(இ-ள்.) சென்ற அம்பையை - (தன்னிடம்) வந்துசேர்ந்த அம்பை யென்பாளை,தீ மதி சாலுவன் - கெடுமதியையுடைய சாலுவனென்பவன், 'வென்று தெவ்வர் கவர்ந்தநின் - ஜயித்துப் பகைவர் கவர்ந்துபோன நினது, மெய் - உடலை, தொடேன் -தீண்டேன்,' என்று-, இகப்ப - (அங்கீகரியாது) புறக்கணிக்க,- இவனுழை - இந்தவீடுமனிடத்தே, மீளஉம் - மறுபடியும், மன்றல் அம்கோதையாள் - நறுமணமுள்ளஅழகிய மாலையையணிந்த அந்த அம்பை, மன்றல் வேண்டினள் -மணஞ்செய்துகொள்ள இரந்தாள்; (எ-று.)- கற்பால் வந்தவளைக் கடிதலால் 'தீமதிச்சாலுவன்' என்றது. (137) 130.- வீடுமன் மணம்மறுக்க, அம்பை சங்கையோடு தன் தந்தையைச் சார்தல். கங்கை மைந்தன் கடிமணங் காதல்கூர் மங்கை தன்னை மறுத்தபின் மங்கையும் செங்க ணீரெழச் சிந்தைசெந் தீயெழச் சங்கை யோடுதன் றாதையை நண்ணினாள். |
(இ-ள்.) காதல்கூர்- (விவாகஞ்செய்துகொள்ள வேணுமென்று) விருப்பம் மிகுந்த,மங்கைதன்னை - (அம்பையென்ற) பெண்ணைநோக்கி, கங்கைமைந்தன் - கங்கையின்புத்திரனான வீடுமன், கடி மணம்மறுத்த பின் - கடியென்று ஒருபேர்கொண்ட மணத்தை (உடன்படாது) மறுத்திட்டபின்பு,- மங்கைஉம் - அந்த அம்பையும்,- செங் கண் நீர் எழ - (வெகுளியாற்) சிவந்த (தன்) கண்களினின்று கண்ணீர்பெருகவும், சிந்தை செந் தீ எழ - (தன்) மனத்திலே வெகுளித்தீச் சொலிக்கவும், சங்கையோடு - (என்னசொல்லுவானோ) என்ற சங்கையுடனே, தன் தாதையை - தன் தகப்பனை, நண்ணினாள் - சேர்ந்தாள்; 'அம்பை வீடுமனால் நிராகரிக்கப்பட்டபின்பு தவத்தில் மன மூன்றியவளாய்க் காட்டிற்குச்சென்றாள்' என்ற இவ்வளவே பால பாரதத்திலுள்ளது: அன்னாள் சிகண்டியான சரித்திரம் அங்குஇல்லை. வேறு. 131.- அம்பை நிகழ்ந்தவற்றைத் தந்தையிடஞ் சொல்ல, அன்னான் மணந்துகொள்ளுமாறு வீடுமனிடத்துத் தூதரை யேவுதல். தாதை தாளினில் விழுந்து சந்தனுவின் மைந்த னின்னலுரை தந்ததும், கோதை யாலுறவு கொண்டு கைதரல் குறித்த கோமகன் மறுத்ததும், பேதை கூறமன நொந்தி ரங்கியவன் மிக்க நண்பினொடு பின்னையும், தூதை யேவிமண முற்றி ரந்தனன்வி சும்பு லாவுநதி சுதனையே. |
(இ-ள்.) (நண்ணிய அம்பை), - தாதை தாளினில் விழுந்து - (தன்) தந்தையின்பாதங்களிலே விழுந்து, சந்தனுவின் மைந்தன்- சந்தனுவின் குமாரனான வீடுமன்,இன்னல் உரை - துன்பந்தரும் வார்த்தைகளை, தந்ததுஉம் - சொன்னதையும்,கோதையால் - மணமாலைமூலமாக, உறவுகொண்டு கைதரல் - சம்பந்தஞ்செய்துகொண்டு பாணிக்கிரகணஞ்செய்தலை, குறித்த - எண்ணிய, கோமகன்-சாலுவ மகாராசன், மறுத்ததுஉம் - மணஞ்செய்துகொள்ள |