வைதூரியநீல, மெரிமணி
 புட்பராகமென் றிவற்றிற் காகரமிந்தமாநகர், இந் -12.
     ஆடகப்பொருப்பினை யழித்துத் தரணியில் நகரொன்றமைத்
தவா, இந்-12.
     குன்றிலிளவாடை வரும்பொழுதெல்லாஞ் செழுஞ்சாந்தின்
     மணநாறும் வீதி, அருச்-21.
     தங்கொடிக்கயலைப் புறங்காணுங் கண்ணினாள், அருச்-28,
     (இராமன்) சென்றவழியின்றளவுந் துளவநாறுஞ்சேது, அரு-45.
     பூங்கமலமலரோடையனையான், அருச்-52.
     மதிநிற்கவும் இருள்விடிந்திலது, அருச் -61.
     பதியிடத்தரிவையர்க்குளமாகுலம்படாதோ, அருச்-69
     அரியவாயினும் வழங்குதற்கேற்றனவல்லவாயினும் தம்மிற்
பெரியவாயினுமதிதிகள்கேட்டனமறுப்பரோ பெரியோரே, காண் -22.
     அச்சமேதுணையாவகன்றார், காண் - 65.
     வடமதுரையினுந் தென்மதுரையினும் மதிநிருபர் கன்னியரைக்
கடிமணம்புரிந்தோன், காண் - 73
     தீவினையுறினும் பேசுதற்கரிய பெரியவர்நினைக்கின் யார்
கொலோ பிழைத்திடாதவரே, காண் -74.

-----