பக்கம் எண் :

6பாரதம்ஆதி பருவம்

     நித்தியமாதலால், வேதம் 'முன்சொல்' எனப்பட்டது. என்சொல்
இழிவானதேயானாலும் வடமொழியிலுள்ள மாப்பெருங்கதை தமிழிலெழுதப்
படுவதென்றகாரணங்கொண்டு, சொல்லப்படும் பொருளின் மேன்மையால்
பொறுத்துப் புலவர்என்மீது அன்பு கொள்ளுவ ரென்று அவையோர்க்கு
அடக்கங் கூறியவாறு.                                     (7)

8.- தாம் பாரதம்பாடக் காரணம்.

முன்னு மாமறை முனிவருந் தேவரும் பிறரும்
பன்னு மாமொழிப் பாரதப் பெருமையும் பாரேன்
மன்னு மாதவன் சரிதமு மிடையிடை வழங்கும்
என்னு மாசையால் யானுமீ தியம்புதற் கிசைந்தேன்.

     (இ - ள்.) முன்னும் மாமறை - நினைத்து ஓதப்படும் சிறந்த வேதங்களில்
வல்ல,முனிவர்உம் தேவர்உம் பிறர்உம் - முனிவர்களும் தேவர்களும்
மற்றையோரும்.பன்னும் - ஆராய்கின்ற, மா மொழி - சிறந்த மொழிகளைக்
கொண்ட, பாரதம்பெருமைஉம் - பாரதத்தின் சிறப்பையும், பாரேன் -
ஆலோசிக்கமாட்டேன்: 'மன்னும் -பெருமை பொருந்திய, மா தவன் - திருமகள்
கொழுநனான திருமாலின்[ஸ்ரீக்ருஷ்ணபகவானின்], சரிதம் உம் - சரித்திரமும்,
இடைஇடை - இந்நூலின்நடுநடுவே, வழங்கும் - வழங்காநிற்கும்', என்னும் -
என்கின்ற, ஆசையால் -விருப்பத்தினால், யான்உம்- (ஏற்ற திறமையில்லாத)
நானும், ஈது - இந்தச் சரிதத்தை,இயம்புதற்கு - (தமிழ்ப்பாடலாற்) சொல்லுதற்கு,
இசைந்தேன் - சம்மதித்தேன்; (எ - று.)

     "நாராயணகதாமிமாம்" என்றார், வேதவியாசரும். ஆசை பற்றிக்
கூறியதாதலால்,என் குற்றம் பொறுக்கத்தக்கது என்ற அவையடக்கமும் இதில்
தோன்றும்.                                               (8)         

-----

முதலாவது

ஆதிபருவம்

     பாரதம் அந்தந்தப் பாகத்தின் விஷயத்தைக் குறிக்குஞ் சொற்களால்
ஆதிபருவம், சபாபருவம், ஆரணியபருவம், விராடபருவம், உத்தியோகபருவம்,
பீஷ்மபருவம், துரோணபருவம், கர்ணபருவம், சல்லியபருவம்,
ஸௌப்திகபருவம்,ஸ்திரீபருவம், சாந்திபருவம், ஆநுசாஸநிகபருவம்,
அசுவமேதபருவம், ஆசிரமவாசபருவம், மௌசலபருவம், மகாபிரஸ்தாநபருவம்,
ஸ்வர்க்காரோகணபருவம் எனப் பெயர்பெற்றபதினெட்டுப் பருவங்கள்
அடங்கியுள்ளது. அவற்றுள் ஆதிபர்வம் என்ற வடமொழித்தொடருக்கு -
(கதாநாயகர்களான பாண்டவர்கள் அவர்களுக்குப் பங்காளிகளான
துரியோதனாதியர்கள் என்னும் இவர்களின்) முதல் வரலாற்றைக் கூறுவதாகிய
பாகமென்று பொருள். இந்நூலின் பருவம் பதினெட்டனுள் முதலாவது
பருவமென்று