(இ-ள்.) செவிலியர் - செவிலித்தாய்மார், நின்று- (எதிரே) நின்று,- இருந்தமன்னர் - (சுயம்வரத்தின்பொருட்டு அந்தமண்டபத்து) வந்திருந்த அரசர்களை, 'இவர்இவர் - இவ்வரசர் இத்தன்மையர்,' என்று-, உளம் பொருந்த- மனத்திற்படுமாறு, அவர் பொற்பு உடை தேசு எலாம் - அம்மன்னவரின் அழகுபொருந்தியபராக்கிரமங்களையெல்லாம், திருந்த கூற - செவ்வனே கூறும்படி, முருந்தம் வாள்நகைமூவர்உம் - மயிலிறகினடிபோன்றஒளிபொருந்திய பற்களையுடைய அந்தக்காசிமன்னவன்கன்னியர்மூவரும், தோன்றினார் - (அம்மண்டபத்து) வந்தார்கள்; (எ-று.)
மணமாலைசூட்டவருங் கன்னிமார்க்கு அரசருடையசரித்திரங் களையுணர்ந்தமகளிர் இவர் இன்னரென்றுகூறுதல், மரபு. முருந்தம், அம் - சாரியை.முருந்து அ எனவும் பிரிக்கலாம். மற்று - அசை. 123.- மாலைசூட்டவந்தகன்னியர் வீடுமன்நிலையைக்கண்டு ஐயுறுதல். கையின்மாலை யிவற்கெனக்கன்னியர் வெய்யநெஞ்சொடு மின்னெனவந்தவர் வையமன்னன் வயநிலைநோக்கியே ஐயமுற்றன ரன்புறுகாதலார். |
(இ-ள்.) 'கையில் மாலை - கையிலுள்ளமாலையானது, இவற்கு- இந்த மன்னவனுக்கு (ச் சூட்டுவது), என - என்று, வெய்ய - விரும்பிய, நெஞ்சொடு - மனத்துடனே, மின் என வந்தவர் கன்னியர் - மின்னல் போல ஒல்கியொசியுந் தன்மையுடன் வந்த அந்தக் கன்னியர், அன்பு உறுகாதலார் - அன்புற்ற காதலையுடையராக (இருந்தும்), வையம் மன்னன் வயநிலை நோக்கி - உலகத்துக்குஅரசனாகிய வீடுமனது வயசின் நிலைமையைநோக்கி, ஐயம் உற்றனர் -(கிழவனாயிருக்கிற இவனுக்கு மாலைசூட்டுவது எப்படி? என்று) சங்கைகொண்டுபின்வாங்கினார்கள்; (எ-று.) செவிலியர் மன்னரைப்பற்றிக் கூறியதுகேட்ட கன்னிமார், வீடுமனுக்கு மாலைசூட்டுவது என்று விரும்பிவந்தவராய், அவன் கிழவனாயிருப்பது கண்டு பின்வாங்கின ரென்றவாறு. "ஆத்மாநம் ஆலோக்யஜராஸமேதம் - அந்யத்ர யாந்தீ;" என்று பாலபாரதத்து வருவதுங் காண்க: வியாசபாரதத்தும் இவ்வாறே வருகின்றது.வயஸ் நிலை என்ற இரண்டுசொற்கள் சேர்ந்து வயநிலையென்று திரிந்துவந்ததென்க.இனி இதனைத் தென்மொழித் தொடராகக் கொண்டுவீரநிலையென்றுபொருளுரைத்து, தாம் எவனோ ஒரு ராஜகுமாரனுக்கு மாலைசூட்டலாமென்றுஉத்தேசித்து விருப்புள்ள நெஞ்சோடுவந்த அக்கன்னிமார், இடையிலேவீரநிலையோடுநிற்கும் வீடுமனைக்கண்டு 'நாம் பிறனுக்கு மாலைசூட்டினால் இவன்என்ன செய்வானோ? என்று ஐயமுற்றா ரென்று இச் செய்யுளுக்கு வலிந்து பொருள்கூறுவர், பலர். (131) 124.- அப்போது மன்னவர்பார்த்துநிற்க, அந்தக்கன்னி யரைத் தேர்மீது ஏற்றித் தம்பியோடு வீடுமன் தன்நகர் நோக்கிச் செல்லுதல். ஏனைவேந்த ரெதிரிவரைப்பெருந் தானைசூழ்மணிச் சந்தனத்தேற்றியே |
|