யுடைய சிறந்த இருடியரும், தேவர்உம் - தேவர்களும், ககனம் தங்கும் மா மங்கையர்பலர்உம் - வானுலகத்தில் வாழ்கின்ற சிறந்த தேவ மங்கையர் பலரும்,- அவனியில் -பூமியிலே, நிருபர் - அரசர், வெருவரும் - அஞ்சுகின்ற, திறலான் - மனவலிமைபற்றிவந்த, அரிய சொல் - அருமையான அந்தவீடுமனென்ற சொல்லின், பொருள்நிலை -அர்த்தத்தின் நிலைமையை, அறிந்து - தெரிந்து, - உவகையோடு - மகிழ்ச்சியுடனே,இவனுக்கு ஏற்ற - இவனுக்குத் தக்க, பேர் - நாமதேயமாக, (வீடுமன் என்பதை),உரைசெய்து - சொல்லி, ஒளிகெழு - ஒளிபெறுதற்குக் காரணமான, பூமழை மலர்மாரியையும், பொழிந்தார்-; நிருபர்வெருவருந்திறல் - தேகவலியேயன்றி மனவலியையும் காட்டும். வீடுமனென்ற சொல் இவனுக்குவந்தது மனத்திறலினாலாகுமென்பார் 'திறலானரியசொல்' என்றார்; இங்கே, ஆன் - மூன்றுனுருபு. திறலான் - திறலையுடையவனென,ஆண்பால்விகுதி யென்பாருமுளர். உரைசெய்த பேர், 'பீஷ்மன்' என்பது: இது -பயங்கரமானவனென்று பொருள்படும்: பயங்கரமான விரதத்தை மேற் கொண்டமனவலிமைபற்றியது, இந்த வீடுமனென்ற பெயரென்க. இந்தவீடுமன் விரதங்கொண்டதுதாசபூபதியின் முன்னிலையிலேயாகவும், அதனைக் கேள்வியுற்ற சபையோர்முதலியோர் வீடுமனென்ற பெயரை இவனுக்குத் தந்து மலர்மாரியும் பொழிந்தனரென்பதாம். (107) 100.- வீடுமனென்றபேரைப்பெற்ற தேவவிரதன் தாசபூபதியை மகளுடனேயழைத்துக் கொண்டு, அரண்மனையை யடைதல். மெய்ம்மகிழ்கடவுட்பூமழையுடனே வீடுமனெனும்பெயரெய்திக், கைம்மகிழ்வரிவிற்றாசபூபதியுங் கன்னிகைகாளியுந்தானும், மொய்ம்மணங்கமழுமன்றல்வேனிலின்வாய் முனிவருங்கிளைஞருஞ்சூழச், செய்ம்மகிழ்பழனக்குருநிலமுடையான் றிருமனைவிரைவுடன்சேர்ந்தான். |
(இ-ள்.) மெய் மகிழ் - உண்மையான மகிழ்ச்சியைக்கொண்ட, கடவுள்- தேவர்களின், பூமழையுடனே -, வீடுமன் எனும் பெயர் - வீடுமனென்ற பெயரையும்,எய்தி - அடைந்து, (தேவவிரதன்),- மகிழ் வரிவில் கை தாசபூபதிஉம் கன்னிகைகாளிஉம் தான்உம் - மகிழ்ச்சி யடைந்தவனான கட்டமைந்த வில்லைக் கையிலேந்தியவலைஞர் தலைவனும் (அவனுடைய) கன்னிகையான காளியும் தானுமாக,- மொய்மணம் கமழும்மன்றல் வேனிலின்வாய் - நெருங்கியமணம் வீசப்பெற்றமணஞ்செய்தற்குஉரிய வசந்தகாலத்தில், முனிவர்உம் கிளைஞர்உம் சூழ -முனிவர்களும் சுற்றத்தார்களும் சூழ்ந்துவர, செய் மகிழ் பழனம் குருநிலம் உடையான்திரு மனை - வயலைக்கண்டு மகிழ்வதற்குக் காரணமான நிலவள நீர்வளமுள்ளகுருநிலத்தையுடையவனான சந்தனு மன்னவனுடைய அழகிய இல்லத்தை, விரைவுடன்சேர்ந்தான்-; (எ -று.) பூபதியும்காளியும் தானும் .... சேர்ந்தான் - சிறப்பினால் உயர்திணையாண்பாலான்முடிந்த பால்வழுவமைதி. விவாகத்துக்கு வசந்தருதுவே சிறப்பாகக் கூறப்பட்டுள்ளதனால், அதனை 'மன்றல்வே |