(இ-ள்.) களம் புகுந்தவரை மீள ஏகுதல் கொடாத கார்முகம் வினோத - போர்க்களத்தில் புகுந்தாரை மீண்டுபோகுமாறு இடங்கொடுக்காத [எதிர்த்தாரைக்கொன்றேதீர்க்கின்ற] விற்றொழில் வினோதனே! கேள்-: உளம் புகுந்துஇனிது இருக்கும் நல் கடவுள்- (என்) மனத்திற்புகுந்து வாழுஞ் சிறந்த கடவுள்,உன்னை அன்றி இலை- உண்மை ஏ - (இது) சத்தியமேயாம்: வளம் புனைந்தஅநுராகம் போகம் மிகு மாதர் மங்கையர்பொருட்டினால் - வளப்பம்பொருந்திய [மிக்க]ஆசையினால் நிகழும் இன்பநுகர்ச்சிக்கு உரிய சிறந்த அழகிய மகளிரின்பொருட்டாக,விளம்பும் - சொல்லுகின்ற, இந்தமொழி - இந்தப்பேச்சை, ஒழிக - தவிர்க: என்றன்உயிர் வேண்டும் என்னின்உம் - என்னுடைய உயிரே வேண்டுமென்றா யெனினும்,வழங்குவேன் - தந்திடுவேன்; (எ -று.) குருபேச்சுத் தட்டக்கூடாது: எனினும், விரதமும் தவிரக்கூடாது: ஆதலால், விரதபங்கஞ் செய்யாமல் நான் இருக்க நீ எது கேட்டாலுந் தருவேனென்றனன் வீடுமனென்க. களம்... வினோத - நீ போர்புரிவாயானாலும் நான் அஞ்சி என்கொள்கையைவிடே னென்ற குறிப்பினது. மாதர்-அழகு. (147) 140.- வீடுமன் மறுத்துப்பேசியது கேட்டு, பரசுராமன் பொருமாறு தேர்மீது ஏறுதல். மறுத்திவன்புகலவீரியன்புயமொ ராயிரந்துணிசெய்மழுவினான், வெறுத்தனந்தரமெழுந்திருந்துகரை யழியும்வேலைநிகர்வெகுளியன், கறுத்தநெஞ்சினன்வெளுத்தமேனிய னுறச்சிவந்தவிருகண்ணினன், பொறுத்தவில்லினன்விரைந்துதேர்மிசை புகுந்தனன்பெரிது போர்செய்வான். |
(இ-ள்) இவன் - இந்தவீடுமன், மறுத்து புகல - (குருவின் வாசகத்தை) மறுத்துச்சொல்ல, வீரியன் புயம் ஒர் ஆயிரம் துணி செய் மழுவினான் - கார்த்தவீரியனுடைய ஓராயிரம் புஜத்தைத் துண்டித்த மழுப்படையை யுடையனான பரசுராமன், அனந்தரம் - பிறகு, வெறுத்து- (வீடுமனிடத்தில்) வெறுப்புக்கொண்டு, எழுந்திருந்து-, கரை அழியும் வேலை நிகர் வெகுளியன் - கரைமீறிச் செல்லுங் கடலையொத்த சினத்தையுடையவனாகி,- கறுத்த நெஞ்சினன் - கோபங்கொண்ட நெஞ்சையுடையவனும், வெளுத்த மேனியன்- (அதனால்) வெண்மையடைந்த உடலையுடையவனும், உற சிவந்த இரு கண்ணினன்- மிகச் சிவந்த இரண்டு கண்களையுடையவனும், பொறுத்த வில்லினன் - (கையிற்) கொண்ட வில்லையுடையவனுமாகி,- பெரிது போர் செய்வான்- பெரும்போர் செய்யும் எண்ணங்கொண்டு, விரைந்து-, தேர்மிசை புகுந்தனன் - தேரின் மீது ஏறினான்; (எ-று.) சுரையழியும் வேலைநிகர் வெகுளியன் - அளவிடமுடியாத கோபத்தை யடைந்தவன். வெகுளிச்சுவை இச்செய்யுளிற் காணத்தக்கது. வீரியன் - கார்த்தவீரிய னென்பதன் நாமைகதேசம். மூன்றாமடியில் முரண்தொடை காண்க. கார்த்தவீரியன் தன்பிதாவைக் கொன்றதனால் அவனைப் பரசுராமன் கொன்றானென்பது, சரிதம். (148) |