வணங்காநிற்க,- வெம் சராசனம் வீரன்உம் தம்பிஉம் - கொடியவிற் படையில் வல்லவீரனாகிய வீடுமனும் (அவனது) தம்பியாகிய விசித்திரவீரியனும், மஞ்சம் ஏறி -(அரசர்கள் தங்குமாறு அமைக்கப்பட்டுள்ள)கட்டிலின்மீதுஏறி, மணி தவிசு ஏறினார் -(அம்மஞ்சத்திலிட்டிருந்த) அழகிய ஆசனத்தின்மேலே யேறினார்கள்; (எ-று.)- 'மதிகண்டென ' என்ற உவமைக்கேற்ப 'வெஞ்சராசனவீரனுமேகியே' என்றாற்போன்றபாடமே சிறத்தல் காண்க. (128) 121.- வீடுமன் மஞ்சத்தவிசிலிருப்பது கண்டு, அரசக் காளையர் மனங் கன்றுதல். குருத்தலந்தனிற் கூறியவஞ்சினம் ஒருத்தரன் றறிவாருலகோர்பலர் விருத்தன்வந்தனன் மேலினியேதிவன் கருத்தெனாமனங் காளையர்கன்றினார். |
(இ -ள்.) குருத்தலந்தனில் - குருக்ஷேத்திரத்திலே, கூறிய - (வீடுமன்) சொன்ன,வஞ்சினம் - (தான் மணப்பதில்லையென்ற) சபதமொழியை, அறிவார் - அறிபவர்,ஒருத்தர் அன்று - ஒருவர் அல்லர்: உலகோர் பலர் - உலகத்தவர் பலரும்(அறிபவரே): (அப்படியிருக்கவும்), விருத்தன் - கிழவனாகிய வீடுமன், வந்தனன் -(மணமாலைபெற வேண்டிஇவ்விடம்) வந்துள்ளான்: இனிமேல் இவன் கருத்துஏது -இனிமேலே இவன்எண்ணம் என்னவோ!, எனா - என்று, காளையர் -காளைப்பருவமுள்ள (வராய்ச் சுயம்வர மணமாலைபெறும் பொருட்டு வந்த) அரசகுமாரர்கள், மனம் கன்றினார் - மனம் வாட்டமுற்றார்கள்; மணப்பதில்லையென்று முன்னமே வஞ்சினங்கூறிக் கிழவனுமாய்விட்ட இவன் இப்போது கன்னியர் மணமாலைசூட்டும் இவ்விடத்தில் வந்ததன் நோக்கமென்னையோ? ' என்று அவன் வந்த காரணந்தெரியாமையால் மனம்வாடினர்அரசகுமார ரென்பதாம். இதனாலும், தம்பியுடன் வீடுமன் சென்றில னென்பது குறிப்பிக்கப்படுதல் காண்க. யமுனைக்கரையில் வசித்த தாசபூபதியின் மனந் தெளியஅங்கு அவையத்தோர் கேட்குமாறு மணஞ்செய்வதில்லை யென்று சபதஞ்செய்ததாகவந்துள்ளதனாலும், இங்கு 'குருத்தலந்தனிற் கூறியவஞ்சினம்' என்றுவருதலாலும்அவன் சபதஞ்செய்த அந்த இடமும் குருக்ஷேத்திரத்திற் சேர்ந்ததென்றுகொள்ளவேணும். முதனூலில் "வீடுமன் மணமாலைபெறுமிடத்து வந்திருந்ததுகண்டசபையிலுள்ள அரசகுமாரர் 'கங்கா நதியின் புத்திரனான இந்தக்கிழவன்பிரதிஜ்ஞைதவற இங்கு ஏன் வந்தான்?' என்று சொல்பவர்களாய்க் கைகொட்டிச்சிரித்தார்கள்" என்று உள்ளது. (129) 122.- கன்னியர்மூவரும் வர, செவிலியர் சுயம்வரமண்டபத்து வந்திருந்த மன்னவரைக் காட்டி இன்னாரின்னாரென்று அறிவித்தல். இருந்தமன்ன ரிவரிவரென்றுளம் பொருந்தமற்றவர் பொற்புடைத்தேசெலாம் திருந்தநின்று செவிலியர்கூறவே முருந்தவாணகை மூவருந்தோன்றினார். |
|