93.- மன்னவனேவலின்படி தேர்ப்பாகன் அம்மன்னவன் கருத்தை வலைஞனிடம் தெரிவித்தல். பாகனையரசன்குறிப்பினாலேவப் பாகனும்பரதவர்பதியை ஓகையோடிருத்திநின்னுழைவதுவை யுலகுடைநாயகனயந்தான் தோகைசெய்தவமோநின்பெருந்தவமோ தொல்குலத்தவர்புரிதவமோ ஆகுமிவ்வாழ்வென்றுரைத்தனனவனு மாகுமாறவனுடனுரைப்பான். |
(இ -ள்.) அரசன் - சந்தனு, பாகனை - (தன்னுடைய) தேர்ப்பாகனை, குறிப்பினால் ஏவ - சாடைகாட்டி (மணம்பேசுமாறு) தூண்ட, பாகனும்-, பரதவர் பதியை- வலைஞர் தலைவனை, ஓகையோடு - மிக்க மகிழ்ச்சியோடு, இருத்தி - இருக்கச்செய்து,- 'உலகு உடைநாயகன் - உலகுக்குத் தலைவனாகிய சந்தனுராசன், நின்னுழை - உன்னிடத்து, வதுவைநயந்தான் - மணத்தை விரும்பினான் [உன்மகளைமணந்துகொள்ளுமாறு எம்முடைய சந்தனு மன்னவன் விரும்பியுள்ளான்]: இ வாழ்வு - இங்கனம் (அரசன் வதுவைவிரும்பிய) இந்த வாழ்ச்சி, தோகை செய்தவம் ஓ - (உன்னுடைய மகளான) மயில்போலுஞ் சாயலையுடையாள் செய்துள்ளதவப்பயனாலோ, நின் பெருந்தவம் ஓ - நீ செய்துள்ள மிக்கதவத்தினாலோ, தொல்குலத்தவர் புரி தவம் ஓ - பழமையான பரதகுலத்தவர்செய்த தவத்தினாலோ, ஆகும் -உண்டானதாகும், ' என்று-, உரைத்தனன் - சொன்னான்: அவன்உம் - அந்தப்பரதவர்பதியும், ஆகும் ஆறு - (அந்த அரசன்நினைவு) முற்றுதற்குரியவகையை, அவனுடன்- அந்தப்பாகனோடு, உரைப்பான் - சொல்பவனானான்; பரதவர்பதிகூறுவதை மேற்செய்யுளிற் காண்க. மன்னவன் பரதவர்பதியிடத்து மகளை நேரேகேட்கநாணிப் பாகன் மூலமாகக் கேட்டானென்க. (101) 94.- என்மகளிடம்பிறக்கும் புத்திரனுக்கு அரசுஅளிப்பதானால் வதுவைக்கு இசைவேனென்று அந்தப்பரதவர்பதி குறிப்பினாலுணர்த்தல். பூருவின்மரபிற்பிறந்தகோமகனென் புன்குலமகள்குயம்பொருந்தல், மேருவுமணுவுநிறுக்குமாறொக்கு மேலினியிவைபுகன்றென்கொல், பாருவகையினாலாளுதற்கிருந்தான் பகீரதிமகனிவள்பயந்த, சீருடைமகன்மற்றென்செய்வானிசைமின் செய்கைதான்றிருவுளங் குறித்தே. |
இரண்டுகவிகள் - ஒருதொடர். (இ -ள்.) ' பூருவின் மரபில் - பூருவின்வமிசத்திலே, பிறந்த - தோன்றிய, கோமகன் - இராசகுமாரன், என் புன்குலம் மகள் குயம் பொருந்தல் - என்னுடையதாழ்மையான குலத்திற்பிறந்தபெண்ணின் தனங்களைத் தழுவுதல் [என் பெண்ணைமணந்துகொள்ளுதல்], மேருஉம் அணுஉம் நிறுக்கும் ஆறுஒக்கும் - மேருவை ஒருதட்டிலும் அணுவை மற்றொருதட்டிலும் வைத்து நிறுக்கின்ற தன்மைக்குச்சமானமாகும்: மேல் இனி இவை புகன்று என் கொல் - இப்போது இவற்றைப்பற்றிப்பேசி என்னபயன்? பகீரதி மகன் - கங்காதேவியின் புத்திரனான தேவவிரதன், பார் -(சந்தனு |