கூறுவே னென்பதாம். "சந்த்ரமா மநஸோ ஜாத:" என்று சந்திரன் திருமாலின் மனத்தினின்று தோன்றியவனெனக் கூறியிருத்தல் காண்க. தமது வழிபடுகடவுளிடத்துக்கொண்ட ஈடுபாடு தோன்ற, 'எங்கண் மாதவன்' என்றார். மாதவன் - மா -இலக்குமிக்கு, தவன் - கணவனென்று உறுப்புப்பொருள். கோடி - இங்குஎண்ணலளவை யாகுபெயர்: பெயர்ப்பயனிலை. (9) 2.- இதுமுதல் நான்கு கவிகள் - சந்திரன் சிறப்பைத் தெரிவிக்கும். பொருந்தவானுறைநாள்களைநாடொறும்புணர்வோன் அருந்தவானவர்க்காரமுதன்புடனளிப்போன் திருந்தவானவர்க்கரியவன்செஞ்சடைமுடிமேல் இருந்தவானவன்பெருமையையார்கொலோவிசைப்பார். |
(இ - ள்.) வான் - ஆகாயத்திலே, பொருந்த-, உறை - தங்குகின்ற, நாள்களை -(அசுவினி முதலிய) நட்சத்திரங்களை, நாள் தொறு உம் - தினந்தோறும், புணர்வோன்- சேர்பவனும்,- வானவர்க்கு - தேவர்கட்கு, அருந்த - உண்ணுமாறு, ஆர் அமுது -அருமையான அமிருதத்தை, அன்புடன் - அன்போடு, அளிப்போன் - தருபவனுமாகி,திருந்து அ வானவர்க்கு அரியவன் - செம்மை பெற்ற அந்தத் தேவர்கட்குள்ளேஅருமைப்பாட்டை யுடையவனாகிய சிவபெருமானது, செஞ்சடை முடிமேல் -செந்நிறமுள்ள ஜடையைக்கொண்ட திருமுடிமேலே, இருந்த - தங்கியிருக்குந்தன்மைவாய்ந்த, வானவன் - கடவுட் சந்திரனது, பெருமையை-, இசைப்பார் - அறிந்துசொல்ல வல்லவர், யார்கொல்ஓ - யாவர் கொலோ? (எ - று.) சந்திரன் அசுவினி முதலிய இருபத்தேழு நட்சத்திரங்களில் முறையே எந்த எந்தநட்சத்திரத்துடனிருக்கின்றானோ, அந்தந்த நட்சத்திரநாளாக அத்தினம் வழங்கப்படுவதுகாண்க: சந்திரன் தன்னுடைய அமுதகலைகளை இரவி முதலிய தேவர்களுக்குத் தினம்ஒரு கலைவீதம் கொடுக்கின்றானென்பதும், அதனால்தான் தேய்பிறையில் தினமானம்ஒவ்வொரு கலை குறைந்து வருகின்ற தென்பதும், சிவபெருமானுடைய சடைமுடிமேல்பிறைச் சந்திரன் எப்போதும் தங்கிநிற்கின்றானென்பதும் நூற்கொள்கை. சிவபெருமான்முடிமேல் தங்குதல் தன் கலைகளைத் தேவர்க்கு உணவாகக் கொடுத்தல் முதலியமேம்பாடு உடைமையால், சந்திரன் பெருமையை முழுதும் அறிந்து இசைக்கமுடியாதென்றார். திருந்த என்று எடுத்து, திருந்த இருந்த என்றுஇயைப்பினுமாம். (10) 3. | மண்டலம்பயிலுரகர்பேருயிர்ப்பினான்மயங்கி மண்டலம்பொரவருந்தியபெருந்துயர்மாற மண்டலந்தனைநிழலெனுமரபினாற்றனது மண்டலம்பொழியமிழ்தின்மெய்குளிரவேவைத்தோன். |
(இ-ள்.) (அன்றியும் அந்தச் சந்திரன்), - மண்டலம் பயில் - மண்டலகதியாகச்செல்லுகின்ற, உரகர் - பாம்புகளின், பேர்உயிர்ப்பினால் - பெருமூச்சினோடு, மயங்கி - கலந்து, மண்டு அலம் பொர- |