பக்கம் எண் :

குருகுலச் சருக்கம்7

பொருள் கொள்ளலாமாயினும், மற்றைப் பருவங்களிற்போலவே, கதாநாயகரின்
சரித்திரத்தைப்பற்றிப் பெயர் வைத்தாரென்று கொள்ளலே நேர். பாண்டவ
துரியோதனாதியர்கள் பிறந்த சந்திர குலத்தின் சரித்திரமும், இவர்களுடைய
பிறப்புவரலாறும், இளம் பருவத்தில் நிகழ்ந்த செய்திகளும் இப்பருவத்திற்
கூறப்படுகின்றன. பருவம்= பர்வம்: கணு; கரும்பு மூங்கில் முதலியவற்றிற்கு ஏக
தேசமாகிய (ஏகதேசம் - ஒரு பகுதி) கணுப்போல நூலுக்கு ஏகதேசமாகிய
உறுப்பை 'பருவம்' என்பது - உவமவாகுபெயர். "இணைந்தியல் காலை" என்ற
சூத்திரத்து 'ரவ்வழி உவ்வுமாம்' என்றதனால் பர்வம் பருவமென ரகரத்திற்குப்
பின் உகரம்வந்தது: இந்த ஆதி பருவம், குருகுலச்சருக்கம் முதலிய எட்டுச்
சருக்கங்களையுடையது: காண்டவதகனச் சருக்கத்தின் முதற்பத்தொன்பது
பாடல்களைவசந்தகாலச் சருக்கம் எனத் தனியே ஒன்றாக்கி, ஒன்பது
சருக்கங்களை யுடையதென்பாரு முளர். வியாசமாமுனிவர் தாம் பாரதத்துக்கு
இட்ட பருவப் பெயர்களையேஇந்நூலாசிரியரும் இட்டுள்ளார்.

முதலாவது
குருகுலச்சருக்கம்

     குருகுலத்தைப்பற்றிய சருக்கம் என்று விரியும். குரு என்பவன் - சந்திர
குலத்திற்பிரசித்திபெற்ற ஓரரசன். இவன் ஸரஸ்வதீ த்ருஷத்வதீயென்ற நதிகளின்
இடையிலேஒரு புண்ய க்ஷேத்திரத்தை யேற்படுத்தினான்: அந்த
க்ஷேத்திரத்தில்தான் பாரத யுத்தம்நடந்தது. சருக்கம் - ஸர்க்கமென்ற
வடசொல்லின் திரிபு: முடிபு அல்லது படைப்புஎன்று பொருள்: அது,
சங்கேதத்தாற் பெரியவகுப்பினுட்பட்ட சிறிய பாகத்தைக்குறிக்கும்.

1.- சந்திரகுலத்தரசன் கதையைக் கூறுவேனெனல்.

எங்கண் மாதவ னிதயமா மலர்வரு முதயத்
திங்கண் மாமர பினிற்பிறந் திசையுடன் சிறந்தோர்
அங்கண் மாநிலத் தரசர்பல் கோடியவ் வரசர்
தங்கண் மாக்கதை யானறி யளவையிற் சமைக்கேன்.

     (இ - ள்.) எங்கள் மா தவன் - எமது இலக்குமிக்குத் தலைவனாகிய
திருமாலின்,இதயம் - நெஞ்சமாகிய, மா மலர் - சிறந்த தாமரை மலரினின்று,
வரும் - தோன்றிய,உதயம் - தோற்றத்தையுடைய, திங்கள் - சந்திரனுடைய,
மாமரபினில் - சிறந்தவமிசத்திலே, பிறந்து -, அம் கண் மாநிலத்து - அழகிய
இடம் பொருந்திய (இந்தப்)பெரு நிலத்திலே, இசையுடன் சிறந்தோர் -
கீர்த்தியோடு மேம்பட்டவராகிய, அரசர்-,பல்கோடி - பலகோடிக்
கணக்கினராவர்: அ அரசர் தங்கள் மா கதை -அவ்வரசர்களின் சிறந்த
கதையை, யான் அறி அளவையின் - யான் அறிந்தஅளவினால், சமைக்கேன் -
அமைத்துக் கூறவேன்; (எ - று.)

     இதனால், சந்திரகுலத்துத்தோன்றிய அரசர் பலரின் சிறந்த கதையைப்
பாரதமென்று பேர்கொண்ட இந்நூன்முகத்தாற்