பக்கம் எண் :

70பாரதம்ஆதி பருவம்

தோன்றுகின்ற, உபாயம் அது என்ன - தன்மைபோல,- வில் படை திறல் -
வில்லென்றஆயுதத்தின் வலிமையையுடைய, வீடுமன் - வீடுமனுடைய,
வாய்மையால் -மொழியினால், பூபதி - விசித்திரிவீரியராசன், பொற்புஉற -
அழகுபொருந்த, புவிஆளும் நாள் - அரசாட்சி புரியுங்காலத்தில்,- (எ -று.)-
"ஆள்விட" என்று தொடரும்.

     "அநேநஜீவேந ஆத்மநாநுப்ரவிச்யநாமரூபேவ்யாகரவாணி [இந்த
ஜீவன்மூலமாகநான் எதிலும் உட்புகுந்து நாமரூபங்களை யுண்டாக்கக் கடவேன்]"
என்றுபரம்பொருள் சங்கற்பித்துக் கொள்ள அதனால் இந்தச் சராசரம்
தொழிற்படுதல்போலவே, வீடுமன் மொழிப்படியே விசித்திரவீரியன் புவியை
அரசாட்சிபுரிந்தானென்பதாம். சிற்பொருட்பரமான பொருட்கு என்ற பாடத்தில்,
ஞானப்பொருளாகிய பரம்பொருளுக்கு என்று உரைத்து, உற்பவிக்கும் என்பதற்கு
எழுவாய் வருவிக்க.                                            (124)

117.- காசிமன்னவனுடைய கன்னியரின் சுயம்வரத்துக்கு மன்னவர்
திரளுதல்.

காசிமன்னவன் கன்னியர்மூவரூம்
தேசின்மிக்கவர்ச் சேர்வரென்றாள்விட
மாசிறொல்குல மன்னவரீண்டினார்
மூசிவண்டின மொய்ப்பதுபோலவே.

     (இ-ள்.) காசிமன்னவன்-, 'கன்னியர் மூவர்உம் - (தன்) புத்திரியரான
மூன்றுகன்னிகைகளும், தேசில் மிக்கவர்ச்சேர்வர் - வலிமையினால்
மேம்பட்டவரைக் (க்கணவராக) அடைவர்,' என்று-, ஆள் விட - தூதுவரை
(எங்கும்) அனுப்ப,- வண்டுஇனம் மூசி மொய்ப்பதுபோல- வண்டுகளின் கூட்டம்
நெருங்கி மொய்த்துக்கொள்ளுவது போல, (அக்கன்னிகையரின் மணமாலையை
வேண்டி), மாசுஇல் தொல்குலம் மன்னவர் - குற்றமற்ற பழமையான குலத்துத்
தோன்றிய அரசர்கள், ஈண்டினார்- (அந்தக் காசிநகரில்) நெருங்கினார்கள்; (125)

118.- அந்தக்கன்னியரைத் தன்தம்பிக்கு மணம்புரிவிக்கு
மாறு வீடுமன் ஆண்டுச் செல்லுதல்.

வரித்தமன்னர் மறங்கெடவன்பினால்
திரித்துமெம்பியைச் சேர்த்துவல்யானெனாத்
தரித்தவில்லொடுந் தன்னிளவேந்தொடும்
வரித்தவெண்குடை வீடுமனேகினான்.

     (இ -ள்.) 'யான்-, - வரித்த - (மங்கையரால்) விரும்பப்பட்ட, மன்னர் -
அரசரின்,மறம் - வலிமை, கெட - அழியுமாறு, வன்பினால் - (என்)
வலிமையினால், திரித்துஉம்- (அவர்களை) ஓடச்செய்தாவது, எம்பியை -
என்தம்பியை, சேர்த்துவல் -(அக்கன்னியரைச்) சேருமாறு செய்வேன், ' எனா -
என்று கருதி,- விரித்த வெண்குடை வீடுமன் - மலர்த்திய வெண்கொற்றக்
குடையையுடைய வீடுமன்,- தரித்தவில்லொடுஉம் - தாங்கிய வில்லுடனும், தன்
இளவேந்தொடுஉம் - தன் (தம்பியாகிய)இளைஞனான அரசனொடும், ஏகினான் -
சென்றான்;